முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பட்டைய கெளப்புறான் மொட்டையன்

 


தோஷத்தில பெரிய தோஷம் சந்தோஷம்.


இந்த தோஷம் நம்மள பிடிச்சிக்கிடாதான்ற ஏக்கத்திலதான் உலக மக்கள் பெரும்பாலும் அல்லாடிகிட்டிருக்கானுங்க.


பணம், பொருள், புகழ், போதை இவை எதுவும் தர முடியாத சந்தோஷத்த ஒருத்தன் பல வருசமா தந்துகிட்டிருக்கான்னா அவன கொண்டாடணும் இல்லயா?!


"பட்டைய கெளப்புறான் மொட்டையன்!"


நமக்கு பெர்சனலா தெரியாத யாரையாவது இந்த மாதிரி நாம மாசத்தில சில தடவ, வருசத்தில பல தடவ, இப்படி உரிமையோட விமர்சிக்க முடியுமா? அதுவும் ஒவ்வொரு வாட்டியும் மாறாத சந்தோசத்தோட? உற்ற தோழனை விடவும் நம் உயிருக்கு உணர்வுக்கு இவனை நெருக்கமாக்கிய இவனது இசை தந்த உரிமை இது!


யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே

மடை திறந்து தாவும் நதியென

வெள்ளிச்சலங்கைகள் கொஞ்சும் கலைமகள்

பனி விழும் மலர் வனத்தில்

பூக்கதவின் தாழ் திறந்து

இளமை எனும் பூங்காற்றை தித்திக்க வைத்து

ஏதோவொரு மோகத்தை உண்டாக்கி

இசையாய் மலருகையில்

நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் ஆயிரம் தாமரை மொட்டுக்களை ஆனந்தக்கும்மியோடு நம் மனதில் ஆட வைத்து சந்தனக்காற்றில் இசையோடு பேசும் எந்தப்பருவத்திலும் புதிய ராகத்தில் நனைத்து நம்மை விட்டு வேறெங்கும் செல்லாது சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போனாலும் கவலைகளின்றி இந்த புத்தம்புதுக்காலையில் செவியில் விழுந்து மனதில் நுழைந்து நம்முள்ளே நம்முள்ளே உயிரில் கலந்த உறவாய் ஆகிப்போய் இப்போது தென்றல் வந்து தீண்டும் போது என்ன இன்பமோ மனதிலே...


இதயம் ஒரு கோவில் அதில் உதயம் இவனது கீதம் கேட்கும் எவனையும் இனிமை இதோ இதோ என நொடிப்பொழுதில் வாழ்வின் இன்னல்களை மறக்கவைத்து ராக்கம்மாவாக மாற்றி கையைத்தட்டவைக்கும் சுகமான ராகம், ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏற்றும் இவனது இசைக்கோவைகள் அதன் பின்னான மௌனமான நேரத்திலும் தொடருமே...

போர்க்களத்தில் நிற்பவன் மனதிலும் நினைத்த நொடியில் அந்தி மழையாய் கொட்டுமே!


"

நீ போட்ட மெட்டுக்கொரு நன்றி

நமைச்சேர்த்த இசைக்கொவைக்கொரு நன்றி

அயராத செவிகள் சொல்லும் நன்றி நன்றி...

"


இளைய நிலா பொழிகையிலே மன்றம் வந்த தென்றலைக்கூட மஞ்சத்துக்கு வரவழைத்து... கேக்கிறவன் மனசை எல்லாம் காட்டுக்குயிலு மனசா மாத்தி பாட்டுக்கொன்னும் பஞ்சமில்லாத... பட்டைய கெளப்பறான் கெளப்பறான் கெளப்பிகிட்டே இருக்கான் இந்த மொட்டையன்!


கருத்துகள்

  1. இந்த இசை ஞானியை சொந்தம் கொண்டாடுவோர் பலர்! அவருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. மறைந்த பாடும் நிலா கூட இவருடைய நெருங்கிய சொந்தம் தான். ஆனாலும் இசையில் உச்சம் தொட்டு மேலும் தொட உச்சங்களை தேடும் இவருடன் பிணக்குற்றிருந்தார் தனது கடைசி காலத்தில். காரணம் முன்னவர் பலரும் கோராத காப்புரிமையை இவர் கோரிய விதம்தான்.
    இசை மெட்டு இவருக்கு கை வந்தது;அதற்கு உருவம் தந்த கவிஞர், உருகி உருகிப்பாடி உலாவ விட்ட வித்தகர் ஆகியோருடனான‌ பங்களிப்பு அதை இசைக்கோலமாக்கி இசை இலக்கணம் அறியாத குழந்தையை தாளமிட வைத்தது, ஆட வைத்தது, கிறங்க வைத்தது, உறங்க வைத்தது. இது ஒரு‌கூட்டு முயற்சியாக கொள்ளப்பட்டது.
    புதிதாக உரிமை கோரும் போது அதை நாடறியச் செய்தால் மட்டும் போதாது:தனது தனி‌ உரிமை என்பதை நிலை நாட்ட இசையால் கவரப்பட்டு எழுத்தறிவில்லாதவரும் அதனை நகலெடுப்பதை உணர்ந்து மனிதாபிமானத்துடன் நகர்ந்திருக்க வேண்டும். என்னிடம் கேட்டிருந்தால் இலவசமாக கொடுத்திருப்பேன் என்று உரக்க கூறியிருக்க வேண்டும். முரண்டு பிடிப்பவர்களுக்கு அவரது தனி உரிமை புரியும் வரை, பல லட்சங்களை இழந்தாலும் கூட, காலம் அனுமதித்திருக்கலாம்.
    நானும் ஒரு சொந்தம் என்ற முறையிலேயே இந்த உரிமையை எடுத்துக் கொள்கிறேன் - உணர வைக்க எவ்வளவு முயன்றார், மனிதாபிமானத்தினால் எவ்வளவு இழந்தார் என்று அறியாத நிலையிலும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்