#onemoresong
ஜிமி ஹெண்ட்ரிக்ஸ்.
கிதார் இசைஞன்.
உலக கிதார் இசையில் எரிக் கிளாப்டன் போன்ற ஆளுமைகள் உச்சம் தொட்டபின் அடைவதற்கொன்றுமில்லை என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில் (பின் 60 களில், முன் எழுபதுகளில்) 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்' என ஒற்றைக்கிதாருடன் உலகை வெல்லக்கிளம்பியவன், வென்றவன், கருப்பினத்திலிருந்து.
இந்தப்பதிவு அவனைப்பற்றியல்ல.
பின் எழுபதுகளில் 'நம் தமிழ் (திரை) இசை உச்சம் தொட்டாச்சி, இதற்கும் மேல் ஒன்றுமில்லை, என மக்கள் மயங்கியிருந்த தருணத்தில் ஒற்றை கிதாருடன் இங்கும் ஒருவன் முளைத்தான், 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்!' என்று, ஒரு சிற்றூரிலிருந்து.
நுழைந்த இரண்டாண்டுகளுக்குள் அவன் தொட்ட உச்சம்... வேற லெவல்!
முகவரியற்றவரைக்கூட மந்திரக்கம்பளத்தில் ஏற்றி பறக்கவைக்கும் வித்தையில் அவனை வெல்ல யாருமில்லை.
பாரதிராஜா அவனுடன் இணைகிறார். மூன்று புது நடிகர்கள் நாயகர்களாக, ஒரு புது நடிகை நாயகியாக, ஒரு புது கவிஞர் பாட்டெழுத என இந்த மந்திர வித்தைக்காரனை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார்.
கவிஞருக்கு இவனைப்பற்றிய பெருவியப்பு இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் பாடல் ஒன்று பிறக்கிறது. இப்பாடலில் கவிஞர் விவரிப்பது இசைக்கலைஞனை, வாழ்த்துவது அவனை மட்டுமே!
தன நன.... தன நன..நன....
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா... தன நன..நன.... நா...
தன நன... நா... தன நன..நன.... நா...
ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....
லல... லா... லல... லலலா....
நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....லல... லா... லல... லலலா...
மனம் மகிழ்ந்த அந்த இசைஞன், ஒரு பொன்மாலைப்பொழுதில் பூங்கதவை தாழ்திறந்து விட, கவிஞனும், படைப்பாளியும் இறங்கி அடிக்க, உயர உயர பறக்கத்தொடங்கியது இசைக்கம்பளம்.
அதன் விளிம்புகளில் தொங்கியவண்ணம் பயணம் செய்த ஏனைய புதியவர்களும் அவர்களால் முடிந்த உயரம் தொட்டனர். அந்தக்கவிஞன் மட்டும் சரியாசணம் பெற்றான் கம்பளத்தின் மீது!
கவிஞர்களின் பின்னே இசையமைப்பாளரும், நாயகரும் டைரக்டரும் அலைந்த காலத்தை தொலைந்த காலமாக மாற்றி, இசையின் பின்னே அனைவரும் என
புதிய காலத்தை கட்டியம் கூறி வரவேற்றது இம்மூவர் கூட்டணி. (இசையா பாடலா என பின்னாளில் பிளவுபட இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்...)
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....
எண்ணம், எழுத்து, காட்சி, இசை!
சந்திரசேகர் இப்பாடலில் ஒரு குறியீடு மட்டுமே!
60-70களில் அமெரிக்க ஹிப்பி மற்றும் ராக் இசை புரட்சியின் தாக்கம், ஹாலிவுட் ஸ்டைலில் கேமரா ஆங்கிள் என என்று பார்த்தாலும் Throwback Years! இன்றளவும் இப்பாடல் கேட்கையில் தோன்றும் உற்சாகம், வேற லெவல்!
#onemoresong
கருத்துகள்
கருத்துரையிடுக