முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மீசை

கற்பு காப்பதற் கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் அச்சமோ அச்சம் என்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்துத் துஞ்சி மடிகின் றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், கற்பை பறித்து வாழ்வார் - இவர் பறிக்காத பெண்ணில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத் துயர்ப்படுத்துவார் சொல்லிப் பயப்படுத்துவார் பின்பு சுயங்காட்டுவார். (நெஞ்சு) எண்ணிலா மனநோயுடையார் - இவர் எழுந்து நடப்பதற்கும் வலிமையிலா பேரிளம்பெண்ணையும் விட்டு வைக்கார் செவியிலாக் குழந்தை களையும் மிச்சம் வைக்கார் மார்தட்டுவார். நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரங் கோடி நயந்துநின்ற புண்ணிய நாட்டினிலே - இவர் பொறியற்ற பெண்களையே விலங்குகள்  போலே வேட்டையாடி வாழ்வார். (நெஞ்சு) வாரி வழங்கும் மண்ணையும் பெண்ணையும் நித்தம் நித்தம் 'மிதித்து' கடக்கும் ஒரு கூட்டத்தையே கடமையாய் செதுக்கிக்கொண்டிருக்கும் சமுதாய சிற்பி

பொட்டை

பாலியல் வன்புணர்வு நமக்கு புதிதா என்ன? சில மாத குழந்தைகளிலிருந்து 80 வயது பேரிளம்பெண்வரை... நாம் அவ்வப்போது பொங்குவோம். அதன்பின் அரசியல் சமூக தர்க்கநியாயங்கள் பேசி அலுத்து உண்டு உறங்குவோம்.  முகநூல் தளத்தில் பெண் குழந்தைகளை 99.99 சதம் வக்கிர ஆண்களிடமிருந்து எப்படி காப்பது என கவலையோடு கருத்து கேட்போம், #metoo போன்று பாதிப்புகளை பகிர விழைவோம். ஆனால் யாரும் அடிப்படை சிக்கல் என்ன என்று சிக்கலின் நுனி தேடமாட்டோம், ஏனெனில் அது நமக்கு நன்றாக, மிக நன்றாக தெரிந்ததுதானே! முதலில் பெண்களை எப்படி இன்னும் பொத்திப்பாதுகாப்பது என சிந்திப்போம்: 1. பல நூறு ஆடைகளை ஒன்றன்மேல் ஒன்றாய் அணியச்செய்வோம். களைவதற்கு முன் காமுகர்கள் களைத்துப்போவர். 2. Chastity Belt போட்டு பூட்டி சாவியை நேரம் கூடி வரும்போது  எதிர்கால / நிகழ்கால கணவனிடம் ஒப்படைப்போம். 3. கள்ளிப்பால் கொடுத்து மொத்தமாய் கொன்றுவிடுவோம். ஒரே ஒரு முறை அதிர்வோடு நாம் கடந்துபோக இலகுவாக இருக்கும்.. ஆதிகாலம் தொட்டு நமது மத, பண்பாட்டு ரீங்காரங்கள் நம்முள் ஆழப்புதைத்த கோட்பாடுகள் 'ஆண் அரசாளுவான். பெண் ஆணின் அடிமை&

கடவுளர்க்கு உதவி வேண்டும்!

இது வலிக்கும் நிஜம்... உரிமைகளுக்காக நம் குரல் ஓங்கி ஒலிப்பது நம் இனத்தின் அடிப்படை குணங்களுள் ஒன்றல்லவா? அந்தக்குரல் எழுப்புவது சத்தமா சங்கீதமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். நேற்று ஆடி முதல் நாள். பழமைமிகு நம் மரபில் (ஆதியில் அனைவரின் மரபும் ஒன்றாய்தான் இருந்தது) இது வேளாண் பணிகளை இறை வேண்டி துவங்கும் பெருநாள். இந்த ஆடி மாத உழைப்புதான் வரும் மாதங்களில் சோறு போடக்கூடிய விதைப்பு என்பதால், புது இணை மோகம்கூட குறுக்கிடக்கூடாதென்று ஆடியில் கணவன்-மனைவி பிரிந்திருப்பது இதற்காகவேதான் (ஆடியில் கரு உருவானால் கோடையில் பிரசவம். தவிர்க்கவே பிரிவு என்பது பின்னாளில் வந்தது). நாம் ஆடிப்பிரிவை கெட்டியாகப்பிடித்துக்கொண்டது போல் நம்முடனே வாழ்ந்து அடிப்படை வாய்ப்புகள் / உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள், எந்த வேற்று மதக்கதவுகளை தட்டி அடைக்கலமானாலும், இந்த ஆடி முதல் தினத்தை இன்றுவரை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள், மாரியம்மனுக்கு / மேரியம்மனுக்கு கூழ் காய்ச்சி. (ஆடியில் தொடங்கும் வேளாண் பணிகள், அவர்கள் வீட்டிலும் வரும் மாதங்களில் உலை கொதிக்க உதவும்!). மத மாற்றம், அடிப்படை உரிமைகள

ஆய்!

எச்சரிக்கை 1: நீள்பதிவு. எச்சரிக்கை 2: ரத்த அழுத்தம் உள்ளவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், இப்பதிவை தவிர்த்துவிடுங்கள்! ஒரு நகரம் தன் சுத்தத்திற்கு தரும் விலை என்ன தெரியுமா? சுத்தம் செய்வோர்தான் யார் என்றாவது நாம் அறிவோமா? இன்றுவரை, சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டு வரலாற்றில், இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லாதது இங்கு மட்டுமே என்றாவது தெரியுமா? சென்னையில் ஒரு அதிகாலையில் பல புற நகர் பகுதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் குளித்து உடை உடுத்தி வேலைக்கு கிளம்பும் தகப்பன்மார், தாய்மார், இளைஞர்கள், அருகிலுள்ள கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பெயரேட்டில் கையெழுத்திட்டு, தம் தளவாடங்களை சுமந்துகொண்டு குப்பை இருக்கும் இடம் தேடி விரைவர். 6 முதல் 11 வரை பணி நேரம். வாரக்கணக்கில் நாறிக்கொண்டிருக்கும் குழம்பு, கறிசோறு முதல் நிறைந்த டயாப்பர், நாப்கின்கள் வரை... கைகளில் உறை கிடையாது, முகத்தில் சுவாசத்தடுப்பு கிடையாது. மரியாதை... சுத்தமாய் கிடையாது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்பவருக்கும் இவர்களுக்கும் ஏன் இந்த பேதம்.சிறு குடலை கீறி தையலிட்டு மூடுபவர்க்கு கிட்

வாத்யாரே, நீ காலி! / You are Screwed, Mate :-)

#brainynation #brainyworld "பால எதுக்கு ரோட்டுல கொட்டி போராடுறீங்க?" 'வெல கெடைக்கல சார்' "அப்படீன்னா ஏன் நிறைய உற்பத்தி பண்றீங்க?" 'நாங்க எங்க பண்ணுறம். அதுங்க குடுக்குதுங்க. நிறுத்த முடியுமா?' "அப்ப அதுங்கள ஏங்க பெருக்கறீங்க?" 'இந்த லோலாயி எல்லாம் எங்ககிட்ட வேண்டாம்! சிவனேன்னு சுத்திகிட்டிருந்த எங்க நாட்டு மாடெல்லாம் புடிங்கிட்டு பாலாறா கறக்கிற வேத்து மாட்டெல்லாம் வளக்கச்சொண்ணீங்க. வளத்தோம். பால் பத்தாது இன்னும் வேணும் இன்னும் வேணும்னீங்க, பெருக்கினோம். இப்ப விலை இல்ல. நாங்க இந்த சீவனுங்களுக்கு தீனி வாங்க என்ன செய்வோம்? வித்தா முச்சூடும் வெட்டுக்குதான் போவும். அதுவும் கூடாதுன்றீங்க. நீயா மேஞ்சி உசிர காப்பாத்திக்க ன்னு அவுத்து பத்தி உட்டா, சாலைகள்ல மாடுகள் நடமாட்டம் அதிகமாச்சி, சாணம் போட்டு அசிங்கம் பண்ணுதுன்றீங்க. நாலு மாடு ஒரு பெரிய மனுசன் எடத்துல மேஞ்சிடுச்சின்னு போலீசு ஸ்டேசன்லல்லோ கட்டி வச்சீங்க?  நாங்க என்னதான் பண்ணுவம் சொல்லுங்க! நாட்டு மாடை வீட்டுக்கொண்ணு குடுத்துட்டு இங்க திரியிற வேத்த

வழிப்பறி கொள்ளையர், உஷார்! Beware, Highway robbers on the prowl!

நெடுஞ்சாலையில் வழிப்பறி கொள்ளை. கொள்ளையனை கைது செய்ய முடியுமா என அரசு திகைப்பு! Highway Robbery; Govt is stunned by the enormity of the task at hand! Such a developed tribe we are, even the most brilliant mind out there in the wild has learned a few tricks from us :-( பேராற்றலும் பேரறிவும் இருந்தும் அமைதி விரும்பும் இவர்களையும் வழிப்பறி கொள்ளையராக்கியதுதான் நமது இன வளர்ச்சி :-(

நானும் மழையானேன்...

இரு ஜோடி காக்கைக்கண்கள். ஒயிலாய் நடைபோடும் தோகைநீண்ட மயில். டொட்டொட்டொட்டொட்டொட்டென சிவப்புக்கொண்டையை ஆட்டியபடி மரம்கொத்தும் குருவி. 'அப்ப்பா! என்ன ஒரு சத்தம்!!' என உடல்  குளுக்கி செய்தி பறிமாறும் சாம்பல் குருவிகள். மலரிலிருந்து வண்ணம் பிரிந்தது போல் அகலும் வண்ணப்பூச்சி, இன்னொரு மலரில் தம் வண்ணம் சேர்க்கும், மீண்டும் மீண்டும். நூறு கால் கொண்டு சிற்றிடம் தாண்டும் சிவப்பு இரயில் மரவட்டை. சிறு குளத்தில் வாலாட்டும் வண்ண மீன்கள். பஞ்சுப்பொதியும் முதுகுக்கூடுமாய் அருகில் மிதக்கும் நத்தைகள். இது இரவா பகலா என கிளையிலமர்ந்து விழிக்கும் ஆந்தைகள். குளிருக்கு இதமாய் கம்பளி போர்த்தி இலை மேயும் பூச்சிகள். புல்லின் நுனி தீண்டும் ஆவலில் விரைந்தேறும் கருப்பு சிவப்பு வண்டுகள். மெலிதான காற்றில் ஆடி மெல்லத்தரையிறங்கும் விடுபட்ட கொடிமலர். இத்தனையும் என் மனதில் எழுப்பிய வண்ணங்கள் போதாதென மென்மேலும் வண்ணங்கள் சேர்த்து கழுவிச்செல்லும் மழைச்சாரல்... சாரலால் காதலால் தளும்பும் மனதின் அடியூற்றிலிருந்து உற்சாகக் கூவல், "நான் நேசிக்கிறேன்! ஐ லவ் நேச்சர்!' பழகிப்போன