நம் ஈரல்குலையை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த மகாமாரியும் 'கடந்து போகும்'. "சூப்பர்! சீக்கிரமே நார்மல்சி திரும்பிடும்!" என்றுதான் நாம் அனைவரும் மகிழ்வோம். நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான வாழ்வியலுக்கு நாம் திரும்பவே வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்! நார்மல் வாழ்க்கை இதுவரை என்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறதென்று பார்ப்போம்: - இயற்கை வளங்களை கண்மூடித்தனமாய் கொள்ளையடித்தது - வசதி இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியது - பூமியின் துரையீரலில் (காடுகள்) கோடானுகோடி ஓட்டைகள் இட்டது, தலைக்கவசமாய் நமை காக்கும் ஓசோன் படலத்தை கிழித்தது, காற்று மாசு மூலம் நம் நுரையீரல்களையும் பதம் பார்த்தது - மனிதர்களுக்கிடையில் தீரா வெறுப்பை விதைத்தது - கானக வாழ் மக்களை ரேஷன் கடைகள் முன் வரிசையில் நிற்கவைத்து அரிசி, பருப்புக்காக கையேந்தவைத்தது - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நார்மல், மறுபடி வேண்டவே வேண்டாம். புதியதொரு விதி செய்வோம்... என ஒரு புதிய நார்மல்சியை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது...உருவாக்கவேண்டியிருக்கி...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!