முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நெருப்புக்கோழி மனிதர்கள்

இந்தியா. இந்தியா? இல்லை, தமிழ்! இல்லை, தெலுங்கு! இல்லை, துளு! இல்லை, பிகாரி! இல்லை, ஒரியான்வி! இந்தியா இந்துக்களின் நிலப்பரப்பு.  அன்றும், இன்றும், என்றும். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல். வட-தென், கிழ-மேல் முனைகளிலும் இடைப்பட்ட பகுதிகளிலும் நிலப்பரப்பு, உணவு, உடை எவ்வாறு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட வாழ்வியல். பண்புகள், நன்மை தீமைகள் யாவற்றிலும் அடிப்படை ஒற்றுமை கொண்ட வாழ்வியல். ஐம்பூதங்களையும், அனைத்துயிர்களையும் வியந்து போற்றி வணங்கி வாழ்ந்த ஏராளமான தொல்குடியினரால் பாதுகாக்கப்பட்ட பெரும்பரப்பு. எனது வாழ்வு எனது நிலத்தில். உனது வாழ்வு உனது நிலத்தில். வந்தால் விருந்தினனாய் வா. நல்லது பகிர், நல்லது எடுத்துச்செல். இவை செய்யும்வரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பேருணர்வு நிறைந்த நிலம். வேறு நிலங்களிலிருந்து வந்தவர் எவரும் இங்கேயே இருந்துபோனதில்லை பண்டைய வாழ்வில். ரோமப்பேரரசு, பேரரசானபோதும், ரத்தம் சிந்தி சிதைந்தபோதும், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் என பல புதிய பெரிய வாழ்வியல் முறைகள் தோன்றி, தமக்குள் முட்டி மோதி, துரத்

காடேகுதல்

அகம் காண அகம் துறந்து காடேகி காண்பதும் காண விழைவதும் கானகமல்ல, காணகம். அடுத்தது காட்டும் கண்ணாடி போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் அல்ல காணகம். ஆதவன் மறைய நாளொளி விலக ஆதி இருளின் இன்றைய மௌனம் சூழ்ந்து ஓங்காரமிட ஆதி அச்சம் புதிதாய் கவ்வ உடலும் மனமும் ஒன்றாய் மாற இதயத்துடிப்பு காதில். காணும் பச்சை காணா பச்சை மெல்ல கருமை மெய் அழித்து அச்சம் கரைக்க மீண்டும் குழந்தையாகி ஆதி தொப்புள்கொடியை  புலன்வழி இணைத்து ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி உளது இலதாகி இலது உளதாகி காரிருளில் காற்றிலணையா தீபமாகி யாதுமாகி கூடு விட்டு கூடு பாய்ந்து ... காண்பது அகம். கானகமல்ல காணகம்.

கேள்வி வேள்வி

எது இதம்? எது பதம்? எது சிவம்? எது மனம்? எது அகம்? எது குணம்? எது சுகம்? எது அறம்? எது மறம்? எது கணம்? எது நிணம்? ... ஜீவிதம், தினம் தினம்.

சுவடுகள் பதிவான கதை

நான் இளைப்பாறியிருந்த குடில் அருகில் அவளை பார்த்தேன். தன்னைச்சுற்றி பரபரப்பாய் இயங்கும் உலகத்தை மோனப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள். அவ்வப்போது வீசும் காற்றோடு கரங்களை அசைத்தபடி, பெய்யும் மழைத்துளிகளில் நனைந்தபடி.  "அட, என்னைப்போல் ஒருத்தி!" என கண்டதுமே மையலானேன். மரியாதைக்குறிய இடைவெளியில் நின்றுகொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'நீதானா அது?' என்பதாக ஒற்றைப்பார்வை; பறவைகள் என்னைப்பற்றி அவளிடம் ஏதேனும் சொல்லியிருக்கலாம்... பல வருடமாய் அங்கு உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்தவளாம். எறும்புக்குக்கூட தீங்கிழைக்காத கூட்டமாம்.  ஏனென்றே தெரியாமல், முன்னறிவிப்பின்றி, கூட்டம் 'கூட்டமாய்' கொல்லப்பட, எஞ்சியவள் இன்று வரை ஒற்றையாய்... சில நாள் நட்புடன் உரையாடியபின்னரே அவளை படம் எடுக்க அனுமதி கேட்டேன். 'என் அழகை படமெடுக்க ஆவலா அல்லது நான் வாழ்ந்து காக்கும் என் சுற்றத்தின் (சு)வடு(க்)களை படமெடுக்க விருப்பமா?' என்றாள். "உன் விருப்பமே என் விருப்பம்" என்றேன்.

ஏதோ ஒரு பொழுதில்

ஏதோ ஒரு பொழுதில் எதிர்பாரா நொடியில் நினைவு இழைகள் அறுந்து... போகலாம். அந்தப்பொழுது இப்பொழுதல்ல. இவ்விரு பொழுதுகளின் இடைவெளியில் ஊடாடுது வாழ்வெனும் பெருநதி. கடந்த பொழுதின் நெளிவுசுளிவு வழி வழிந்தோடுது இன்றைய நம் பொழுது. இன்றைய திவலை அன்றைய திவலையல்ல. இன்றைய நுரை அன்றைய நுரையல்ல. இன்றைய கரை அன்றைய கரையல்ல. கரைதழுவி நதியோட நதிதழுவி வாழ்வோட ஓட்டத்தின் பெருமூச்சு உந்தித்தள்ளும் பொழுதுகளை. கடந்த பொழுதை மீண்டும் தீண்ட நதியோட்டம் இடம்கொடா. காலப்புதுவெள்ளம் கழுவிச்செல்லும் பழைய நதியின் எஞ்சிய பொழுதை. நழுவியோடும் வாழ்வு எவ்விதம் எனினும் நதி வழி நாம் விதைத்த கரை மரங்கள் நிற்கும் மௌனமாய் காலத்தின் சாட்சியாய் வாழ்வின் நீட்சியாய். நீருண்ட மகிழ்வில் உதிரும் இலைவழி நதியிறங்கும் நன்றிக்கடன். அண்டமும் பிண்டமும் ஒன்றான போதும் மரம் தருவதே நமக்கான பிண்டம். நதிநீ்ரின் சுழி சுழியின் கண் கண்ணின் கருவிழி எனது இக்கவிதை. நதி நமதானாலும் உன் கவிதையாகாது என் கவிதை.

கானல் நீரும் காணாமல் போகும்

கானல் நீரும் காணாமல் போகும் ######################### வருங்காலம் இனி வரும் காலமா அல்லது வெறுங்காலமா என அறிந்தும் அறியாத மோனப்பெருநுகர்வில் நாம் துயில, பேராசை பெருவணிக காலடிச்சுவடு பட்டு இதுவரை காணாமல் போனது போக எஞ்சிய காடும் மிஞ்சாது போகும் மிஞ்சிய மலையும் மடுவாய் மாறும் ஆறுகளின் தடமும் அழிந்து போகும் துண்டுபட்ட நிலமும் நஞ்சாகி முழுகும் கடல் கொப்பரையில் நீரினங்கள் வேகும் வானப்பறவைகள் வெந்து வசைபாடி சாகும் சுவாசக்காற்றே நுரையீரலை பொத்தலிட்டு சுடும் கானல் நீரும் காணாமல் போகும். நமக்கென்ன போச்சு பூமி  செத்தால்? பூமிக்கென்ன போச்சு நாம் செத்தால்? Dante's Divine Comedy is Real. We are turning earth into hell simply to stage it... பழைய உலகை சமைத்து உண்டு முடித்தபின் மட்டுமே புதியதோர் உலகு செய்வோம் என்பது வீண் வாதம்.  வெந்தது தணிய, எஞ்சியது வாழ, நாம் ஒவ்வொருவரும் ஒற்றை மரம் நட்டு வளர்த்தால் போதும்; நம் கையளவு பூமியேனும் தப்பிக்கும். 

அப்பா

அப்பா அ ப் பா அ   ப்   பா   அ                    ப்                     பா       நாம் வளர வளர, விலக விலக, விரிந்துகொண்டே போகும் ஆளுமை, நம் தகப்பன் கொடை ###### நல்ல தகப்பன் அமைவது இறை தரும் கொடை; 'என்னால ஒன்ன வாழ்க்க முழுசும் பாத்துக்க முடியாது. அதனால் இவர தந்திருக்கேன்' என இறை சொன்னதாய்... இன்று இந்தப்பதிவை படிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் பிடித்த அந்த சுண்டுவிரல் தந்த தைரியத்தில் எடுத்துவைத்த முதல் அடிதானே நமை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது?! நடிகர் திலகம் சிவாஜியைவிட அதிக கெட்டப்பில் நாம் அவரை வெவ்வேறு தருணங்களில் உணர்ந்து கொண்டாடினாலும் வெறுத்தாலும் அவர் எப்போதும்போல தகப்பனாகவே இருக்கிறார்... தாய் மார்பில் சுரக்கும் பாலும் வற்றிப்போகும், தன் குழந்தை பால்குடி மறந்தபின்; எங்கோ தொலைவில் மகனின் / மகளின் கிளைகள் என்று வாடினாலும், பட்டே போனாலும் ஈரம் கசியும் தகப்பன் மர வேரில், இன்றும் கூட... ஜெயகாந்தன் என்ற மகா எழுத்தாளுமை, ஒரு முறை தன் தகப்பனை பற்றி பகிர்கையில் இப்படி சொல்லியிருந்தாராம், 'திருப்பி அடிக்க முடியாத கோப