நட்சத்திரங்கள் பொறுக்கி... நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் கனவு தேசமிது. வேறெங்குமில்லாத அளவில் இங்கு மட்டும் இத்தனை நட்சத்திரங்கள். தொலைந்து போன கனவுகளை இட்டு நிரப்ப எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. உடைந்துபோன ஆன்மாக்களை சேர்த்து ஒட்டவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவைப்படுகிறது. சிறு வயது சிராய்ப்பு காயங்களுக்கு எச்சில் கவசம் அணிவித்த எங்களின் வளர் பருவ பெருங் காயங்களுக்கு நட்சத்திரங்கள்தான் கவசமாகிறது... தீராப்பெருங்காயமென வன்புணர்வு வளர்ந்தபோதும் உதிரம் துடைக்கவும் கோபம் விழுங்கவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் நிறைய தேவை. வன்புணர்வு உடலில் மட்டுமா என்ன? மனக்காயங்களுக்கும் நாங்கள் நட்சத்திரங்களைத்தான் மருந்தாக விழுங்குகிறோம். தன்னிலை மறந்து பலர் கொக்கரிக்க சிலர் தலைகவிழ்ந்து நிற்க நாங்கள் கையறு நிலையில் நிற்கையில் எங்கிருந்தோ நீண்ட கரத்திலிருந்து எங்கள் மானம் காக்க பெருகியோடிய ஆடையாறு கூட முழுக்க முழுக்க நட்சத்திரங்களால் நெய்யப்பட்டவைதான். விடாது துரத்தும் வாழ்வின் துயரங்களில் இருந்து ஒடுங்கி நாங்கள் சற்றே இளைப்பாறவும் முடங்கிக்கொள்ளவும் எங்களுக்கு நட்சத்திரங்கள் தேவை. அரிதினும்...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!