முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நிஜமா!

நிஜமா? 'போர்வையெல்லாம் கடிச்சிருக்கு! கொல்லாம விடுறதில்லை' கையில் கம்புடன் அம்மா. கதவிடுக்கில் சுண்டெலி. ஒரு நொடி இரக்கத்தில் உயிர் பிழைத்து தப்பியோட, மற்றொருநாள் அப்பா சட்டை, அக்கா தாவணி... பாத்திரக்காரனுக்கு மகிழ்ச்சி, அம்மாவுக்கும்கூடத்தான். எனக்கொரு சந்தேகம், புதுவித கூட்டணியோ?!

மந்திரமாவது நீரு!

நம் உலகின் ஆதி மழைத்துளியில் முளைத்த தாவரம், பெருகி தாவரங்களானதும், மரம், செடி, கொடி என்று பல்கிப்பெருகியதும், பூச்சிகளை உண்ணும் ஆற்றல் பெற்றதும் (Non vegetarian plants) என்றோ எவ்வாறோ நடந்த விந்தையாகட்டும்... நம் எண்ணக்குவியல் இங்கு விந்தை மீதல்ல. அந்த முதல் துளி மீது!  அந்த நீர்த்துளி கண்ட, காணும், காணப்போகும் காட்சிகளை ஒரு நொடியேனும் நம்மால் உணரமுடிந்தால் அதுவே பேரின்பம்... அன்றும் இன்றும் என்றும் அசுவத்தாமன் போல மரணமின்றி அலையும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து என்ற கேள்விக்கும் போகவேண்டாம். அசுவத்தாமன் உதிரத்தையும் அவன் பாவங்களையும்கூட அது கழுவியிருக்கலாம்...  என்று விழுந்தாலும் எங்கு விழுந்தாலும் விழுந்த இடத்தில் உயிர் முளைக்கவைக்கும் பேராற்றலை புரிந்து கொள்ள நாம் என்ன செய்தோம்? அருவியென்றோம், ஓடையென்றோம், ஆறென்றோம், கடலென்றோம், இடையில் ஏரியென்றும், ஏந்தலென்றும், ஊருணியென்றும், குளமென்றும் தேக்கியது போக.  அப்படி தேக்கியவரெல்லாம் காற்றில் கலந்து பலகாலமானபின்பு, நம்மைச்செதுக்கிய நீரென்ற பேருயிரை மறந்து, இன்று அதனை நம் கைக்கருவியாக பாவிக்கிறோம்...ஆழிசூழ் உலகில், ஆழி நிரப்பிய குடுவைகள

காடு உறங்கும் வீடு

அலாவுதீனின் அற்புத விளக்கு தேய்த்தால்தான் பூதம் வரும். தேய்க்காமலே வரும் பூதம் சொல்லட்டுமா? மண் சருகு கல்லிடுக்கில் பெரும்பார பூமி சுமந்து நித்திரையிலும் காரியத்தில் கண்ணாய் காற்று வெயில் மழை நாடிபிடித்து உயிர் ஜனிக்க நேரம் குறித்து பூமியின் ஓட்டில் ஓட்டையிட்டு எட்டி உதைத்து வெளிப்பட்டு வான் நோக்கி துளிரையும் கீழ்நோக்கி நீர்தேடி வேரையும் வழியவிடும் உயிராற்றல் வந்ததெப்படி விதைக்குள்?  எது எப்பக்கம் என யார் சொல்லித்தந்தார் அதற்கு? அச்சிறு பைக்குள் உயிர்பூதம் அடைபட்டது எப்படி?  அப்பூதம் வெளிவரும் அற்புத  கணத்தை கண்டதுண்டோ யாரேனும்? யாரும் ஏவாமலே வான்வளர்ந்து கடல் மணலை எண்ணுமோ? நட்சத்திரங்களைப்பொறுக்குமோ? பூ தரும் காய் தரும் கனி தரும் ஏராளமாய் நிழல் தரும் உயிரனைத்தும் சுவாசிக்க தன் உயிர் கசியும் பெரும்பூதம் அப்பூதம்  பூதத்துலெல்லாம் தலை!

ஆனந்தம் - Language no bar!

எத்தனையோ காலேஜ் மூவீஸ் வந்திருக்கு. இதில் என்ன special ஆ இருக்கப்போவுது என்ற நினைப்புடன்தான் படம் பார்க்கத்தொடங்கினேன்.  வகுப்புத்தோழர்கள் இத்தனை ரகளையாய் இன்டஸ்ட்ரியல் விசிட் செய்வதையே முழு நீள திரைப்படமாய்! வியக்கவைக்கிறார் வினீத் சீனிவாசன். மலையாளத்தில் இவர் ஒரு தனி இடம். Pulse of the youth ஐ finger tips  ல் வச்சிருக்கார் இவர்! நட்பு, காதல், ஊடல், ஆடல், பாடல் என ஹம்ப்பியில் ஆரம்பித்து கோவாவில் முடியும் ஜாலி பயணம் இது. ஊசிப்பையன், டாட்டு பொண்ணு, சீரியசான டூர் ப்ளானர், ராக் ஸ்டார் அண்டு லவர் கேர்ள், லைவ் வயர் மாதிரி ஹாபி போட்டோகிராபர் இன்னும் பலர், இறங்கி அடிக்கிறார்கள். சமீப மலையாள படங்கள்போல் இதிலும் lecturer காதல், மலர் டீச்சரிடம் வழியும் ஜாவா lecturer போலின்றி இவர் வேறு ரகம். ஆனாலும் ரசிக்கவைக்கிறார் Sunset பார்த்து! டிவோர்ஸ் போன்ற கடினமான ஒன்றையும் கதை அழகாய் தாண்டிச்செல்கிறது. Sun Down இல் முடிகிறது படம். இது சேட்டன்ட தேசத்து சினிமாவுக்கு Sun Rise காலம். நல்ல சினிமா, தெரியாத மொழியிலும் ரசிக்கவைக்கிறது. Amazing energy level! Note 1: Adolescent innocenc

...தவமாவது அன்பு

செய்க தவம்! இரண்டு வயது சிறுமி. தினம் காலை ஏழு மணி - ஒரு நாற்காலியில், கையில் கரடி பொம்மையும் பள்ளி பையும் வைத்துக்கொண்டு. தனியே. பெற்றோர் இருவரும் வேலைக்கு ஏழு மணிக்கு சென்றபின், ஆட்டோவுக்காக பதினைந்து நிமிடங்கள் தனியே, gated community உள்ளே. ஆட்டோக்காரர் பதறியடித்து ஏழேகாலுக்கு வந்து சிறுமியை பள்ளிக்கு அழைத்துச்செல்வார் - ஒருநாள் கூட அந்த gated community யில் அந்நேரத்தில் யாருமே நடமாடுவதில்லையாம். பனிரெண்டு மணிக்கு பள்ளி முடியும், traffic சிக்கலில் லேட்டானால் அவரே பள்ளிக்கு போன் செய்து உள்ளேயே காக்கவைக்கச்சொல்லி, சென்று அழைத்துச்செல்வார் இன்னொரு பள்ளிக்கு. நாலு மணிக்கு அந்தப்பள்ளியும் மூடப்படும். மீண்டும் அவரே அழைத்துச்சென்று எட்டரை மணி வரையில் டியூஷனில் விடுவதாய் ஏற்பாடு. மனம் கேட்காமல் அவர் பல நாட்கள் அச்சிறுமியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியின் மேற்பார்வையில் தன் குழந்தையுடன் விளையாடவிடுவார் (பெற்றோர் அனுமதி உண்டு). இரவு ஒன்பது மணிக்கு பெற்றோரிடம் ஒப்படைப்பார். மறுதினம் காலை ஏழு மணிக்கு மீண்டும் அந்தக்குழந்தை கரடி பொம்மையுடன் தனியே

நாலாம் தமிழ்!

ஒரு கிராமத்தான் பையன் தமிழ் படிக்க பட்டணம் போனானாம். பல வருச படிப்பாம். முடிச்சதும் திரும்ப, ஊரே கூடி வரவேத்துதாம். மேள தாளமாம், மாலை மேல மாலையாம். களைச்சிப்போன பையன் அம்மையையும் அப்பனையும் பாத்து 'அன்னாய், தாதாய், அயற்சி மிக்கது. அடிசில் புக்கி அயனம் கொணர்க' என்றானாம். அதுதான் அவன் அன்னக்கி முதலும் கடைசியுமா பேசினதாம்!.  'எலேய், புள்ளய பட்டணத்துக்கு படிக்க அனுப்பிச்ச லச்சணமா இது?! அவனுக்கு பட்டணத்து பேய் புடிச்சிருக்குலே, புடிச்சி மரத்துல கட்டுங்கலே!' என்று கட்டி ஒதச்சு பிரிச்சி மேய்ஞ்சி தோலுரிக்க, ரெண்டு நாள் பசியில நொந்து நூலாயி, பாக்க வந்த அம்மை, அப்பன்கிட்ட தீனமா முனகுனானாம், 'அம்மை, வவுறு பசிக்கி, சோறு குடு'ன்னு. இதத்தான அவன் ரெண்டு நாளு முன்னாடியுஞ்சொன்னான்!!? இயல் இசை நாடகமென்று முத்தமிழோடு முடிந்திருந்தால் இன்றும் யாம் அத்தமிழிலிலேயே அடிசில் வடிப்போம். முத்தமிழின் வர்ண பேதங்களுக்குள் சிக்கி இன்றும் நமை அன்னாய் தாதாய் என வதைபடாமல் காத்தது, காப்பது நான்காம் தமிழ், 'பழகு தமிழ்'. கண்ணதாசன் பார்த்திபன் மகனை விளித்த த

நழுவும் மொழி - முன்னுரை

கம்ப்யூட்டர் பற்றி புத்தகங்கள் மூலமே அறிந்த ஒரு தலைமுறை இன்று புத்தக வாசிப்பை மறந்துகொண்டிருக்கிறது வெகுவேகமாய், கம்ப்யூட்டரில் படிப்பது சாத்தியமென்றாலும். 'யு நோ? என்க்கு எது படிச்சாலும் ரெண்டு பேஜுக்குள்ள இருக்கணும். இல்லேன்னா இன்ட்டரஸ்ட் போய்டும். ப்ளஸ், who has time for reading books?!' என தோள்குலுக்கி நகர்ந்தாலும், புத்தகங்கள் வாங்குவது மட்டும் குறையவில்லை. யார் படிக்க? மொழி என்பது முதலில் தாய்மொழி. அது தொப்புள்கொடி உறவு. மூளை வளரும் முதல் மாதங்களில் எந்தக்குழந்தையும் அதிகம் கேட்பது தாயின்மொழி. அது 'தாய்மொழி'யாக இருந்தவரையில் குறையொன்றுமில்லை. தாய்க்கே தாயின் மொழி கற்கும் விருப்பம் குறைந்து (I hate Tamil, what with such difficult grammer...கூறுகெட்ட எதிர்மறை nonsense!. You know, French is the most romantic language in the world...and...easiest to learn!') வேற்று மொழிகளை சீராடும்போதுதான் தொப்புள் கொடி பாழடைகிறது. எனது அனுபவத்தில் நான் உணர்ந்தது இதுவே 'அடிப்படை தாய்மொழியிலென்றால் பன்மொழியும் சுலபமாய் பின்பயிலலாம்'. A true polyglot is one