மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்காக என்னை அழைத்திருந்தார்.
என்னை கல்லூரிக்குள் வரவேற்று பிரின்சிபாலிடம் அறிமுகம் செய்து விட்டு, 'உரையாடல் ஆரம்பிக்கிறதுக்குள்ள ஒரு சுக்கு காபி சாப்டலாம் வாங்க. கண்ணம்மா கேன்டீனுக்கு போலாம்' என்றார்.
பெயர் ஈர்க்கவே, சென்றேன்.
சிறு தானிய முறுக்கு, லட்டு, மர விளையாட்டு பொம்மைகள், 'Never eat anything that your Grandma wouldn't have approved!' என்ற banner... இது அத்தனையும் ஒரு பெரிய பொறியியல் கல்லூரி நிறுவன வளாகத்துள்!
கடை நடத்தும் இளைஞரோடு அறிமுகம் ஆயிற்று.
சந்துரு.
'ஏன் கண்ணம்மா?' என்றேன்.
"பாரதியார் பிடிக்கும். படிச்சதில இது நெஞ்சில பதிஞ்சிடுச்சி"
தாராபுரம் அருகில் உள்ள ஒரு ஊரிலிருந்து இதே பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் என்ஜினியர் ஆன பின்னர், ஆன பின்னர், இந்த உணவகத்தை இங்கேயே நடத்துகிறார்!!!!
கல்லூரி அருகிலேயே தங்கியிருக்கிறார். 'பத்துக்கு பத்து இடத்த தாண்டி என்ன வேண்டியிருக்கு?" என்கிறார். விவசாயத்தில் ஆழ்ந்த ஆர்வம், ஈடுபாடு, தேடல்...
அவரது வேலைகளுக்கிடையே சுக்கு காபி பருகியபடியே பேசினேன்...
'என்ன ப்ளான்? இப்டியே எத்தன நாள்?' என்றேன்.
"வாழ்க்கைக்கு வேண்டியது கிடைக்கிது. தெரியல சார். இதோ நாலு நாள் லீவு வருது. விவசாயிகள, நிலங்கள பாக்க கிளம்பிடுவேன். அப்றம்...ஒன்னர மாதம் கழிச்சி பெரிய ப்ரேக் வரும். அப்பயும் சுத்துவேன்... எட்டு மாசந்தான் சார். அதுக்கப்றம் விவசாயம்தான்!" என்றார் உறுதியாக.
'விவசாயம் செய்திருக்கீங்களா?' என்றேன்.
"பண்ணேன் சார். நிறைய மரம் வச்சேன். தண்ணியில்ல..."
இரு நண்பர்கள் இணைந்து ஆரம்பித்த உணவகமாம். நண்பர் சில மாதங்கள் முன்பு மேற்படிப்பு படிக்க சென்றுவிட்டாராம். தனியே போராடுகிறார்...
என் நண்பர் 'உன் friend கிளம்பிட்டது எனக்கே கஷ்டமா இருந்தது' என ஆதங்கப்பட்டபோது "இல்லங்க மேடம், படிக்கதானே போனான், நல்ல விஷயம்தானே' என்றார் சிரிப்பு மாறாமல்!
'கண்ணம்மா சிந்தனை' என்று ஒரு வெள்ளை போர்டில் தன் கருத்துகளை அவ்வப்போது மார்க்கர் பேனாவால் எழுதி வைத்து விட்டு, உணவு அருந்த வருபவர்களுக்கு நல்ல உணவு, மலிவாக, தரமாக என்ன கொடுக்கலாம் என சிந்தித்திக்கொண்டிருக்கிறார்.
விடைபெறும் முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்தேன். சிரிப்பு மாறாமல் மாணவர் கூட்டத்திற்கிடையில் அவர் நிற்க, திகைப்பாய் என்னைப்பார்த்த மாணவர்களிடம் மென்மையாய், 'இவர்தான் இங்கே உண்மையான HERO, guys...' எனச்சொல்லி நகர்ந்தேன்.
விடைபெறும் முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுத்தேன். சிரிப்பு மாறாமல் மாணவர் கூட்டத்திற்கிடையில் அவர் நிற்க, திகைப்பாய் என்னைப்பார்த்த மாணவர்களிடம் மென்மையாய், 'இவர்தான் இங்கே உண்மையான HERO, guys...' எனச்சொல்லி நகர்ந்தேன்.
விடைபெறும்போது வேண்டுகோள் ஒன்று வைத்தார், 'இந்த water management பத்தி எதுனா செய்ங்க சார்...'
செய்வேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக