முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜோடி வாங்க வாரீகளா?!

ஜோடி வாங்கப்போறோம்! 250 கோடி சொத்து உள்ள குடும்பம். பையன் டாக்டர் / வணிக காந்தம்.. இதே அலைவரிசையிலுள்ள குடும்பத்தில் பெண் இருந்தால் விண்ணப்பிக்கவும். பணக்கார குடும்பத்து பொண்ணு. விஐபி குடும்ப பையன் வேணும். வயசெல்லாம் பெரிசில்லை. டைவர்சான வசதியான வேலையிலுள்ள பொண்ணு. கல்யாணமாகாத / நன்கு செட்டிலான 45-48 வயது மணமகன் தேவை. டைவர்சான பையன். பெங்களூரில் வேலை. பெங்களூரில் வேலை செய்யும் பெண் தேவை. ஜாதி பார்ப்பதில்லை. எம்மொழியும் சம்மதம் (!). ஆயிரங்காலத்து பயிர், பைவ் ஸ்டார் ஓட்டலின் இன்ஸ்டான்ட் நூடுல்சான கதை இது! யாயும் ஞாயும் யாராகியரோ  எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்  யானும் நீயும் எவ்வழி அறிதும்  செம்புலப் பெயல்நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! "சாத்தானே! அப்பாலே போ" என்கிறீர்களா! சரிதான், Matrimoney பெருந்தொகை சந்தையில் 'குறுந்தொகை' செல்லாது! வாரண மாயிரம் சூழவ லம்செய்து நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். நாளை வதுவை மணமென்று

ஒளியிலே தெரிவது! / Magica!

ஒரு நொடி வெளிச்சம். சிறிதே வண்ணம். இது போன்ற தேவ தருணங்களால்  நிறைந்தது வாழ்வு! A ray of sunlight. A dash of color. Life is full of Magical moments like this!

தாழ்திறந்தது பூங்கதவு!

#onemoresong ஜிமி ஹெண்ட்ரிக்ஸ். கிதார் இசைஞன். உலக கிதார் இசையில் எரிக் கிளாப்டன் போன்ற ஆளுமைகள் உச்சம் தொட்டபின் அடைவதற்கொன்றுமில்லை என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில் (பின் 60 களில், முன் எழுபதுகளில்) 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்' என ஒற்றைக்கிதாருடன் உலகை வெல்லக்கிளம்பியவன், வென்றவன், கருப்பினத்திலிருந்து. இந்தப்பதிவு அவனைப்பற்றியல்ல. பின் எழுபதுகளில் 'நம் தமிழ் (திரை) இசை உச்சம் தொட்டாச்சி, இதற்கும் மேல் ஒன்றுமில்லை, என மக்கள் மயங்கியிருந்த தருணத்தில் ஒற்றை கிதாருடன் இங்கும் ஒருவன் முளைத்தான், 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்!' என்று, ஒரு சிற்றூரிலிருந்து. நுழைந்த இரண்டாண்டுகளுக்குள் அவன் தொட்ட உச்சம்... வேற லெவல்! முகவரியற்றவரைக்கூட மந்திரக்கம்பளத்தில்  ஏற்றி பறக்கவைக்கும் வித்தையில் அவனை வெல்ல யாருமில்லை. பாரதிராஜா அவனுடன் இணைகிறார். மூன்று புது நடிகர்கள் நாயகர்களாக, ஒரு புது நடிகை நாயகியாக, ஒரு புது கவிஞர் பாட்டெழுத என இந்த மந்திர வித்தைக்காரனை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார். கவிஞருக்கு இவனைப்பற்றிய பெருவிய

மயிரு

மரங்கள் இலையுதிர்க்கும் பூவுதிர்க்கும் கனியுதிர்க்கும் கனி விதையாகும்  விதை துளிராகும் துளிர் மரமாகும் பல்லுயிர் வளர்க்கும். பறவைகள் இறகு(உ)திர்க்கும்  மீண்டும் வளரும் வலிவுகூட்டி பறக்கும் பழம்தேடி உண்ணும் எச்சமிட்டு வாழ்த்தும் காடு வளர்க்கும். விலங்குகள் மயிருதிர்க்கும் மீண்டும் வளரும் பருவத்தோடு ஒத்தோடி, ஓடுமிடமெல்லாம் வயிற்றில் காடுசுமந்து கழித்து கழித்தது முளைக்கும். மனிதர்கள் மயிருதிர்ப்பர் மயிர்போல் பண்பு(உ)திர்ப்பர் அன்புதிர்ப்பர் ஏனைய அனைத்தும் உதிர்ப்பர் பேராசை பெருநுகர்வு கடவுளரின் காலடியில். பூமியின் ஓட்டில் அனைத்தையும் உதிர்த்ததும் கடவுளர் குளிர்ந்து உதிர்த்தது ஒன்றேனும் திரும்பப்பெற வரம் தரலாமென இறைவிரும்பி மகிழ்ந்து வினவ ... மயிர் கேட்பர் ... மயிர்மட்டுமே கேட்பர்! (உணவுப்பயிர் காக்க நஞ்சு கலந்து, உணவையே நோயூக்கியாக மாற்றி விளைச்சல் அபாரம் அற்புதம் என மார்தட்டி ஏறு நடை போடும் நம் பேராசையில் நசுங்கும் இந்தக்குழந்தைகள், நம் நிலங்களில் 'நம் உணவு நமக்கு மட்டுமே' என பிறவுயிர் அழிக்க

தேவ சிறகும் சாத்தான் கொம்பும்!

மனிதர்க்கு மட்டுமல்லவே பூமி! Earth is not for humans alone! 'நமக்கு இல்லேன்னா பின்ன யாருக்கு?' என கோபமாய் மடக்கிய முஷ்டியை சற்றே தளர்த்தி மேற்கொண்டு வாசிப்போம் வாருங்கள்! "மனிதர்க்கே அல்ல பூமி!" என்பது கோண்ட்வானா என்ற அழிந்த நம் பூர்வ கண்டத்தின் (இன்றைய தென்பாதி பூமியில் உள்ள நாடுகள் அனைத்தையும் தன்னுள் கொண்ட பெருங்கண்டம்!) மரபுத்தொடர்ச்சியாக இன்றும் நம் நாட்டின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பூர்வ குடியினரான, நம் மூத்த குடியினரான "கோண்டு" இன மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! பழங்குடியினர் சித்திரங்கள் மூலம் தகவல் பரப்புபவர்கள், பெரும்பாலும் அவர்களை வியப்பில் ஆழ்த்திய அல்லது திகைப்பில் ஆழ்த்தியவற்றை பாறைச்சுவர்களில் வண்ணச்சாந்து கொண்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் காலத்தோடு கரையாது இன்றும் கதை சொல்கின்றன. அவர்கள் வழி வந்தவர்கள் நவீன வண்ணங்களை பயன்படுத்தி தம் கலையை சுமார் இருபது வருடங்களுக்கு முன் காகித்தில் கசியவிட, உலகமே வியந்து கவனிக்கத்தொடங்கியது. இன்று இந்தக்கலை உலகெங்கும் பரவியாச்சு; உன்னதமான கட்டிடங்களின் உட்சுவர்களில் இவர்

கண்ணி வெடியை மிதித்தவர் கதை!

கண்ணி வெடியை மிதித்தவன் காலடியில்  அவன் வாழ்வு புதையுண்டு கிடக்கிறது... காலை நகர்த்தினால் வாழ்வு முடிந்துவிடும். என்ன செய்வது? நீங்கள் இப்போது மிதித்துக்கொண்டிருக்கும் கண்ணி வெடி ஒன்றா, இரண்டா...?! பதினாறு செல்வமும் பெற்றால்தான் பெருவாழ்வு என எவரோ என்றோ சொல்லிச்செல்ல, அன்று புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் தலைமுறை தலைமுறையாய் நின்று கொண்டிருக்கும் வழியில் வந்தவர் நாம். 'ஏன் மிதித்து நிற்கிறாய்?' என்று யாரேனும் கேட்டால்,'தெரியாதுங்க... எங்க கொள்ளுத்தாத்தா காலத்திலருந்தே இப்படித்தான்' என்போம், நம் கொ.தாத்தாவும் இப்படித்தான் யாருக்கோ பதில் சொன்னார் என்பதையே அறியாமல்! அதென்ன பதினாறு? அதிலெங்கே கண்ணி வெடி? காண்போம் வாருங்கள்!... பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) கண்ணி வெடி: எது வெற்றி! 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) கண்ணி வெடி: எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என குரங்கின் குடல் முதல் நாம் உண்ணாத மருந்தில்லை! வாழ்வு தேய்கிறது, ஆயுள் நீள்கிறது! 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்ப

உயிர் உருகுதே என் இனிய தமிழ் மக்களே!

"கத்துக்குட்டி காதல், கன்றுக்குட்டி காதல். தற்காலிக பிரிவு, கட்டாயப்பிரிவு, காதலனைக்காணாமலே பிரிய வேண்டிய துயரம்... அலைகடலின் கரையில் தளும்புது ஒருத்தியின் மனசு. அவள் உயிர் உருகும் சத்தம் அவனுக்கு மட்டும் கண்டிப்பாய் கேட்குமென்று நம்புகிறாள். அவன் கேட்காமலே தந்த தனது உயிரை திருப்பித்தர வேண்டுகிறாள்... கன்னிக்காதலின் முதல் முத்தம், அவன் என்று கொடுத்தாலும் அது தனக்கு மட்டுமே சொந்தம் என்று மருகுகிறாள். இதான்யா சிச்சுவேசன்! ராசா, வைரம், டூ வாட் யூ கேன். அடுத்த ட்வென்டி இயர்சுக்கு இதான் Anthem ஆ இருக்கணும். Yes!" பாரதிராஜா இப்படி நேரேட் பண்ணாரான்னு தெரியாது. ஆனா, இன்னைக்கு இந்த பாட்ட கேட்டாலும் இதயம் சில பீட்ச ஸ்கிப் பண்ணுதே! என் இனிய தமிழ் மக்களே! விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த இப்பாடல் நம் மனக்கண்ணில் நிறுத்தும் முகம் கண்டிப்பாய் மகிழ்வு தரும்! #onemoresong விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே இரவும் பகலும் உரசி கொள்ளும் அந்தி பொழுதில் வந்து விடு அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரை திருப்பி தந்த