முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதிகெட்டான் சோலை

சாலைகளே இல்லாத வசிப்பிடங்களை, தண்ணீர்க்குழாய்கள் இல்லாத, கழிப்பறைகளே இல்லா வீடுகளை, உறங்கும்வரை செயற்கை ஒளி உமிழா இருள்பொழுதை நம்மால் கற்பனையில்கூட வாழமுடியுமா? ஆலைக்காடுகள், உணவுக்காடுகள், வணிகக்காடுகள், தடுப்புக்காடுகள், காகிதக்காடுகள், எண்ணெய்ப்பனங்காடுகள், பணங்(காய்ச்சி)காடுகள், அரண்காடுகள்... புத்தியுள்ள மனிதரெல்லாம் தமக்கு தோன்றிய பெயர்களில் எல்லாம் காடுகள் "வளர்க்க" உலகம் முழுதும் முயல்கிறார்கள். தொடக்க பத்தியில் எதுவெல்லாம் இல்லாது கற்பனையில்கூட வாழமுடியாது என்று எண்ணுகின்றனரோ அவற்றை எல்லாம் முதலில் அங்கு செய்து முடித்தபின்னரே அவர்கள் காடுகளென கற்பிதம் செய்த நிலப்பரப்பில் இந்த கட்டமைப்புக்குள் பதுங்கி ஓய்வில் திளைக்கிறார்கள், வணிகம் வளர்க்கிறார்கள். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிபெறுவதில்லை... ஏனெனில் காடுகளை "உருவாக்க" மனிதர்களால் முடியவே முடியாது.  காடுகள் ஆதி தொட்டே பறவைகள் வழி, விலங்குகள் வழி, நீர்வழிகளுக்கு அருகில் உண்டாகுபவை. காற்றின் வழி, எச்சம் வழி வளர்பவை, (பறவைகள் / விலங்குகளின்) உணவுப்பழக்கம் வழி நேர்த்தி செய்யப்படுபவை.

சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை Chota Chota Aasha Small little wishes உங்க சின்ன சின்ன ஆசைகள் என்ன? வீடு. தண்ணீர், பைப்பில். தண்ணியில்லேன்னா என்ன பண்ணுவீங்க? தண்ணி முன்னே எங்க இருந்தது? இப்போ எங்க இருக்கு? ஏன் ஓடி ஒளிஞ்சுது? நாம எல்லோரும் இருக்கிறது யாரோட வீடு? எத்தன பேரு ஆறு பாத்திருக்கீங்க? குளம்? ஏரி? காடு? காடு என்பது என்ன? Self sufficient eco system that is self sustainable also. அள்ள அள்ள குறையாது, அளவாய் அள்ளினால். உலகமே மிகப்பெரிய காடு. காட்டை விரட்டி நாடு. நம் ஊரை விட்டு ஓடிப்போன காடு இப்போது எங்கே? காடு இல்லாத நம் ஊர் எப்படி இருக்கிறது? காடும் விலங்குகளும் காடும் மரங்களும் விலங்குகளும் மரங்களும் பறவைகளும் மரங்களும் மரங்களும் தண்ணீரும் தண்ணீரும் விலங்குகளும் எப்படி ஒத்திசைவா இயங்குது? காடு எப்படி சுத்தமா இருக்கு? நாடு ஏன் குப்பையா இருக்கு? காக்காவையே நம்ம ஊர்ல காணுமே! ஏன்?? (நாங்க பாக்கிறமே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். கூடிய விரைவில் தேடப்போகிறீர்கள்! நாம் நஞ்சிட்டு கொல்லும் உயிர்களை தின்னும

Change Monkey

"The bloody system is wrong. It is designed to be so. Otherwise life wld be a breeze!" Applies to any country. There will always be some system that wld relentlessly pursue 'development' at any cost. There is a way to tackle it though; do what we can with our limited means in our life time to be one with nature. Imagine 6 billion people minus politicos of the world doing just this and you may feel it's magnitude. If you still seriously want to change the system. start planting trees and shrubs wherever you can...and keep doing as long as the desire to change the system (burns in you). People who rest under the trees you planted will know instinctively that something has changed and someone has changed it for them; trees remember and.. they enlighten too :-) An MKG quote: “First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.”

நீதான் விவசாயி! Wanna be a Famer?

Bilingual. இருமொழி பதிவு. கார்பரேட் விவசாயிகளுக்கு ... For the White Collar jobbers who dream farming all the time... விவசாயம் செய்ய நிலம் தேவையில்லை. சில மரக்கன்றுகளும், அவற்றை நட்டு வளர்க்கும் உறுதியும் போதும். You don't need farm land to do farming. A handful of saplings, the conviction to plant and nurture them will do. மனம் இருந்தால் மார்க்கம் மட்டுமல்ல, பசுமை வாழ்வியலும் உண்டு. Where there is a will there there is a way (to green living). உனது சாலைகள் உனதே. விவசாயத்தை சாலைகளில் தொடங்கு. ஏதாவது நடு. Our streets are ours! Start farming your streets; plant something that grows! ஒற்றை மரமாவது நட்டு வளர்த்தலே விவசாயி ஆவதற்கான முதல் கற்றல். Planting and nurturing at least one sapling - first step to become a farmer. மரம் நட வழியில்லையா, பூச்செடிகளாவது நடு். தேனீக்களின் நட்பாவது கிட்டும். Plant a flower plant if you can't plant a tree. Bees will become your friends. மரங்கள் சொல்லித்தரும் விவசாயம். Trees teach you farming. மரங

நெருப்புக்கோழி மனிதர்கள்

இந்தியா. இந்தியா? இல்லை, தமிழ்! இல்லை, தெலுங்கு! இல்லை, துளு! இல்லை, பிகாரி! இல்லை, ஒரியான்வி! இந்தியா இந்துக்களின் நிலப்பரப்பு.  அன்றும், இன்றும், என்றும். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல். வட-தென், கிழ-மேல் முனைகளிலும் இடைப்பட்ட பகுதிகளிலும் நிலப்பரப்பு, உணவு, உடை எவ்வாறு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட வாழ்வியல். பண்புகள், நன்மை தீமைகள் யாவற்றிலும் அடிப்படை ஒற்றுமை கொண்ட வாழ்வியல். ஐம்பூதங்களையும், அனைத்துயிர்களையும் வியந்து போற்றி வணங்கி வாழ்ந்த ஏராளமான தொல்குடியினரால் பாதுகாக்கப்பட்ட பெரும்பரப்பு. எனது வாழ்வு எனது நிலத்தில். உனது வாழ்வு உனது நிலத்தில். வந்தால் விருந்தினனாய் வா. நல்லது பகிர், நல்லது எடுத்துச்செல். இவை செய்யும்வரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பேருணர்வு நிறைந்த நிலம். வேறு நிலங்களிலிருந்து வந்தவர் எவரும் இங்கேயே இருந்துபோனதில்லை பண்டைய வாழ்வில். ரோமப்பேரரசு, பேரரசானபோதும், ரத்தம் சிந்தி சிதைந்தபோதும், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் என பல புதிய பெரிய வாழ்வியல் முறைகள் தோன்றி, தமக்குள் முட்டி மோதி, துரத்

காடேகுதல்

அகம் காண அகம் துறந்து காடேகி காண்பதும் காண விழைவதும் கானகமல்ல, காணகம். அடுத்தது காட்டும் கண்ணாடி போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் அல்ல காணகம். ஆதவன் மறைய நாளொளி விலக ஆதி இருளின் இன்றைய மௌனம் சூழ்ந்து ஓங்காரமிட ஆதி அச்சம் புதிதாய் கவ்வ உடலும் மனமும் ஒன்றாய் மாற இதயத்துடிப்பு காதில். காணும் பச்சை காணா பச்சை மெல்ல கருமை மெய் அழித்து அச்சம் கரைக்க மீண்டும் குழந்தையாகி ஆதி தொப்புள்கொடியை  புலன்வழி இணைத்து ஒன்று பலவாகி பலதும் ஒன்றாகி உளது இலதாகி இலது உளதாகி காரிருளில் காற்றிலணையா தீபமாகி யாதுமாகி கூடு விட்டு கூடு பாய்ந்து ... காண்பது அகம். கானகமல்ல காணகம்.