காயம், மெய்!
நீர்க்குடத்தில் மிதந்த துகள்
காயம் பெற்று சுருண்டு
காயம் கிழித்து வெளிவந்து
காயம் உருண்டு புரண்டு
தவழ்ந்து பற்றி நிமிர்ந்து
காயம் நடந்து வளர்ந்து
இன்னொரு காயம் பற்றி
காயமும் காயமும் முட்டிமோதி
இன்னொரு நீர்க்குடம் இன்னொரு
துகள்...
...
சிறு காயங்கள் சுமக்கும்
பெருங்காயமே உடல் என்பதாய்
வாழ்வு...
கரைந்த போதில் கடல்சேர்ந்து
கடலிலே கரைத்த பெருங்காயமாய்
...
கரைந்து கரை சேரும்வரை
'கரையாது' மகிழ்ந்திருக்கவே பெருவிருப்பம்...
...
காற்றடைத்த பை கரையாது.
காற்றடைத்த பை, பொய்.
காயம், மெய்!
கருத்துகள்
கருத்துரையிடுக