முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தீர்த்தக்கரையினிலே!

என்றோ அவன் கட்டமைத்த மாய நதி... சுழித்தோடிக்கொண்டே இருக்கிறது காலங்களின் ஊடாக...

என்னுள்ளே கடல், உன்னுள்ளே கடல்!

உலகின் ஆதி தொட்டில் கடல். ஓயாது தாலாட்டும் இந்த தொட்டிலில் வளர்ந்து கரையேறிய எண்ணற்ற உயிரினங்களின் நீட்சியில் ஒரு கிளையின் இலை நான். தொப்புள் கொடி உறவு என் ஒவ்வொரு அணுவிலும் (செல்லிலும்) அலையென ததும்பி, என் எண்ணக்கரை மீறுகையிலெல்லாம் கடல் உப்புத்துளியாய் இறங்கும் இரு விழி வழியே.  கடலை விட்டு நான் ஒருபோதும் விலகியதில்லை. கடலும் என்னை விட்டு ஒரு போதும் விலகியதில்லை.  எதிர்காற்று முகத்தில் மோத நான் பயணம் செய்த நில, ஆகாயப்பரப்புகள் அனைத்தையும் கடல் நனைத்தவண்ணமே இருந்தது என் விழி வழியே, விழி வழிய... ஆனால் அந்த தொட்டிலின் தாலாட்டில் கால் நனைத்து எனை மறந்து நான் நிற்கும் நொடிகளில் மட்டும் என் விழி்வழி கடல் (தரை) இறங்கியதே இல்லை! அந்த முதுபெருங்கிழவியின் கருணை, உப்புக்காற்று வழியே என் விழிகளுள் இறங்கும் நொடிகளில் அணுக்கள் அனைத்தும் ஆடும் நடனம்... அதுவே சிவம்!

36 இன்ஞ்ச் வேஷ்டி கிடைக்குமா?

'வேஷ்டி நாலு குடுங்க. ஹிப் சைஸ் 36' என்ற குரல் கேட்டு 'ங்கொக்கா மக்கா வேஷ்டிக்கு ஹிப் சைசா! யாரையா நீ?' என நிமிர்ந்த கடைக்காரரின் முன் நின்றிருந்தவர், கோட் சூட் பூட் அணிந்த இந்தியர். மேதமை ததும்பும் முகம். 'யார் இவர்? கோட்டு போட்டு வந்து வேஷ்டி ...ஏன்?' என்ற கேள்வி இந்தப்பதிவிற்குள் உங்களையும் இட்டுச்செல்லும்... சபர்மதி ஆசிரமத்தில் மரத்தடி நிழலில் காந்தியிடம் அவரை பார்க்க இந்த கோட்டு சூட்டு நபர் வந்து காத்திருக்கும் தகவல் போகிறது.  அழைக்கிறார். கோட்டு சூட்டு நபர் மரத்தடியில் அமர உடை தடுத்ததால் அவஸ்தையாக நிற்க, கவனித்த காந்தி தன் அருகிலிருந்த ஒருவரை நாற்காலி எடுத்துவரப்பணிக்கிறார். நாற்காலி எடுத்து வந்தவரை பார்த்து கோட்டு சூட்டு நபர் வியர்த்துப்போகிறார்...' இவரா?! எவ்வ்ளோ பெரிய மனுசன், எனக்கு நாற்காலி சுமக்கிறாரே' என்று. கால் மடக்கி தரையில் அமர்ந்து அரையாடை உடுத்த காந்தியுடன் உரையாடுகிறார், இந்த சூட்டு அணிந்த பொருளாதார மேதை. 'கிராமங்கள், பருத்தி நூற்பு' இரண்டையும் இணைத்து சுயசார்புள்ளவையாக கிராமங்களை மாற்ற முடியுமா என்பதே

காட்டு மரங்கள் ஈதவை அனைத்தும்...

-----------------------------------------------------------------+ "உங்கள் தெருவில் கூட நீங்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை நிச்சயமாக வரும்" -----------------------------------------------------------------+ (மத, சக மனித) சகிப்புத்தன்மை குறைந்து வரும் இன்றைய சூழலில் நான் அடிக்கடி படிக்க/கேட்க/பார்க்க நேரிடும் வாதம் இது. உண்மையிலே இவ்வாறு நிகழுமா?! நம்மில் எத்தனை பேர் நம் வீட்டுக்குள்ளேயே சுதந்திரமாக இருக்கிறோம்? மதம் என்பது சமுதாயத்திற்கு மிகப்பெரிய போதைப்பொருள். இந்து மதம் தோன்றுவதற்கு முன்பும் ஏதாவதொன்று இருந்திருக்கலாம். இந்து மதத்துள்ளும் சைவ வைஷ்ணவ one upmanship உண்டு, இன்றளவும். இது எல்லா மதங்களுக்குள்ளும் உள்ள அடிப்படை சிக்கல். When Capitalism as a religion takes root and spreads its branches anywhere in the world, all erstwhile religions neatly fold under it... எது என்னவோ ஆகிட்டு போகட்டும். புள்ள குட்டிங்களுக்கு நேயம் சொல்லிக்கொடுப்போம். மனித நேயம் அல்ல!, just நேயம் மட்டும்!! மனித நேயம் என்பதும் ஒரு மதமே, ஒரு போதையே! மிகப்பெரிய ப

ராம் மொகம்மத் சிங் ஆசாத் ஹை நாம் மேரா

பெயர்: ராம் மொகம்மத் சிங் ஆசாத் மதம்: இந்தியன் நான் சிறுவன். ஊர் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் குழுமிய எம் மக்களுக்கு தாகம் தீர்க்க தண்ணீர் சுமந்து ஊடாடிக்கொண்டிருந்தேன். ஒரே நுழைவாயில், திடீரென அடைக்கப்பட்டது ராணுவத்தால். என்ன நடக்கப்போகிறது என உணர்வதற்குள் 1650 தோட்டாக்கள்... கொத்துக்கொத்தாய் என் நட்பும் உறவும் என் கண் முன்னே குருதியில் வீழ்ந்ததே... எய்தவனா அல்லது அம்பா என்றெல்லாம் குழப்பமில்லை. இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுத்தேன்.  இருபத்தொரு ஆண்டுகள், மைதானக்குருதியை மனதில் சுமந்தேன். புரட்சிக்குழுக்களுடன் இணைந்தேன். அடக்குமுறை கெடுபிடிகளின் கண்களில் மண்ணைத்தூவி, என் இலக்கு நோக்கிய நெடும்பயணம்... காஷ்மீர், அங்கிருந்து ஜெர்மனி, அங்கிருந்து எங்கெங்கோ அலைந்து அவன் இருக்கும் நாடு அடைந்தேன். அணுக முடியவில்லை. காத்திருந்தேன், இருபத்தொரு ஆண்டுகள்... நான் சிலபொழுது தங்கியிருந்த பன்றிக்கொட்டகைகள்கூட குருதி மணத்தை என் நாசியிலிருந்து அகற்றமுடியாது தோற்றன. இருபத்தொரு ஆண்டுகள் - வளர்த்தேன் வன்மத்தை. இதோ, இந்த வாரம் அவனை அணுக வாய்ப்பு! தயாரானேன். கள்ளத்துப்பாக்கி மலிவாக இல

மனதில் மறைந்தது மா'மத' யானை!

ஒன்பதாம் வகுப்பு, முஸ்லீம் பள்ளி. நாடிமுத்து, பஷீர், அலெக்ஸ், ரியால் என புதிய நட்புகள். பள்ளி நிறுவனர் புகழ்பெற்ற மருத்துவர். மத நல்லிணக்கத்துக்கு அவர் ஹாஸ்பிடல் ஓன்றே போதும். பஷீர் சிரித்த முகத்துக்காரன். 'அப்பா என்ன பண்றார்' என்ற கேள்விக்கு 'மெட்ராஸ் போய்ட்டு திரும்பும்போது சென்ட்ரல் ஸ்டேசன்ல ஹார்ட் அட்டாக். உக்காந்தபடியே வாப்பா போய்ட்டாரு' என்றான் புன்னகை மாறாமல். விரைவில் குடும்பத்தில் ஒருவன் எனும் அளவுக்கு, வளைய வந்தோம். பண்டிகை பலகாரங்கள் எங்கள் வீட்டில் உண்போம். ஈத் பலகாரம் அவன் வீட்டில். நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு, தலையணை சைசில். கிருத்துவ ஆரம்ப பள்ளியில் ஆப்ரகாம், ஆதாம், ஏவாள் அறிந்த நான் இப்ராகிம், ஆதம், ஈவா என அவர்களே நபிகள் வரலாற்று நூலிலும்! சுவை சற்றும் குறையாத வண்ணம் படித்து முடித்தேன் ஒரே மூச்சில். அவன்தான் நான் பள்ளியில் ஒரு முரட்டு பையனை மொமெண்டரி கோபத்தில் அறைந்தபின் நாடிமுத்துவின் உதவியோடு என்னை பத்திரமாய் :-) பள்ளியிலிருந்து வீடு சேர்த்தான்.  ரியால் கிரிக்கெட் தோழன். புது பேட்டில் காம்பஸ் குத்தி ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஊறவைப்பது எங

என் விழித்திரையில் : ஐகானிக் நாயனம், க்ளாசிக் சலங்கை.

ஐகானிக் நாயனம்! க்ளாசிக் சலங்கை! வழக்கமான கதைதான்.  இரு கலைஞர்கள்; உரசல், மண்டைக்குள் பல்பு, காதல், வில்லன்கள், வில்லி (ஜில்லு!), ஆபத்து, சந்தேகம், ஊடல், மனக்கூடல்,  'சுபம்' எண்ட் கார்டில் முடியும் கதைதான். ஆனால் அதற்குள்ளே எத்தனை ராகம், பாவம், கலை நயம்.... அவனின் நாயனம் உலகாளும். அவள் நயனம், நவரச நடனம் உலகை கட்டிப்போடும். அவன் முன்கோபி, தங்க மனசு. அவள் காதல் போராளி (1960s, remind you!!). இவர்கள் நிகழ்த்திய காதல் மேஜிக் பற்றி கை ஓயும்வரை எழுதிவிட்டார்கள். ஆனாலும் சலிக்கவில்லை... சலங்கை பணத்துக்கு மயங்கியதாய் நாயனம் மருகி, டப்பாங்குத்து ஜில்லுவின் குழுவோடு சில நாள் தங்க, நாயனம் கிறங்கியதாய் செய்தி சலங்கையை குலுக்க, கொஞ்சும் சலங்கை பொங்கும் சலங்கையாய் நிகழ்ச்சி அரங்கில் நாயனத்தை வெறுக்கும் தன் அன்னையின் கண்காணிப்பில் ஜில்லுவோடு மல்லுக்கட்ட நுழைந்து, பின் உண்மை அறிந்து நெகிழ்ந்து, நாயனம் கடல் கடந்து போவதை நிறுத்த துண்டை இழுத்து வம்பு செய்து ஆடும் ஒரு நாடகம், அதனுள் நிகழும் விவாதம், சவால், சவாலை ஏற்று நாயனம் பொருமலோடு நகர்ந்தபின் 'வாழ்வு மீண்டதே' என