ஒரு சின்ன ஊர்ல ஒரு வேத்தாளு கையில ஒரு பெரிய்ய்ய கொடி ஒண்ண புடிச்சிகிட்டு வந்தானாம்.
வந்தவன் ஊர் மைதானத்தில அத நட்டுவச்சானாம்.
வேடிக்கை பாக்க ஊரே கூடிடுச்சாம்.
பாதிப்பேரு 'கொடி சூப்பர்ல' ன்னும் மீதி பேர் 'கொடி கேவலமா இருக்கப்பா' ன்னும் பேசிகிட்டாங்களாம். கொஞ்ச நேரத்திலயே புடிச்ச கும்பலுக்கும் புடிக்காத கும்பலுக்கும் அடிதடி, அமளி துமளி ஆயிப்போயி சண்டைய நிறுத்த படுத்த படுக்கையா இருக்கிற ஊர்ப்பெரிசை தூக்கிட்டு வர ஆள் அனுப்புனா... போனவய்ங்க செத்த நேரத்தில அலறிகிட்டே திரும்ப ஓடி வந்தானுங்களாம் 'பூட்டெல்லாம் ஒடச்சிகிடக்கு! ஊர் மொத்தத்தையும் களவாண்ட்டாங்களே!' ன்னு கூவிகிட்டே!
நாட்டு நெலம அப்புடி...
ரெண்டு நாள் முன்னாடி ஒயிட் ரஜினி படத்தோட ஒரு பதிவு Facebook ல போட்டு ரெண்டே ரெண்டு கேள்வி கேட்டிருந்தேன். இன்னைய வரை மக்கள் அந்த பதிவோட சாரத்த விட்டுட்டு ரஜினி பற்றிய பின்னூட்டங்களையே இட்டுகிட்டிருக்காங்க.
ஏழு கோடி கருப்பர்களால் வெளி நாட்டு கோக் பெப்சியை புறக்கணிக்க முடிந்தது, ஆனால் வெண்மை / வெளுப்பை /அழகை மையப்படுத்தி மட்டுமே விற்கப்படும் பொருட்களை புறக்கணிக்க முடியவில்லையே, ஏன்?
நம்மைப்பிடித்திருக்கும் பெரு வியாதிகள் சில இதோ; இவற்றிற்கு அறிகுறி ஏதும் கிடையாது; மனதின் வழி வாழ்வை மடக்குபவை இவை:
1. அதீத கற்பனை (assumptative)
2. ராமனானாலும் பாபரானாலும் ரூட்டும் கேட்டும் ஒண்ணு; ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நானே என் வாழ்வுக்கு ராஜா என்ற 'விட்டேத்தி'யான மனப்பான்மை (indifference, apathy)
3. என்னை பாதித்தாலும் கண்டுக்க மாட்டேன் என்ற பொறுப்பற்ற நிலைப்பாடு (irresponsibility)
4. பாத்துகிட்டே இரு; இதுக்கெல்லாம் தீர்வா யாராவது கண்டிப்பா வருவாங்க என்ற பற்றற்ற நிலை (EVerybody waiting on somebody to fix OUR problems)
சாலையில் தம் வீட்டுச்சிறார் கை பிடித்து அழைத்துச்செல்லும் சான்றோர் நாம், காலில் இடறும் கல்லை என்ன செய்கிறோம் என்பதில் தொடங்குகிறது நம் விரல் பிடித்து நடக்கும் எதிர்கால சமுதாயத்தின் கட்டமைப்பு.
இன்று ஞாயிறு... கொஞ்சம் டைம் ஒதுக்கி வீட்டுல இருக்குற எல்லாத்தோடயும் இதப்பத்தி பேசுங்கய்ய்ய்யா!
கருத்துகள்
கருத்துரையிடுக