முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அவரவர் புரிதல் அவரவருக்கே...

அவரவர் புரிதல் அவரவருக்கே! நேற்று மழையாய் இன்று வெயிலாய் நாளை குளிராய் அதன்பின் ஏதோவொன்றாய்... நான் இருப்பேன் நீயும் இருப்பாய். இங்கு இணைந்தது எங்கு பிரிவது? பிணைப்பின் இழைகள்... வாழ்வின் நொடிகளில் ஆனந்தம் சேர்க்கும் கவலை சேர்க்கும் வருத்தம் சேர்க்கும் கோபம் சேர்க்கும் வலி சேர்க்கும் வலிமை சேர்க்கும் இழைகளிலெது  உன் இழை என் இழை? ஊடும் பாவுமாய் (இழைகள்)... ஒருபோதும் ஒத்தோடுவதில்லை. அதனதன் பாதை  அது அதற்கே. பிரிந்து இணைந்து இணைந்து பிரிந்து... வாழ்வின் தாளத்தில்  சிறு லயம் நாம். இந்த குறுக்குமறுக்கில் வாழ்வு நெய்தல் ஐவகை நிலத்திலும், ஆறாம் நிலத்திலும்! வண்ண வண்ண  எண்ணம் வரையும் நமக்கான ஓவியம். காண்பவர் காணட்டும். அவரவர் புரிதல் அவரவருக்கே! (ஆறாம் நிலம் - மனம்)

நலம் நாடி... வேண்டுதல்...

தினமலர் நாளிதழில் வித்தியாசமான விளம்பரம், 'குழந்தைகளுக்கு கதைகள் கூற ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்' என ஒரு அறக்கட்டளை விளம்பரம். என் கண்ணில் பட்டதும் தொடர்பு கொண்டேன். 'நேரில் வாங்களேன், பேசுவோம்' என்றார். பேசினோம், ஒரு அமைப்பு உருவானது. நகர் முழுதும் 8 இடங்களில் கதைகூறும் மையங்கள். தன்னார்வலர்கள் கதை சொல்ல, குழந்தைகள் கேட்க, வாரத்தில் சில மணி நேரங்கள் மட்டும். வணிகம் ஒரு புறம், அறக்கட்டளை ஒரு புறம் என சிரித்த முகத்துடன், சீரிய எண்ணங்களுடன் இவரது வழி நடத்தலில் இன்று ஐந்தாவது ஆண்டு. வருடந்தோறும் ஒரு பெரிய நிகழ்வு, கதை / கட்டுரை / நாட்டுப்புறப்பாட்டு போட்டிகள் என... ஐந்து வருடங்கள் பகுதி நேர தன்னார்வலர்களின் சிறு குழு மூலம் இவரது முயற்சியில் மகிழ்ந்த குழந்தைகள் ஆயிரத்துக்கும் மேல். இவ்வளவு குழந்தைகளை மகிழ்வித்தவர், தன் சொந்தக்குழந்தைகளையும், உற்றாரையும், உறவினரையும், நண்பர்களையும் தவிக்கவிட்டு சில தினங்கள் முன்பு விடைபெறாமலே விடைபெற்றார்... காலனுடன் கூட பிணக்கின்றி ஒத்துழைத்து... அதற்கு இரு நாட்களுக்கு முன் மாம்பழங்கள் அனுப்பியிருந்தேன். புதி

புள்ளகுட்டிகளோட பாருங்க!

மேற்குத்தொடர்ச்சிமலை. வார்த்தைகள்கூட பிரிக்க முடியாத மலைத்தொடர். மலை வீட்டில் காலை 4 மணிக்கு அலாரம்போல அம்மா எழுப்பிவிட, ரங்கு மழையில் முகம் கழுவும்போதே உள்ளே ஏதோ தளும்ப ஆரம்பிக்கிறது. 4 மணியிலிருந்து பொழுது விடிவதற்குள் அவன் சந்திக்கும் மனிதர்கள், காட்சிகள், சப்தங்கள் நம்மை வேறொரு உலகத்திற்குள் இழுக்கின்றன. ஒற்றையடிப்பாதைகளால் பிணைக்கப்பட்ட மலை எஸ்டேட் தேயிலைத்தோட்ட தினசரி வேலை, ஆபீஸ் வேலை போல 10 மணிக்கு தொடங்கி மாலை அந்தி சாய கரையேறுவதல்ல. கைரேகை தெரியாத இருளில் விழித்து கைரேகை தெரியாத நள்ளிரவிலும் நீளும் இவனது உழைப்பு. காணி நிலம் அவன் கனவு. திருமணம் கூட அதன் பின்புதான் என்ற வைராக்கியம். அவனிடம் மனதைக்கொடுத்த மாமன் மகள். அவள் திருமணத்திற்கான அவள் தகப்பனின் முயற்சி. அந்த முயற்சியில் இணையும் மலை மனிதர்கள், மனிதம் கசியும் இவர்களின் வாழ்வு, நம்பிக்கைகள் என விரியும் பெருமலைத்தொடரில் இனிய சகா ஒருவரின் ஏழ்மை காக்கும் குரல், அதை முடக்கத்துடிக்கும் மனிதர்கள், மலைத்தொடரை முடக்கத்துடிக்கும் 'வளர்ச்சி'... இதற்கு மேல் கதை தெரியாமல் படம் பார்ப்பதே இந்தப்படத்திற்கு

ஒவ்வொரு விள்ளலும் நானே

அள்ளி எடு. கிள்ளி எடு. சுரண்டி எடு. வழித்து எடு. உரித்து எடு. தருவேன், என் வேரில் ஈரம் வற்றும் வரை. தருவேன் அதன்பின்னும். இது மனிதக்காதலே அல்ல. பூக்களுக்கும் புழுக்களுக்கும் இடையில்தானே வாழ்வு ஊடாடுகிறது... மலர்வதனைத்தும் நானே. உதிர்வதனைத்தும் நானே. புழுவும்தான்...

காயம், மெய்!

காயம், மெய்! நீர்க்குடத்தில் மிதந்த துகள் காயம் பெற்று சுருண்டு காயம் கிழித்து வெளிவந்து காயம் உருண்டு புரண்டு தவழ்ந்து பற்றி நிமிர்ந்து காயம் நடந்து வளர்ந்து இன்னொரு காயம் பற்றி காயமும் காயமும் முட்டிமோதி இன்னொரு நீர்க்குடம் இன்னொரு துகள்... ... சிறு காயங்கள் சுமக்கும்  பெருங்காயமே உடல் என்பதாய்  வாழ்வு... கரைந்த போதில் கடல்சேர்ந்து கடலிலே கரைத்த பெருங்காயமாய் ... கரைந்து கரை சேரும்வரை  'கரையாது' மகிழ்ந்திருக்கவே பெருவிருப்பம்... ... காற்றடைத்த பை கரையாது. காற்றடைத்த பை, பொய். காயம், மெய்!

அதே அலுத்துப்போன சப்பாத்தி

தமிழகத்தில் ஒரு சிறு தன்னார்வக்குழு, வாய்ப்பு அறியா திறமைசாலி ஏழை மாணவ மாணவச்செல்வங்களுக்கு, நல்ல உயர்கல்வி (+2 முடித்தவுடன்) தகவல்களை கொண்டு சேர்த்து, விண்ணப்பங்கள் வாங்கித்தந்து, நிரப்பி, கல்லூரிகளில் நேரடியாக சேர்ப்பித்து, கல்லூரி தலைமையிடம் இவர்களுக்காக இறைந்து இலவசமாய் சீட்டு வாங்கி.  அந்த மாணவ, மாணவியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி... என அவசியமான செயல்களை சத்தமின்றி செய்து வருகின்றனர். சற்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை மாலையில் கல்லூரிக்கு சேர்க்க அழைத்துச்சென்ற  ஆர்வலர்: 'சாப்ட்டியாம்மா?' பெண் குழந்தை : "ஓ, சாப்ட்டேனே" ஆ: 'என்ன சாப்பிட்டே?' பெ.கு: "ரெண்டு இட்லிண்ணா, காலைலயே சாப்ட்டேன்" ஆ: 'ஏன்மா, மத்யானம்?' பெ.கு: "ஸ்கூல் போகைல சத்துணவு கெடச்சது. இப்ப லீவ் விட்டாச்சா, அவ்ளோதான் தினம் தாத்தாவால குடுக்க முடியும்... நீங்க சாப்டீங்களாண்ணா?" ஆ: 'ஓ' பெ.கு: "என்ன சாப்பாடுண்ணா" ஆ: (அலுத்துப்போன சப்பாத்திம்மா என மனதில் நினைத்துக்கொண்டு) 'சப

நாடு சுதந்திரம் அடைய வாழ்த்துக்கள்!

இந்தக்கிழவன் சாதாரண ஆளில்லை! சுதந்திர நாடு என்றால் என்னங்க? விடுதலை அடைந்த நாள் சுதந்திர நாள் என்றால், விடுதலை அடைந்தவரெல்லாம் சுதந்திரமாக வாழும் நாடாச்சா அந்த நாள் முதல்? இல்லையே! தனி மனித சுதந்திரம் - அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட்ட நீதித்துறை இதன் எல்லைகளை வகுக்கிறது. என் விரலை உன் மூக்கின் நுனி வரை நீட்ட எனக்கு சுதந்திரம் இருக்கிறது, தொடுவதற்கு உன் அனுமதி வேண்டியிருக்கிறது. அனுமதிப்பதும் அனுமதிக்காததும் உன் சுதந்திரம்; தனி மனித சுதந்திரம். நாட்டின் சுதந்திரம்? சுதந்திர நாடு? இதைப்பற்றி நமக்கு பலவித கருத்துகள் உண்டு; புவியியல், மொழி, இன, மத, அரசியல் சார்ந்த கருத்துக்கள், அவற்றில் தோய்ந்த கருத்துக்கள். சுதந்திரம் வாங்க சரியான நேரத்தில் சரியான இடத்தில் வினையூக்கியாக உப்பிட்ட ஒரு கிழவன், சுதந்திரத்தை இப்படி வரையறுக்கிறான்: 'என்று ஒரு பெண் நள்ளிரவில் அணிகலன்களுடன் பயமின்றி நம் சாலைகளில் தனியே நடமாடமுடிகிறதோ அன்றே நாம் சுதந்திரம் ஆனோம்'! இவன் சாதாரண ஆளில்லை, இவனது வரையறையும் நுனிப்புல் வகையில்லை; ஏன் பெண்? ஏன் நள்ளிரவு? ஏன் ந