முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

என் விழித்திரையில் - சுடலை மாடன்!

என் விழித்திரையில் - சுடலைமாடன்! 'சே, பஸ்ச மிஸ் பண்ணியாச்சே! இப்ப என்ன பண்றது?' காலேஜ்க்கு அடுத்த பஸ் இரண்டு மணி நேரம் கழித்து என அறிந்ததும் அருகில் இருந்த தியேட்டரில் டிக்கட் வாங்கி ('படம் போட்டு இருவது நிமிசம் ஆச்சி' என்றார் டி. கிழிப்பவர்) நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் முன்கதை பிடிபட்டுவிட்டது. ஒரு சிற்றூரில் கோயில் பூசாரியின் மகனும் அதே ஊரில் ஒரு பெரிய மனிதரின் வைப்பாக இருக்கும் பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்க காதல் பற்றிப்பரவி அவள் உண்டாகிறாள். ஏராளமான அவமானங்களோடு ஊர் எல்லை தாண்டி ஒதுக்கி விடப்படுகிறாள்.  பூசாரி தந்தை ஊர்த்திருவிழாவில் சுடலைமாடசாமியாக அந்த வருடம் வரை இரா வேட்டைக்கு வழக்கமாக செல்பவர், கூடிய சபை நடுவில் கல்லூரிப்படிப்பு படிக்கும் மகனுக்கு அந்த பொறுப்பை திணிக்கிறார்.  தந்தை ப்ளஸ் ஊர்க்கட்டுப்பாடுகளை மீற இயலாத மகன் முதன் முதலாய் சுடலைமாடனாய் இரவில் வேட்டைக்கு கிளம்புகிறார். வேட்டைக்கு செல்கையில் எதிரில் எவர் வந்தாலும் கொன்று விடுவார் என ஐதீகம். எனவே ஊர் அடங்கிக்கிடக்கிறது.  ஊர்

சுழியில படகுபோல என் மனசு...

இந்த மண்ணின் எழுத்து, இந்த மண்ணின் இசை, இந்த மண்ணின் உணர்வு... மூன்றும் சேர்ந்து தந்த இந்த முத்துப்பாடல்... One for the Ages, #onemoresong ராசாவே உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க அது உசுர வந்து உருக்குதுங்க வந்து சொல்லாத உறவை இவ நெஞ்சோடு வளர்த்தா அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுத்தா (ராசாவே) பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது உன்னையும் என்னையும் வச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது அடடா எனக்காக அருமை கொறைஞ்சீக தரும மகராசா தலைய கவுந்தீக களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பெரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு (ராசாவே) காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு உனக்கே வச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காது மூக்கு வச்சு ஊருக்குள்ளே பேச்சு ----------------------------------------------------- அமைதியான இரவில் எங்கோ தொலைவில் ஏதோ ஒரு வீட்டு மொட்டை

10*40 - காடு - சகல வசதிகளுடன் :-)

ஒரு காடை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு சிரமப்படவேண்டும்? Question: How difficult is it to create a forest? சில மரக்கன்றுகள், நிறைய ஆர்வம், தேவையான அளவு உப்பு போல நம்பிக்கை, தளராத முயற்சி. அவ்வளவே காடு வளர்க்கப்போதுமானது! நீங்களே சொல்லுங்களேன் இது எவ்வளவு கடினமானதென்று?! Answer: Take a bunch of saplings, add lot of enthusiasm, sprinkle some hope, persevere, persevere... and voila! You got a forest! Easy doozy :-) இரு ஜோடிக்கரங்கள், ஆறு வருட சோம்பேறித்தனமான (ஆனால் தளராத!) முயற்சி, கண்முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கும் அற்புதத்தை விழி கொள்ளாமல் உள்வாங்க முயலும் குழந்தை ஆர்வம், இதோ காடு ஆச்சு! Just two pair of hands, Six years of leisurely efforts and ever growing wonderment went into making this urban patch of green (10 feet * 40 feet only!) that houses innumerable lives now :-) நகரத்தில் வீட்டருகே 10*40 இல் சகல வசதிகளுடன் காடு ரெடி! எந்த விளம்பரமும் இல்லாமலேயே  House Full :-) காக்கை, குருவி, செம்போத்து, கௌதாரி, காடை, தேன் சிட்டு, தவிட்டுக்குருவி, மனங்கொத

ஈரம் விழுந்தாலே

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது! வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா உண்மையிலே உள்ளது என்ன என்ன? வண்ணங்கள் என்ன என்ன? கதையாய் சிறுகதையாய் ஆவதில்லையே அன்புதான்! ஈர நிலத்தில் நம் கால் பதிந்த இடமெலாம் ஏதாவதொன்று முளைக்கட்டும்... தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசிலே...

பச்சை வயல் மனது - காயாது.

பச்சை வயல் மனது. பதின்பருவத்தில் கண்ணன்.R, பள்ளித்தோழன், அடிக்கடி சம்பந்தமே இல்லாமல் என்னிடம் 'வாழ்க்கையே போர்க்களம், வாழ்ந்துதான் பார்க்கணும்' என்று போர் முழக்கம் போல் சொல்லி, கடந்து செல்வான். பொறுக்க முடியாமல் ஒரு நாள் நிறுத்தி கேட்டதும் 'பாலகுமாரன்' என்றான். ராமநாதபுரம் அப்போது சிறிய டவுன். ஒரே ஒரு லைப்ரரி, தி.ஜா, கல்கி, தமிழ்வாணன், அகிலன், சாண்டில்யன், லா.ச.ரா, சுஜாதா என கதம்பமாய் இருக்கும். 'வாழ்க்கையே போர்க்களம்' என மந்திரம் போல் சொல்லிப்பார்த்துக்கொண்டு உள் நுழைந்து தேடிய என் கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'மெர்க்குரிப்பூக்கள்'. அன்று தொடங்கிய வாசிப்பை பல வருடங்களுக்கு நிறுத்தமுடியவில்லை, அவரை பாக்கெட் நாவல்கள் ஆக்கிரமிக்கும் வரை... சுஜாதா, திஜா, லாசரா தவிர மற்ற எல்லோரையும் ஓரம் கட்டவைத்த நடை, நேர்மை, திமிர்... மெ.பூக்கள். பூவிலிருந்து குதிரைக்கு தாவினேன். குதிரைகள் குறி விறைத்து நிற்கும் காட்சி யோகத்தின் உச்சம் என படித்தபின் குதிரையை காணத்தேடி அலைந்த நாட்கள், 'இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... இருபது நிலவுகள் நகமெங்கும

என் இறகின் சுவடே காடு!

தன் சிறு வயிற்றில் பெருங்காடு சுமந்து, விசை கூட்டி விரைந்து பெரும்பரப்பு கடந்து, கடந்த இடமெல்லாம் கடக்கும்பொழுதெல்லாம் இயன்றவரை விதைபரப்பி காடு வளர்க்கும் இந்த சிற்றுயிர்.  காடென்பதென்ன? என்ற அறிதல் நமக்கு வேண்டுமானால் தேவைப்படலாம்; அதற்கு அல்ல.. உண்ட பழம் வயிற்றில் செரித்தால்மட்டும் போதாதென பழ விதை வீறுகொண்டு முளைக்க 'வேண்டி' வயிற்றில் அமிலம் சுரந்து... முளைத்தாலென்ன முளைக்காவிட்டாலென்ன என்ற கேள்விகளுக்கு அப்பால் பறந்து விதைகள் தூவி...  மீண்டும் காட்டின் விதை தேடி தொடரும் இதன் பயணத்தில் கூடென்பது குஞ்சுகளுக்கு மட்டுமே. இன்றுவரை பழங்களை கூடுகளில் தனக்காகவோ குஞ்சுகளுக்ககவோ சேமித்து வைக்கும் பறவையை யாரேனும் கண்டதுண்டா? இப்பறவைகளை மரங்கள் நேசிப்பது இயற்கைதானே! மரங்களில் வாலில் தொங்கி தாவிப்பழகி இறங்கி நிலம் முழுதும் பல்கிப்பெருகிய நம் கூட்டமும் விதைத்துக்கொண்டுதானே இருக்கிறது நஞ்சு தோய்ந்த எண்ணங்களையும் சொற்களையும்? இந்நஞ்சில் கருகிய கனவுகள் எத்தனை? உணர்வுகள், நினைவகள் எத்தனை?  பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறு தீவில் நம் இனம், மரத்தை வீழ்த்த பயன்படுத்துவ

என் விழித்திரையில் : The Hurricane - வெளுப்பு கருப்பு வெறுப்பு!

ரூபன் 'Hurricane' கார்ட்டர். கறுப்பு அமெரிக்கன். குத்துச்சண்டை வீரன்.  1960களில் ஒரு அமெரிக்க 'உலக' சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளை போட்டியாளனை தோற்கடித்ததை 'விழுங்க' முடியாத வெள்ளை நடுவர் குழு அவன் தோற்றதாய் அறிவிக்கிறது. சிறுவயது முதலே அவனை கருப்பனென்ற ஒரே காரணத்திற்காக வெறுக்கும் உள்ளூர் காவல் அதிகாரி ஒருவர். வெள்ளையர். அவ்வூரில் நடந்த ஒரு வெள்ளையனின் கொலையில், சாலையில் நடந்துகொண்டிருக்கும் ரூபனையும் அவனது கருப்புத்தோழனையும் வழி நிறுத்தி 'இரு கருப்பர்களை தேடுகிறோம், பார்த்தாயா?' என வினவுகிறார். 'Shall any two blacks do?' (எந்த இரண்டு கருப்பராயிருந்தாலும் போதுமா?') என ஆத்திரத்தோடு ரூபன் கேட்க, கைதாகிறான், வெளியில் வர இயலாத தண்டனை பெற்று. செய்யாத குற்றத்துக்காக சிறையில் நுழைந்த நொடி முதல் அவன் சந்திக்கும் இனப்பாகுபாடு அவமானங்களை எப்படி எதிர்கொள்கிறான், எப்படி எதிர்க்கிறான், தனிமைப்படுத்தப்பட்டு உடலைத்திருப்பக்கூட இடமில்லாத வெளிச்சமேயற்ற அறையில் எவ்வாறு நாட்களை நகர்த்துகிறான், சிறை வாழ்வு எப்படி என்பதை எல்லாம் புத்தக