நண்பர் வீட்டு முன் அவரது நெய்பர் (நண்பர் அல்ல :-) குட்டி ஈன்ற பூனை போல சுற்றி வருவதும், அவ்வப்போது நண்பரின் வீட்டுள் நுழைந்து ஏதோ கேட்பதுமாய் இருந்தார்.
'மரம் வைக்கப்போறீங்களா?'
'வாசல்லயா?'
'காம்பவுண்ட தூக்கிடும் சார்!'
'பைப் லைன்லாம் போவுது சார்!'
'குப்பை எங்க வீட்டுக்குள்ளயும் வருமே சார்!'
'வேணாம் சார். எங்க வீட்ல பிடிக்லையாம்'
...
என் நண்பர் சொன்ன விளக்கங்கள் எதுவும் நெய்பரின் 'அறியாமை' அடைத்த காதுகளில் விழவில்லை...
மொட்டை வெயிலில் ஒற்றை மர நிழலேனும் கிடைக்குமா என கண்களும் கால்களும் ஏங்கும் நம் சக மனிதர்கள் எத்தனை பேர் தம் தெருக்களில் மரம் வைக்கிறோம்?!
யாரோ வைத்த மரங்களடியில் வைத்தவனுக்கும் வளர்த்தவைக்கும் நன்றிகூட சொல்ல மனதில்லாமல் இளைப்பாறத்தெரிந்தவர்கள் மரம் வைப்பார்களா என்ன?! 'இவங்க பசங்களுக்காக கூடவா?' என்ற கேள்வியின் மென்னியை முறித்து விடுங்கள்; இவர் சந்ததிகள்தான் மேல்நாட்டு 'நிழல்' நாடி ஒதுங்கிவிடுவரே!
இந்த ஞாயிறு இதோ ஒரு நல்ல மந்திர விளையாட்டு உங்களுக்காக. உங்கள் 'தொல்லைகளை' தீர்த்துவைக்கும் ஆற்றல் வாய்ந்த மந்திரம்! நம்பிக்கையோடு முயல்வோருக்கு சகல பாக்கியங்களும் கை கூடும்!
ரெடியா?
1. உங்களுக்கு பிடிக்காத, உங்களை 'தொல்லை'ப்படுத்தும் நபர்களின் மொபைல் நம்பர்களை ஒரு காகி்தத்தில் எழுதுங்க.
2. ஒவ்வொருத்தராக கால் பண்ணுங்க. எதிர் முனையில் அவர் வந்ததும் இந்த மந்திரத்தை அட்சரம் பிசகாமல் சொல்லுவிட்டு உடனே டிஸ்கனெக்ட் பண்ணிடுங்க. பார்ட்டி கதறிக்கொண்டு சமாதானம் தேடி வருவார்!
நீங்கள் சொல்லவேண்டிய மந்திரம் இதுவே;
'படுத்தல் தாங்க முடியல. நிறுத்தலன்னா உன் வீட்டு வாசல்ல ஒரு மரத்த வச்சு விட்டுடுவன் பாத்துக்க. புடுங்கினா போலீசு வரும்'!!!
அப்புறம் பாருங்க வேடிக்கைய :-)
கருத்துகள்
கருத்துரையிடுக