மனிதர்க்கு மட்டுமல்லவே பூமி!
Earth is not for humans alone!
'நமக்கு இல்லேன்னா பின்ன யாருக்கு?' என கோபமாய் மடக்கிய முஷ்டியை சற்றே தளர்த்தி மேற்கொண்டு வாசிப்போம் வாருங்கள்!
"மனிதர்க்கே அல்ல பூமி!" என்பது கோண்ட்வானா என்ற அழிந்த நம் பூர்வ கண்டத்தின் (இன்றைய தென்பாதி பூமியில் உள்ள நாடுகள் அனைத்தையும் தன்னுள் கொண்ட பெருங்கண்டம்!) மரபுத்தொடர்ச்சியாக இன்றும் நம் நாட்டின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பூர்வ குடியினரான, நம் மூத்த குடியினரான "கோண்டு" இன மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!
பழங்குடியினர் சித்திரங்கள் மூலம் தகவல் பரப்புபவர்கள், பெரும்பாலும் அவர்களை வியப்பில் ஆழ்த்திய அல்லது திகைப்பில் ஆழ்த்தியவற்றை பாறைச்சுவர்களில் வண்ணச்சாந்து கொண்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் காலத்தோடு கரையாது இன்றும் கதை சொல்கின்றன.
அவர்கள் வழி வந்தவர்கள் நவீன வண்ணங்களை பயன்படுத்தி தம் கலையை சுமார் இருபது வருடங்களுக்கு முன் காகித்தில் கசியவிட, உலகமே வியந்து கவனிக்கத்தொடங்கியது.
இன்று இந்தக்கலை உலகெங்கும் பரவியாச்சு; உன்னதமான கட்டிடங்களின் உட்சுவர்களில் இவர்களின் கோண்டு ஓவியங்கள் வண்ணங்கள் வழிய உலவவிட்டிருப்பது நம் பழமைக்கானகங்களை, மரங்களை, விலங்குகளை, பறவைகளை, நீர் வாழ் உயிர்களை, இன்னும் பலவற்றை. அவற்றில் ஒன்றில்கூட மனிதர்களை காண முடியாது. ஏனெனில் மனிதர்கள் வெளியிலிருக்கிறார்கள்!
பின்குறிப்பு:
1.
பூமி பிறந்து நீண்ட நெடுங்காலத்திற்குப்பின் வந்தவர்கள்
'நாமெல்லாம் ஆரியர்!'
"இல்லையில்லை, திராவிடர்!. பார், கோண்டு மக்கள், தொல்குடியினர், தெலுங்கு கலந்து பேசுகிறார்கள்! அவர்களும் திராவிடரே!"
என அவரவர் கட்சிக்கு கூட்டம் சேர்க்க, அறிவியல் ஆராய்ச்சி என்ன சொல்கிறது தெரியுமா?!
"கோண்டு மக்களும், ஒரிசா/பீகார் பழங்குடியான முண்டா மக்களும் மரபணுவில் ஒற்றுமைகள் அதிகமுள்ளவர். வேறு எந்த இந்திய இனத்திலும் இவர்கள் அளவு மரபணு ஒற்றுமைகள் இல்லை."
!
'கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த' தமிழ்க்குடியின் எஞ்சியிருக்கும் பழங்குடி மக்களின் மரபணுக்களும் இந்த ஆராய்சியில் எடுத்துக்கொள்ளப்பட்டதா என்பது தெரியவில்லை!
2. பழைய கோண்டு ஓவியங்களில் ஏன் மனிதர்கள் இல்லை தெரியுமா?! அவர்களைப்பொருத்தவரையில் நாமும் விலங்குகளில் ஒன்றுதான், தேவ சிறகுகளும் சாத்தான் கொம்புகளும் பின்னாளில் முளைத்தவை!
கருத்துகள்
கருத்துரையிடுக