வருங்காலம் என்பது இனி வரும் காலமா
அல்லது வெறுங்காலமா என அறிந்தும்
அறியாத மோனப்பெருநுகர்வில் நாம் துயில,
பேராசை பெருவணிக காலடிச்சுவடு பட்டு
இதுவரை காணாமல் போனது போக
எஞ்சிய காடும் மிஞ்சாது போகும்
மிஞ்சிய மலையும் மடுவாய் மாறும்
ஆறுகளின் தடமும் அழிந்து போகும்
துண்டுபட்ட நிலமும் நஞ்சாகி முழுகும்
கடல் கொப்பரையில் நீரினங்கள் வேகும்
வானப்பறவைகள் வெந்து வசைபாடி சாகும்
சுவாசக்காற்றே நுரையீரலை பொத்தலிட்டு சுடும்
கானல் நீரும் காணாமல் போகும்.
நமக்கென்ன போச்சு பூமி செத்தால்?
பூமிக்கென்ன போச்சு நாம் செத்தால்?
Dante's "Divine Comedy" is Real. We are turning earth into hell simply to stage it... The forest fires just say so.
பழைய உலகை எரித்து முடித்தபின் மட்டுமே புதியதோர் உலகு செய்வோம் என்பது வீண் வாதம்.
வெந்தது தணிய, எஞ்சியது வாழ, நாம் ஒவ்வொருவரும் ஒற்றை மரம் நட்டு வளர்த்தால் போதும்; நம் கையளவு பூமியேனும் தப்பிக்கும்.
பேரன்புடன்,
பாபுஜி
கருத்துகள்
கருத்துரையிடுக