முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஃபீனிக்ஸ் பறவை

  குழந்தையை தொலைத்தவர்கள் ------------------------------------------------------------- அதிகாலையிலோ அந்தி மாலையிலோ சாலையில் கடந்து போகையில் ஏதாவதொரு வீட்டு கதவின் மேல் ஒரு கம்பீரமான ஆண் முகமோ, மதிக்கத்தக்கபெண் முகமோ நிலவுத்துண்டு போல மிதப்பதை / எட்டிப்பார்ப்பதை காணலாம். முன்னறியாத அந்த முகங்களில் எத்தனை முகங்களோடு நாம் இயல்பாய் புன்னகை பறிமாற முடிகிறது? ஏன்? குழந்தையொன்று இன்னொரு குழந்தையை கண்டதும் கண்கள் விரிய வியந்து நோக்கி கள்ளமில்லாத சிரிப்பொன்றை உதிர்த்து, தன் உலகத்தின் இயக்கத்தை அதில் நிறுத்தி, மொழிகளின் தேவையின்றியே உரையாடத்தொடங்கும், உரையாடல் தொடரும், ஏதாவதொரு பெரியவரோ அல்லது நிகழ்வோ குழந்தைகளின் கவனத்தை கலைக்கும் வரை. வளர்ச்சியின் ஏதோ ஒரு புள்ளியில் இந்த இயல்பான மொழிகளற்ற உரையாடல், எதிர்பார்ப்பற்ற நேசம், உரு மாறி வாழ்வியல் எந்திரத்தில் சிக்குண்டு சிதைந்து உருமாறி நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப கோபமாகவோ தாபமாகவோ மகிழ்வாகவோ ஏக்கமாகவோ ஒன்றுமற்ற உணர்வாகவோ மாறி மாறி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும், வாழ்நாளில் இறுதிப்புள்ளி வரை. சோகத்தில் பெருஞ்சோகம் புத்திர சோகம் என்று சொன்னவர்கூட (த

பட்டைய கெளப்புறான் மொட்டையன்

  தோஷத்தில பெரிய தோஷம் சந்தோஷம். இந்த தோஷம் நம்மள பிடிச்சிக்கிடாதான்ற ஏக்கத்திலதான் உலக மக்கள் பெரும்பாலும் அல்லாடிகிட்டிருக்கானுங்க. பணம், பொருள், புகழ், போதை இவை எதுவும் தர முடியாத சந்தோஷத்த ஒருத்தன் பல வருசமா தந்துகிட்டிருக்கான்னா அவன கொண்டாடணும் இல்லயா?! "பட்டைய கெளப்புறான் மொட்டையன்!" நமக்கு பெர்சனலா தெரியாத யாரையாவது இந்த மாதிரி நாம மாசத்தில சில தடவ, வருசத்தில பல தடவ, இப்படி உரிமையோட விமர்சிக்க முடியுமா? அதுவும் ஒவ்வொரு வாட்டியும் மாறாத சந்தோசத்தோட? உற்ற தோழனை விடவும் நம் உயிருக்கு உணர்வுக்கு இவனை நெருக்கமாக்கிய இவனது இசை தந்த உரிமை இது! யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே மடை திறந்து தாவும் நதியென வெள்ளிச்சலங்கைகள் கொஞ்சும் கலைமகள் பனி விழும் மலர் வனத்தில் பூக்கதவின் தாழ் திறந்து இளமை எனும் பூங்காற்றை தித்திக்க வைத்து ஏதோவொரு மோகத்தை உண்டாக்கி இசையாய் மலருகையில் நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் ஆயிரம் தாமரை மொட்டுக்களை ஆனந்தக்கும்மியோடு நம் மனதில் ஆட வைத்து சந்தனக்காற்றில் இசையோடு பேசும் எந்தப்பருவத்திலும் புதிய ராகத்தில் நனைத்து நம்மை விட்டு வேறெங்கும் செல்லாது சற்று முன்பு பார்

புத்தம்புது கடவுள்

மனைவிக்கு பயந்தவர்கள் மட்டும் இந்தப்பதிவை படிங்க! சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்பது கால காலத்துக்கும் பொதுவான ஒன்று. வேர்கள் (பற்பல இடங்களில் ஓடியிருந்தாலும்) எங்கிருந்தாலும் இரண்டே இரண்டு கிளைகள் கொண்ட பெருமரமாய் நம் கண் முன்னே மாறிக்கொண்டிருக்கிறது வாழ்வு. எத்தனை வண்ணங்கள் வர்ணங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் கொண்டு பிரிக்க முயன்றாலும் திமிறிக்கொண்டு அத்தனை வர்ணங்களும் மனைவிகளின் இழுப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடிக்கொண்டிருப்பது ஒரே ஒரு கடவுளின் அருள் வேண்டி மட்டுமே. பொருளாதாரத்திலே பொருள்தான் கடவுளென்றால் தாரம்தானே மனைவி! (ஆ)தார இழுப்பின் பின்னால் நான்கு வர்ணமும் தம் வர்ணம் கலைக்காமலே ஓடி கடவுளை தரிசிக்க நிற்கையில் அங்கு இருப்பது இரண்டே வரிசை; இருப்பவர் வரிசை, இல்லாதவர் வரிசை. இருப்பவர் சாதி, இல்லாதவர் சாதி. இந்த இரு வரிசைக்குள்ளும், மேநாட்டு மங்கையரின் வட்ட வளைய கவுன் போல நம் அடையாளச்சின்னங்களை நம்மைச்சுற்றி வளையமிட்டு, நாம் பாதுகாப்பாக தனித்தனியே விலகி நிற்பது இந்த இரு வரிசைக்குள் ஏதாவது ஒன்றில் மட்டுமே! இந்தக்கடவுள் சற்றே விசித்திரமானவர். சாதிகளில் சடங்குகளில் சம்பிரதாயங்களில் அவ

மாயவண்ணக்காரி

  மலை முகடுகளில் நீலம் தீட்டி சரிவுகளி்ல் பச்சை மஞ்சள் சிவப்பு  வெண்மை கருமை கருநீலம் என  வண்ண வண்ணமாய் வண்ணம் சிந்தி அவ்வப்போது அதிகாலை அந்தி வானிலும் வண்ணங்கள் தூவி தாவித்தாவி தூவித்தூவி ஓய்வென்பதே அறியாத தொடர் பயணமாய் இவள் செல்லுமிடமெல்லாம் வண்ணம் சிந்தி மூச்சின் காற்றிலும் வண்ணங்கள் வழிய அதில் திளைத்த தும்பிகளும் வண்ணமற்ற  பூச்சிகளும் பறவைகளும் வண்ணம் பெற... நினைவிலும் கனவிலும் இவள் சிந்தும் நி றங்களினூடே பறக்குது  கால  காலமாய் காலப்பறவையும் சேர்ந்தே வண்ணங்களற்ற கடிகாரங்கள் யாரும் கண்டதுண்டோ? வாழ்வை மட்டும் ஏன் அவ்விதமாய்? மழை வெயில் புணர்வில்மட்டுமே வானவில் என கற்பிக்கப்பட்டதை மட்டும் மனதிலிருத்தி மழை வெயில் மேனியில் படாமல் வண்ணங்களை வாழ்வினுள் நுழைய விடாமல்  திரையிட்டு நாம் மறைத்து இருள் வண்ணத்தில் வாழ்வதல்ல நல வாழ்வு விடுகதையல்ல இந்த வாழ்க்கை விடை தேடும் கதையுமல்ல சுமை சேர்த்து சோர்ந்துபோக. சற்றே கண் திறந்து பாருங்கள். நொடி ஒன்றிலும் பழுதின்றி நமைச்சுற்றி எத்தனை எத்தனை வானவில் ஜாலம்! சற்றே கண் திறந்து பாருங்கள் மாயவண்ணக்காரி காத்திருக்கிறாள் வண்ணங்களற்ற உங்கள் கடிகாரத்தை இட்டு ந

ஊதல்

  வெட்ட வெளி. கட்டாந்தரை. சிறு ஊதல். அது கிளப்பிய ஒரு சுழல். சிறிதே புழுதி, ஓட்டமாய் தடம், சுழல் காற்று, சூறாவளிக்காற்று. கிடைத்ததை சுழற்றி உள்ளிழுத்து உள்ளிழுத்து பெரிது பெரிதாகி ஓரிடத்தில் நில்லாது ஓட்டமாய் சுழன்றோடி தடைகளில் முட்டிமோதி தவித்து தாண்டி தவழ்ந்து ஊர்ந்து மறுபடி சிற்றூதல் பிறகு அதுவுமின்றி. சூறாவளியின் சுவடும் காற்றில் தேய்ந்து மறைந்த பின்னும் எதுவோ ஒன்றாக விரவி இருக்குது முதல் ஊதல். முதல் காதல்போல்.

எங்கே தேடுவேன்?

  கணபதி விலாஸ் மிடில் ஸ்கூல். மன்னார்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஊருக்குள் நுழைந்து தூய வளனார் பள்ளிக்கூடம் தாண்டி கீழப்பாலத்துக்கு முன்னால் சின்னதாய் 50-70 டிகிரி பெண்டாகும் ரோட்டில் அந்த பெண்டிற்கு முன் அப்படியே நேர்குத்தாய் நுழைந்து, இரண்டாம் லெஃப்ட் கட்டில் திரும்பி, முதல் தெருவில் தொடர்ந்தால், நான்குசாலை சந்திப்பிற்கு முன் வலது புறத்தில் நீல பெயிண்டில் ஊறிய மரச்சட்டத்தில் மேலிருந்து கீழாய் ஓடும் கம்பித்தாழ்வாரம், நடுவில் நுழைவுக்கதவு. அதுவும் நீல மரச்சட்டம், மேலிருந்து கீழாய் கம்பி. நாலாம் வகுப்பில் சேர அப்பாவின் விரல் பிடித்து, பயம் கலந்த தயக்கத்துடன் அடியெடுத்து வைத்த நாள் இன்றும் நினைவில். பிராமண குடும்பங்களால் நிறைந்த அந்தத்தெரு, புதுத்தெருவில் முட்டுமிடத்தில் இருந்த தொடர்வீடு குடியிருப்பில் ஒன்று எங்களது, வாடகை வீடு. பள்ளி செல்லும் வழியெங்கும் மாமாக்கள், மாமிகள், அண்ணாக்கள் வழிந்த அந்தத்தெருவில் நாங்கள் செவன் ஸ்டோன் விளையாடி முதுகில் சொத் சொத்தென பந்தடி வாங்கி ஓடி இவர்கள் வீட்டு ரேழிகளில் பதுங்குகையில் யாரும் எங்களை விரட்டியதுமில்லை, காட்டிக்கொடுத்ததுமில்லை. ப்ராமண திருநாட்களில

தொலைந்த நாய்க்குட்டி

  புயலுக்கு முன்னான பேரமைதி. சட்டென இருண்ட மதிய வானம். இலையைக்கூட அசைக்காது உறைந்து நின்ற காற்று. நடமாட்டமே இல்லாது நின்ற சாலை. இவையனைத்தையும் கலைத்துப்போடும் விதமாய் எழுந்தது ஒரு நலிந்த குரல்; மெலிதான அழுகை, ஈனக்கூப்பாடு, பிரிவின் தவிப்பு, என்ன நிகழ்கிறது என புரியாத பேரச்சம்... இவை அனைத்தின் கலவையாய். பிறந்து சில வாரங்களே ஆன நாய்க்குட்டி ஒன்று, காணாமல் போன தாயைத்தேடி நிலைகொள்ளாது அங்குமிங்கும் கால்களும் கண்களும் அலைய, சாலையின் எல்லைகள் பிரிவுகள் பிரிவுகளின் எல்லைகள் என ஓடித்திரும்பி மீண்டும் ஓடி... இத்தனையும் நிகழ்ந்தது என் கண் முன்னே சில நொடிகளில். 'என்ன கொடுமை இது? தாயைத்தொலைத்த குழந்தை இப்படி தவிக்கிறதே! எங்கிருந்தாவது அவள் ஓடி வந்து குட்டியின் கண் எல்லைக்குள் நிழலாடமாட்டாளா?' என கலவையான நினைவுகளோடு, கவலையோடு சில நொடிகள் நின்று பார்த்தேன். 'அழைக்கலாம்... உணவு / தண்ணீர் தரலாம். தந்தால் வேறெங்கும் செல்லாது இங்கேயே தங்கிவிடும். ஆணா பெண்ணா தெரியவில்லை. வீட்டில் ஒரு ஆண்குட்டி, பெண் குட்டி தேடத்தொடங்கும் வயதில். வாயிற்கதவு தாண்டி இதை உள்ளே அழைத்து இது பெண்குட்டியென்றால் சிக்க