முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Become an Industrialist today!

Application form for setting up an industry. ------------------------------------------------------------------ Name of the Company: "Indus-trees" Manpower required : "Very little" Machineries, Plants, Equipments: "No need; they shall all come by :-)" Power / Water / Amenities : "Negligible; we will get by :-)" Products: Plentifold. "'Compounding effect' pales in significance!" Emissions : "You would love ours, tell ya!" Market access: "Actually Market shall come knocking on us!" Cost of setting up : "Negligible; even bird shit wld do!" Space required: "Oh, just a square inch shall do!" Remarks: "Please don't 'force close' before our first 'branch' takes root!" ------------------ Just think about it; each tree is an industry!  Unleash the industrialist in you by planting just one seed of an Indus t...

விவகார ரத்து!

விவாக ரத்து - காகிதப்பூ போன்ற சொற்கள். காலையில் தேநீர் அருந்துதல் போல நாம் அதிர்வின்றி கடக்கும் சொற்கள்.  மண முறிவும் அதற்கு காரணமான / அதனால் ஏற்படும் மன முறிவும் - நம் காலடியில் வெடிகுண்டு போல; பதட்டம் தருபவை. இதுவும் கடந்துபோகும் என்பதாகவே சொற்களும் வலுவிழந்து போகின்றன. ஒரு ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து செம்புலப்பெயல் நீராய் கலந்தது காப்பியங்களில் மட்டுமே.  1990s, 2000 வரை பல பொருத்தம் பார்த்து பண்ணிய கல்யாணங்களும், அதன் பின் ஐ.டி யின் கலாசார புரட்சியால் இன்றுவரை நிகழும் பல கல்யாணங்களும் ஆண், பெண் இருவரது (ஆண்) சமுதாய கட்டமைப்பு சார்ந்த வேறுபாடுகளினால் மட்டுமே முறிந்தன. ஆனால் சில ஆண்டுகளாக நம் வாழ்வியல் முறைக்கு ஒவ்வாத வேறு நாடுகளின் கலாச்சாரங்களின் எச்சங்கள் நம் மீது தெறித்து தெறித்து நம் வண்ணங்களை மாற்றிக்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நாம் முழுதாக அறிந்து/புரிந்து கொள்ளாத நம் 'சமுதாயம் சார்ந்த' நெறிகள்; மறுபுறம் கட்டற்ற தனி மனித சுதந்திரம் என்பதாக ஊடகங்கள் காண்பிக்கும் கனவுக்குமிழ்கள்... நம் சமுதாயம் தடம் மாறிக்கொண்டிருப்பதால் இன்று மண முறிவு ...

பேசுங்கய்ய்யா!

ஒரு சின்ன ஊர்ல ஒரு வேத்தாளு கையில ஒரு பெரிய்ய்ய கொடி ஒண்ண புடிச்சிகிட்டு வந்தானாம். வந்தவன் ஊர் மைதானத்தில அத நட்டுவச்சானாம். வேடிக்கை பாக்க ஊரே கூடிடுச்சாம். பாதிப்பேரு 'கொடி சூப்பர்ல' ன்னும் மீதி பேர் 'கொடி கேவலமா இருக்கப்பா' ன்னும் பேசிகிட்டாங்களாம். கொஞ்ச நேரத்திலயே புடிச்ச கும்பலுக்கும் புடிக்காத கும்பலுக்கும் அடிதடி, அமளி துமளி ஆயிப்போயி சண்டைய நிறுத்த படுத்த படுக்கையா இருக்கிற ஊர்ப்பெரிசை தூக்கிட்டு வர ஆள் அனுப்புனா... போனவய்ங்க செத்த நேரத்தில அலறிகிட்டே திரும்ப ஓடி வந்தானுங்களாம் 'பூட்டெல்லாம் ஒடச்சிகிடக்கு! ஊர் மொத்தத்தையும் களவாண்ட்டாங்களே!' ன்னு கூவிகிட்டே! நாட்டு நெலம அப்புடி... ரெண்டு நாள் முன்னாடி ஒயிட் ரஜினி படத்தோட ஒரு பதிவு Facebook ல போட்டு ரெண்டே ரெண்டு கேள்வி கேட்டிருந்தேன். இன்னைய வரை மக்கள் அந்த பதிவோட சாரத்த விட்டுட்டு ரஜினி பற்றிய பின்னூட்டங்களையே இட்டுகிட்டிருக்காங்க. ஏழு கோடி கருப்பர்களால் வெளி நாட்டு கோக் பெப்சியை புறக்கணிக்க முடிந்தது, ஆனால் வெண்மை / வெளுப்பை /அழகை மையப்படுத்தி மட்டுமே விற்கப்படும் பொ...

மரத்த வச்சு விட்டுடுவன் பாத்துக்க!

நண்பர் வீட்டு முன் அவரது நெய்பர் (நண்பர் அல்ல :-) குட்டி ஈன்ற பூனை போல சுற்றி வருவதும், அவ்வப்போது நண்பரின் வீட்டுள் நுழைந்து ஏதோ கேட்பதுமாய் இருந்தார். 'மரம் வைக்கப்போறீங்களா?' 'வாசல்லயா?' 'காம்பவுண்ட தூக்கிடும் சார்!'  'பைப் லைன்லாம் போவுது சார்!'  'குப்பை எங்க வீட்டுக்குள்ளயும் வருமே சார்!'  'வேணாம் சார். எங்க வீட்ல பிடிக்லையாம்' ... என் நண்பர் சொன்ன விளக்கங்கள் எதுவும் நெய்பரின் 'அறியாமை' அடைத்த காதுகளில் விழவில்லை... மொட்டை வெயிலில் ஒற்றை மர நிழலேனும் கிடைக்குமா என கண்களும் கால்களும் ஏங்கும் நம் சக மனிதர்கள் எத்தனை பேர் தம் தெருக்களில் மரம் வைக்கிறோம்?! யாரோ வைத்த மரங்களடியில் வைத்தவனுக்கும் வளர்த்தவைக்கும் நன்றிகூட சொல்ல மனதில்லாமல் இளைப்பாறத்தெரிந்தவர்கள் மரம் வைப்பார்களா என்ன?! 'இவங்க பசங்களுக்காக கூடவா?' என்ற கேள்வியின் மென்னியை  முறித்து விடுங்கள்; இவர் சந்ததிகள்தான் மேல்நாட்டு 'நிழல்' நாடி ஒதுங்கிவிடுவரே! இந்த ஞாயிறு இதோ ஒரு நல்ல மந்திர விளையாட்டு உங்களுக...

நான் என்ன Fair & Lovely ன்னு நினைச்சியாடா?!

காலாடா! காலாவேதாண்டா ! காலா படம் பார்த்தபின் பூமியின் மேல் அரை அடி உயர மிதப்பில் நடை போடும் நட்புகளே, இன்னும் டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் / சோகத்தில் கூடுதலாய் கட்டிங் போட ப்ளான் பண்ணும் சகாக்களே, இதெல்லாம் எத்தன பாத்திருப்பம், நெட்டில பாத்துக்கலாம் என்று ஈஸி கோயிங் கோவிந்துகளே! (Just rhyming க்காக மட்டுமே; உள் குத்து இல்லிங்கோ!), சில நிமிடம் ஒதுக்கி இதைப்படியுங்கள்: ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளம் கருப்பு, அவர்கள் பொங்கினால் சிவப்பு என உருவகப்படுத்தி பிழைப்பை நடத்தும் அனைவரும் ஏனையா வெளுத்த விளம்பரங்களை மட்டும் நம்பி ஏமாறிக்கொண்டே இருக்கிறீர்? நம் ஊடக விளம்பரங்களில் இதுவரையில் நம் மண்ணின் மக்களாகிய ஒரு கருப்பனையோ, கருப்பியையோ எந்த ஒரு விளம்பரத்திலாவது பாசிடிவ் போர்ட்ரேயல் கண்டிருக்கிறோமா? கோக், பெப்சியை இளநீர், நொங்கு கொண்டு நொங்கி நான் தமிழன்டா என்று மார் தட்டிய கூட்டம் வெளுத்த தேவதைப்பெண்களும், வெளுத்த புஷ்டியான குழந்தைகளும், வெளுத்த முதிர் கண்ணன்கள், கன்னிகளும் கேவிக்கூவி நம் இயலாமையை மீறிய ஆசைகளை தூண்டி நம் கருப்பின மக்களுக்காக விற்கும் Fair and Lovely, கண...

மஞ்சப்பை!

கல்லூரியில் சேர சிற்றூரிலிருந்து பெருநகரத்திற்கு வந்த அன்று என் கையில் பெட்டி படுக்கையுடன் ஒரு மஞ்சப்பை. சர்டிபிகேட் அனைத்தும் அதில் அடக்கம். நகரவாசி கசின் இதைப்பார்த்ததும் சிரித்தான்; 'காலேஜ் வந்தாச்சுப்பா! இன்னும் மஞ்சப்பை??? ராகிங் பண்ணியே கொன்னுடுவானுங்க!'. உடனே டாகுமென்ட்சை இடம் மாற்றி, மஞ்சள் பைக்கு ஓய்வு கொடுத்தேன். அப்போதுதான் புழக்கத்தில் வந்திருந்த ப்ளாஸ்டிக் பையொன்று கைவசமானதும், பயணங்களில் வழித்துணையானது் ஸ்கைபேக் ஒரு கையில், ப்ளாஸ்டிக் பை ஒரு கையில். அதன் பின்னர் அசந்து தூங்கிவிட்டேன். எத்தனை ஆண்டுகள் நகர்ந்தன என தெரியவில்லை. எழுந்து பார்த்தால்... மஞ்சப்பை, பச்சைப்பை, ஊதாப்பை, பழுப்பு பை என எங்கெங்கு காணினும் துணிப்பை பயன்படுத்தச்சொல்லி விளம்பரம்! எனக்கு முன்னாடியே எழுந்த ரிப் வான் விங்க்கிள் அங்க்கிள்கிட்ட (Rip Van Winkle) 'என்ன ஆச்சு?!' என்றேன். கடகடவென சிரித்துவிட்டு அவர் சொன்னது இது: ' காகித்த்திலயும் இலைகள்லயும் கிட்டத்தட்ட எல்லாத்தையும் பொட்டலம்போடத்தெரிஞ்ச நமக்கு 'வெய்ட்' தாங்குறது, மழைல கிழியிறது மட்...

இன்றைய ஸ்பெஷல் - கரடி பர்கர்!

இன்றைய ஸ்பெஷல்: கரடி பர்கர்! 'அம்மா, காடு பாக்கணும்மா. அப்பா காடு பாக்கணும்ப்பா'. "ஏம்மா, எதுக்கு உனக்கு காடு பாக்கணும்?!" 'அங்க சிங்கம், புலி, கரடி எல்லாம் இருக்காம்ப்பா. எனக்கு பாக்க ஆசையா இருக்கு'. "ஓ அதனாலயா! ஜோரா போலாம். ஆனா அது பயங்கரமான இடம். அசந்தா மிருகங்கள் நம்மை சாப்பிட்டுடும்!!! பாதுகாப்பான இடம் ஒன்னு நம்ம நகரத்திலயே இருக்கு. அதுக்கு zoo ன்னு பேரு. அங்கே போலாமா?" "!! Zoo ம் காடாப்பா? அங்க மிருகங்கள் இருக்காப்பா! எப்படி அதெல்லாம் வந்தது?' "இருக்கு... ஆனா தானா வராதும்மா. கொஞ்சம் பேர் காட்டுக்குள்ள போய் புடிச்சிட்டு வந்து இங்க காடு மாதிரி செட் பண்ணி உள்ளே விட்டுடுவாங்க". 'அந்த மிருகங்களுக்கெல்லாம் சாப்பாடுப்பா?' "அது... வேளா வேளைக்கு குடுத்திடுவாங்கம்மா" 'அதுங்கல்லாம் zoo விலருந்து தப்பிச்சிட்டா?' "அப்படியெல்லாம் ஆகாதும்மா. மனுஷங்க நாம ரொம்ப பவர்ஃபுல். தப்பிக்க விடமாட்டோம்... எப்போ போகலாம்னு சொல்லும்மா" வீட்டு வாசலில் வந்து விழுந்த செய்...