நம் ஈரல்குலையை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த மகாமாரியும் 'கடந்து போகும்'.
"சூப்பர்! சீக்கிரமே நார்மல்சி திரும்பிடும்!" என்றுதான் நாம் அனைவரும் மகிழ்வோம்.
நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான வாழ்வியலுக்கு நாம் திரும்பவே வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்!
நார்மல் வாழ்க்கை இதுவரை என்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறதென்று பார்ப்போம்:
- இயற்கை வளங்களை கண்மூடித்தனமாய் கொள்ளையடித்தது
- வசதி இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியது
- பூமியின் துரையீரலில் (காடுகள்) கோடானுகோடி ஓட்டைகள் இட்டது, தலைக்கவசமாய் நமை காக்கும் ஓசோன் படலத்தை கிழித்தது, காற்று மாசு மூலம் நம் நுரையீரல்களையும் பதம் பார்த்தது
- மனிதர்களுக்கிடையில் தீரா வெறுப்பை விதைத்தது
- கானக வாழ் மக்களை ரேஷன் கடைகள் முன் வரிசையில் நிற்கவைத்து அரிசி, பருப்புக்காக கையேந்தவைத்தது
- இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த நார்மல், மறுபடி வேண்டவே வேண்டாம்.
புதியதொரு விதி செய்வோம்... என ஒரு புதிய நார்மல்சியை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது...உருவாக்கவேண்டியிருக்கிறது இப்போது, அவசரமாய், அவசியமாய்.
இத்தனை நாளாய் நம் காதுகளை குடைந்துவரும் மகாமாரியின் ஓலங்களை விடுத்து, நம்மை சுற்றி இயற்கை நடத்திவரும் அற்புத மாற்றங்களுக்கு நாம் ட்யூன் ஆக வேண்டிய நேரம் இது.
நமக்கும் இயற்கைக்குமான உறவை மறுபரிசீலனை செய்து, மேம்படுத்தி, புதுப்பிக்கவேண்டிய நேரம் இது.
இந்த மகாமாரியின் அலை ஓய்ந்துபோகும். அதன் பின் வரும் நாட்களில் நன்றியுடன் இருப்போம், பணிவுடன் இருப்போம், உயிர்ப்புடன் இருப்போம் (be alive in the truest sense).
இந்த உலகு இந்த நொடியில் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது தெரியுமா?!
World around us is alive and kicking right at this very moment!
----------
"எல்லாமே இயற்கைதானா? அப்ப டெக்னாலஜினால நமக்கு பயனே இல்லையா என்ன?!
டெக்னாலஜி எப்டி நம்ப வேர்ல்ட பெட்டராக்கிருக்குதுன்னு நீங்க அவசியம் எழுதணும்"
னு ஒரு நண்பர் கேட்டதால் இதோ இந்த வால் பதிவு (tail piece:-)
-----
ரொம்ப சிம்ப்பிள்ங்க.
லிவ் அன்ட் லெட் லிவ் பாலிசிபடி செயல்படுகிற தொழில்நுட்பங்கள் உலகை காக்கும்.
மனுசப்பயலுகள் நாம அதை ட்விஸ்ட்டு ட்விஸ்ட்டுன்னு ட்விஸ்ட்டு பண்றமே!
டெக்னாலஜி, உலக செய்திகளை உடனுக்குடன் நம் உள்ளங்கைகளில் சேர்க்க உதவியது.
அதேதான்
"கிம் ஜோங்கு வெள்ள குருதைல கெளம்பிட்டாரு, எத்தன ராக்கெட்டு பறக்கப்போகுதோ!"
"ஐயோ, அங்க கொரோனா, இங்க கொரோனா"
'ஐயா! கிம் ஜோங்குக்கு கொரோனா, வோர்ல்டு ஹாப்பி அண்ணாச்சி'
இப்போ, 'கிம் ஜோங் ட்ரெயின் ஒரு ரெசார்ட்ல பார்க் ஆயிருக்குலே! அவரு அங்க ரஸ்க்கு சாப்ட்டுட்டுருக்கார்லே! பயபுள்ள சாகலல்லே!' என கொட்டுகிறது.
அதைவிட கொடும பாஸ், அப்பப்போ 'சற்று முன் மூன்று ஏலியன் குட்டிகள் வாணியம்பாடியில்(!) கண்டுபிடிக்கப்பட்டன!' னு WHATSAPP ல... ராத்திரியெல்லாம் பயத்துல தூங்கவுடாம...
A tool is just that, it can enable / kill, சுத்தியல் மாதிரி, அருவா மாதிரி!
தொழில்நுட்பத்தில தப்பே இல்ல, அத புடிச்சிருக்கிற கைலதான் பாஸ் அம்புட்டும்!
----+++-----
கருத்துகள்
கருத்துரையிடுக