காலாடா! காலாவேதாண்டா !
காலா படம் பார்த்தபின் பூமியின் மேல் அரை அடி உயர மிதப்பில் நடை போடும் நட்புகளே, இன்னும் டிக்கெட் கிடைக்காத வெறுப்பில் / சோகத்தில் கூடுதலாய் கட்டிங் போட ப்ளான் பண்ணும் சகாக்களே, இதெல்லாம் எத்தன பாத்திருப்பம், நெட்டில பாத்துக்கலாம் என்று ஈஸி கோயிங் கோவிந்துகளே! (Just rhyming க்காக மட்டுமே; உள் குத்து இல்லிங்கோ!), சில நிமிடம் ஒதுக்கி இதைப்படியுங்கள்:
ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளம் கருப்பு, அவர்கள் பொங்கினால் சிவப்பு என உருவகப்படுத்தி பிழைப்பை நடத்தும் அனைவரும் ஏனையா வெளுத்த விளம்பரங்களை மட்டும் நம்பி ஏமாறிக்கொண்டே இருக்கிறீர்?
நம் ஊடக விளம்பரங்களில் இதுவரையில் நம் மண்ணின் மக்களாகிய ஒரு கருப்பனையோ, கருப்பியையோ எந்த ஒரு விளம்பரத்திலாவது பாசிடிவ் போர்ட்ரேயல் கண்டிருக்கிறோமா?
கோக், பெப்சியை இளநீர், நொங்கு கொண்டு நொங்கி நான் தமிழன்டா என்று மார் தட்டிய கூட்டம் வெளுத்த தேவதைப்பெண்களும், வெளுத்த புஷ்டியான குழந்தைகளும், வெளுத்த முதிர் கண்ணன்கள், கன்னிகளும் கேவிக்கூவி நம் இயலாமையை மீறிய ஆசைகளை தூண்டி நம் கருப்பின மக்களுக்காக விற்கும் Fair and Lovely, கண்ணாடி மேனி சோப்பு, மொபைல், வியர்வை நாற்றம் போக்கும் வாசனாதி திரவியம் என கண்கவர் வண்ண / வெளிச்ச இல்லங்களையும் , வாகன இத்யாதி வகையறாக்களையும் கண்டு போதையேறி க்ரெடிட் கார்டு தேய்த்து அல்லது திருடி (really!) நுகரும் கொடுமைக்கு என்ன வண்ணம் சூட்டலாம்?
டைரக்டர் திரு ஷங்கர், நம் காலாவை கமலாய் வெளுத்து 'காட்டிய' ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட்டும் இந்த வண்ணத்தில்தான் அடங்கும் :-(
கேள்வி 1:கருப்பு தோலை சில வார கெமிகல் தடவலில் உரித்து வெள்ளையாக்குவது நம் வாழ்வை / தன்னம்பிக்கையை உயர்த்தும் என நம்புகிறோமே, இந்தக்கொடுமைக்கு நீங்கள் என்ன வண்ணம் தர விரும்புவீர்?
கே.2: நம் ஊர் ஊடக விளம்பரங்களில் ஒரு ஏழை கருப்பின குடும்பம் (நம்ம மக்கதேன்!) மகிழ்வாக போத்தீசில் / சரவணாசில் ஷாப்பிங் செய்த ஆடைகளை அணிந்து ஸ்லோ மோஷனில் 'அவரோடு' நடனமாடுவது நம் வாழ்நாளில் சாத்தியமா?
பாஸ் காலா அரசியல் சமூக விரோதின்னு பல மேட்டர் ஓடிக்கிட்டுருக்கு நீங்க என்னடான்னா இன்னும் சன்லைட் காலத்த கிளரிட்டு இருக்கீங்க... தமிழ்நாட்டுல இன்னக்கி நிலவரத்துல ....நின்னு அறிவா யோசித்து செயல்பட்டா பொழைக்க தெரியாத கோயிந்தாவாக மட்டுமே ஆகமுடியும்...தான் பாதிப்படஞ்சாலும் எதிர்த்து கேக்க குணமும் கணமும் இல்லாம ஓடிக்கொண்டிருக்கும் இருக்கிரார்கள்.. ம்ம்ம்
பதிலளிநீக்கு