கல்லூரியில் சேர சிற்றூரிலிருந்து பெருநகரத்திற்கு வந்த அன்று என் கையில் பெட்டி படுக்கையுடன் ஒரு மஞ்சப்பை.
சர்டிபிகேட் அனைத்தும் அதில் அடக்கம்.
நகரவாசி கசின் இதைப்பார்த்ததும் சிரித்தான்; 'காலேஜ் வந்தாச்சுப்பா! இன்னும் மஞ்சப்பை??? ராகிங் பண்ணியே கொன்னுடுவானுங்க!'.
உடனே டாகுமென்ட்சை இடம் மாற்றி, மஞ்சள் பைக்கு ஓய்வு கொடுத்தேன். அப்போதுதான் புழக்கத்தில் வந்திருந்த ப்ளாஸ்டிக் பையொன்று கைவசமானதும், பயணங்களில் வழித்துணையானது் ஸ்கைபேக் ஒரு கையில், ப்ளாஸ்டிக் பை ஒரு கையில்.
அதன் பின்னர் அசந்து தூங்கிவிட்டேன். எத்தனை ஆண்டுகள் நகர்ந்தன என தெரியவில்லை. எழுந்து பார்த்தால்... மஞ்சப்பை, பச்சைப்பை, ஊதாப்பை, பழுப்பு பை என எங்கெங்கு காணினும் துணிப்பை பயன்படுத்தச்சொல்லி விளம்பரம்!
எனக்கு முன்னாடியே எழுந்த ரிப் வான் விங்க்கிள் அங்க்கிள்கிட்ட (Rip Van Winkle) 'என்ன ஆச்சு?!' என்றேன்.
கடகடவென சிரித்துவிட்டு அவர் சொன்னது இது:
'
காகித்த்திலயும் இலைகள்லயும் கிட்டத்தட்ட எல்லாத்தையும் பொட்டலம்போடத்தெரிஞ்ச நமக்கு 'வெய்ட்' தாங்குறது, மழைல கிழியிறது மட்டும்தான ப்ரச்னைன்னு துணிப்பைக்கு மாறுனோம். அப்பறம் வண்டி வாகனம் அதிகமாச்சி, எடை தூக்குறது சுலபமாச்சு ஆனா மழைய சமாளிக்கமுடியாம ப்ளாஸ்டிக்குக்கு மாறுனோம். ஏகபோக வரவேற்புன்னாலும் மஞ்சப்பையும் சுமந்தோம். அப்புறம் நானும் சில பல வருஷம் தூங்கிட்டேன். எழுந்து பாத்தா அம்புட்டு பயலும் ப்ளாஸ்டிக் பைய 'வீசி'கிட்டு திறியிறான். "ஏண்டா இப்படி?" ன்னு கேட்டா... 'மழைய சுத்தமா நிறுத்தச்சொல்லு! நானும் மசஞ்சப்பைக்கு மாறிடுறேன்!!'கிறான்.
உலகமே சேந்து மழைய நிறுத்த என்னென்னவோ செஞ்சு இப்பதான் ஜெயிச்சிருக்கானுங்களாம். அதனால மறுபடியும் மஞ்ச, பச்ச, ஊதான்னு... ஆனாலும் இதுல ட்விஸ்ட்டு என்னன்னா, வாங்குறவன்தான் துணிப்பை பயன்படுத்தணுமாம். தயாரிக்கிறவன், பேக் பண்றவனெல்லாம் ப்ளாஸ்டிக்தானாம். அவய்ங்களுக்கு கத்தி சொன்னாலும் காது கேக்காதாம்!'
ஏங்க, மஞ்சப்பை சகா, நம்பலாமா இவரை?
(படத்துக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்காதீங்க பாஸ்! அதான் பேர்லயே இருக்கே!!)
மஞ்சப்பைல சாமிபடம் போட்டதுனால பணமும் பத்திரமும் சூதானமா இருக்குமுன்னு அந்த காலத்தில் உபயோகிச்சு இருக்காங்க... அப்போ பருத்தி காசு கம்மி... இயற்கை சுத்தம்லாம் அல்ல... ஊர்ல இப்போ பிளாஸ்டிக் சீப் அவ்ளோதான்... படிச்சவங்கள்ளயே நாலு பேரு மட்டும் தான் கவலபடுராங்க... விளிப்புனர்வ பள்ளிகாலத்துலயே விதைக்கணும்... ஆனால் பசங்க தெளிய ரொம்ப நாள் ஆகும்..
பதிலளிநீக்கு