முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதயமே இதயமே, உன் மௌனம் என்னை...

கோவை நகரின் இதயத்துடிப்பை உணர எளிதான வழி, டவுன்ஹாலின் ஒப்பணக்கார வீதியில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலையில் நடந்து சுற்றுவது.  ரயில்வே ஜங்ஷனின் பின்புறம் தொடங்கி பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் துவங்கும் இடம் வரை பரவியிருக்கும் ஒரு பெரிய இதயம் இப்பகுதி. விலை உயர்ந்த நகைக்கடைகள், மலிவு விலை அலங்கார நகைக்கடைகள், சோப்பு, சீப்பு, செருப்பு, பெல்ட்டு, நாட்டு மருந்து, லாலா இனிப்பு, திரஜ்லால் மிட்டாய்வாலாக்கள், கடிகார கடைகள், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள், இன்னும் ளராளமான கடைகளை உள்ளடக்கிய ஒரு மகா நெரிசலான பகுதி. ஏராளமான உணவகங்கள், இடையிடையே கோவில்கள் / மசூதி / தேவாலயம் + அங்கங்கே வட இந்திய சகோதரர்களின் வறுகடலை, அவித்த கடலை விற்கும் தள்ளு வண்டிகள் + நம்ம ஊர் பெண்களின் தட்டுக்கூடை பூக்கடைகள் என முடிவற்று நீளும் இப்பகுதி, இரவு நேரங்களில் நியான் வெளிச்சத்தில் நனையும்போது வேறொரு பரிமாணம் காட்டும். இந்தபகுதியின் தனித்தன்மை என்னவென்றால் இங்கு ஐந்து ரூபாய்க்கும் மகிழ்வு தரும் பொருட்கள் கிடைக்கும், ஐந்து லட்சத்துக்கும் கிடைக்கும். One of the few remaining Democratic spaces in which rich and poor jos...

நியாண்டர்தால் இடியாப்பம்!

நம் தமிழ் உணவுகளிலேயே சிக்கலான உணவு இடியாப்பமாகத்தான் இருக்கும். ஊறவைத்த அரிசியோடு தேங்காய் கலந்து அளவாய் உப்பு இட்டு மாவாக அரைத்து, இட்டிலித்தட்டுகளில் கரண்டி கரண்டியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து, வெந்த பின்பு இட்டிலிகளை ஒன்றுக்கு இரண்டாய் இடியாப்பம் பிழியும் அச்சில் திணித்து பிழியப்பிழிய கீழ் தட்டில் மிருதுவாக நூல் நூலாய் இறங்கும் இடியாப்பத்தை தட்டு சுற்றிச்சுற்றி சேர்த்து, பின் தேங்காய் சர்க்கரை சேர்த்து கொஞ்சம், மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம், கடுகு வரமிளகாய் தாளித்த எலுமிச்சைச்சாறு கொஞ்சம், புளியோதரை குழம்பு கொஞ்சம், சின்ன வெங்காய சாம்பார் கொஞ்சம், தயிர் கொஞ்சம் என தனித்தனியே சேர்த்து கிளறி, குடும்பத்தோடு அமர்ந்து உண்ணும் சுகம், விக்ரம் வேதா திரைப்பட பரோட்டா நல்லிக்கறி அனுபவத்தை விட மேன்மையானது என்பதை உண்டவர் உணர்வர்! நியாண்டர்தால் காலத்தில் இடியாப்பம் அறிந்திருக்கவில்லை. தீ பற்றியும் அறிந்திருக்கவில்லை.  பிற்பாடு பரிணாம வளர்ச்சியில் நவீன மனிதர்கள் வளர்ந்து நாகரிகம் வளர்த்து இடியாப்பம் உண்டு இன்று செவ்வாயில் ரியல் எஸ்டேட் கனவுகளில் மிதந்தாலும் நம் பரிணாம தொன்மத்தின் எச்சமாய் நம் உட...

ஓவ்!

தமிழ் என்பது மொழி மட்டுமா? நம் ஊரில் ஒரு உணவகம். காலை டிஃபனுக்கு கூடிய கூட்டத்தின் நடுவில் சுறுசுறுப்பாய் ஆவி பறக்கும் இட்லிகளை தட்டில் ஏந்திக்கொண்டு, பூக்களில் தேன் குடிக்க தத்தித்தாவும் சிறு குருவி போல அந்த பெண் வெகுவேகமாய் பரிமாறிக்கொண்டே வந்தார். என் எதிரில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவர் அந்தப்பெண்ணை நோக்கி ஏதோ வேண்டுமென்று குரல் கொடுக்க, அவரைத்தாண்டி சென்றுகொண்டிருந்த பெண் நின்று திரும்பி, 'ஓவ்' என்றார். அந்த மனிதரும் அந்தச்சொல் மிகவும் பழக்கமான ஒன்றாக பாவித்து தான் கேட்டதை மறுமுறை கூறினார்.  தலையசைத்து நகர்ந்த பெண் சற்று நேரம் கழித்து உணவு ஒன்றை அவரிடம் தந்து சென்றார். அவர் என் இருக்கையை கடக்கும் முன் நட்பு புன்னகையுடன் அவரை நிறுத்தினேன். ஏனெனில் ஓவ் என்ற அந்த ஒற்றைச்சொல் அவருடன் எனக்கு நொடியில் ஒரு நட்பு உணர்வை தந்திருந்தது. 'தஞ்சாவூரா?' என்றேன். நூறு சூரியப்பிரகாசத்துடன், "ஆமாங்கண்ணே!" என்றார். மேலே நான் எதுவும் கேட்பதற்கு முன் அவராகவே, 'இதோ, இங்கணதான், வல்லத்தில வீடு. வல்லம் தெரியுமா? வந்திருக்கீங்களா?' என வாஞ்சையுடன் கேட்டார். 'வந்திருக்க...