அப்பா
அ ப் பா
அ ப் பா
அ ப் பா
நாம் வளர வளர, விலக விலக, விரிந்துகொண்டே போகும் ஆளுமை, நம் தகப்பன்
கொடை
######
நல்ல தகப்பன் அமைவது இறை தரும் கொடை; 'என்னால ஒன்ன வாழ்க்க முழுசும் பாத்துக்க முடியாது. அதனால் இவர தந்திருக்கேன்' என இறை சொன்னதாய்...
இன்று இந்தப்பதிவை படிக்கும் நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் பிடித்த அந்த சுண்டுவிரல் தந்த தைரியத்தில் எடுத்துவைத்த முதல் அடிதானே நமை இத்தனை தூரம் கொண்டு வந்திருக்கிறது?!
நடிகர் திலகம் சிவாஜியைவிட அதிக கெட்டப்பில் நாம் அவரை வெவ்வேறு தருணங்களில் உணர்ந்து கொண்டாடினாலும் வெறுத்தாலும் அவர் எப்போதும்போல தகப்பனாகவே இருக்கிறார்...
தாய் மார்பில் சுரக்கும் பாலும் வற்றிப்போகும், தன் குழந்தை பால்குடி மறந்தபின்; எங்கோ தொலைவில் மகனின் / மகளின் கிளைகள் என்று வாடினாலும், பட்டே போனாலும் ஈரம் கசியும் தகப்பன் மர வேரில், இன்றும் கூட...
ஜெயகாந்தன் என்ற மகா எழுத்தாளுமை, ஒரு முறை தன் தகப்பனை பற்றி பகிர்கையில் இப்படி சொல்லியிருந்தாராம், 'திருப்பி அடிக்க முடியாத கோபமல்லா அது!' என.
வலி மிகுந்த வரிகள். அவர் பக்கம் நியாயம் இருந்திருக்கலாம். வேதனைகளும் மிகுந்திருக்கலாம்.
அவருக்கு இறை அருள் (நல்ல தகப்பன்) கிட்டாதிருந்திருக்கலாம்.
எப்படி இருந்தாலும்,
'திருப்பி செலுத்தவே முடியாத நன்றிக்கடனும் அதுவே, அது மட்டுமே' அல்லவா?
நன்றியுடன் கொண்டாடுவோம்.
அப்பா என்ற சொல்லுக்கு (உணர்வுக்கு) முற்றுப்புள்ளி கிடையாது.
கருத்துகள்
கருத்துரையிடுக