முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜோடி வாங்க வாரீகளா?!


ஜோடி வாங்கப்போறோம்!

250 கோடி சொத்து உள்ள குடும்பம். பையன் டாக்டர் / வணிக காந்தம்..
இதே அலைவரிசையிலுள்ள குடும்பத்தில் பெண் இருந்தால் விண்ணப்பிக்கவும்.

பணக்கார குடும்பத்து பொண்ணு. விஐபி குடும்ப பையன் வேணும். வயசெல்லாம் பெரிசில்லை.

டைவர்சான வசதியான வேலையிலுள்ள பொண்ணு. கல்யாணமாகாத / நன்கு செட்டிலான 45-48 வயது மணமகன் தேவை.

டைவர்சான பையன். பெங்களூரில் வேலை. பெங்களூரில் வேலை செய்யும் பெண் தேவை. ஜாதி பார்ப்பதில்லை. எம்மொழியும் சம்மதம் (!).

ஆயிரங்காலத்து பயிர், பைவ் ஸ்டார் ஓட்டலின் இன்ஸ்டான்ட் நூடுல்சான கதை இது!


யாயும் ஞாயும் யாராகியரோ 
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர் 
யானும் நீயும் எவ்வழி அறிதும் 
செம்புலப் பெயல்நீர் போல 
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!


"சாத்தானே! அப்பாலே போ" என்கிறீர்களா!

சரிதான், Matrimoney பெருந்தொகை சந்தையில் 'குறுந்தொகை' செல்லாது!


வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்
ஓர் காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ!நான்.

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீ!   நான்.

நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடென்றன்னை
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.

கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு
எங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து
என்னைக்கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து
காய்சின மாகளிறு அன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீ!நான்.

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீ!நான்.

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னைமுன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான்.

குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கவ னோடும் உடன்சென்றங்கு ஆனைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

                          
                             கனா, கனா, கனா!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...