அகம் காண
அகம் துறந்து
காடேகி காண்பதும்
காண விழைவதும்
காண விழைவதும்
கானகமல்ல, காணகம்.
அடுத்தது காட்டும்
கண்ணாடி போல
நெஞ்சம் கடுத்தது
காட்டும் முகம்
அல்ல காணகம்.
ஆதவன் மறைய
நாளொளி விலக
ஆதி இருளின்
இன்றைய மௌனம்
சூழ்ந்து ஓங்காரமிட
ஆதி அச்சம்
புதிதாய் கவ்வ
உடலும் மனமும்
ஒன்றாய் மாற
இதயத்துடிப்பு காதில்.
காணும் பச்சை
காணா பச்சை
மெல்ல கருமை
மெய் அழித்து
அச்சம் கரைக்க
மீண்டும் குழந்தையாகி
ஆதி தொப்புள்கொடியை
புலன்வழி இணைத்து
ஒன்று பலவாகி
பலதும் ஒன்றாகி
உளது இலதாகி
இலது உளதாகி
காரிருளில் காற்றிலணையா
தீபமாகி யாதுமாகி
கூடு விட்டு
கூடு பாய்ந்து
...
காண்பது அகம்.
கானகமல்ல காணகம்.
கருத்துகள்
கருத்துரையிடுக