சின்ன சின்ன ஆசை
Chota Chota Aasha
Small little wishes
உங்க சின்ன சின்ன ஆசைகள் என்ன?
வீடு.
தண்ணீர், பைப்பில்.
தண்ணியில்லேன்னா என்ன பண்ணுவீங்க?
தண்ணி முன்னே எங்க இருந்தது? இப்போ எங்க இருக்கு? ஏன் ஓடி ஒளிஞ்சுது?
நாம எல்லோரும் இருக்கிறது யாரோட வீடு?
எத்தன பேரு ஆறு பாத்திருக்கீங்க?
குளம்?
ஏரி?
காடு?
காடு என்பது என்ன? Self sufficient eco system that is self sustainable also. அள்ள அள்ள குறையாது, அளவாய் அள்ளினால்.
உலகமே மிகப்பெரிய காடு.
காட்டை விரட்டி நாடு.
நம் ஊரை விட்டு ஓடிப்போன காடு இப்போது எங்கே?
காடு இல்லாத நம் ஊர் எப்படி இருக்கிறது?
காடும் விலங்குகளும்
காடும் மரங்களும்
விலங்குகளும் மரங்களும்
பறவைகளும் மரங்களும்
மரங்களும் தண்ணீரும்
தண்ணீரும் விலங்குகளும்
எப்படி ஒத்திசைவா இயங்குது?
காடு எப்படி சுத்தமா இருக்கு? நாடு ஏன் குப்பையா இருக்கு?
காக்காவையே நம்ம ஊர்ல காணுமே! ஏன்??
(நாங்க பாக்கிறமே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். கூடிய விரைவில் தேடப்போகிறீர்கள்! நாம் நஞ்சிட்டு கொல்லும் உயிர்களை தின்னும் காக்கைகள் மட்டும் தப்பிக்குமா என்ன?!)
விலங்குகளின் கூட்டத்திலிருந்து பிரிந்த விலங்கு, மனிதர்கள், நாம். சிந்திப்போமே.
சின்னதாய் ஒரு குட்டிக்கதை (செந்தமிழனின் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாய் நினைவு )
ஒரு இரவு மனிதர்கள் தூங்கி எழுந்து பார்த்தால், சுற்றிலும் வெட்டவெளி. எல்லாம் ஓவர்நைட்டில் காக்கா தூக்கிட்டு போச்சு.
ஏகப்பட்ட சத்தம் போட்டு, எல்லாரும் கடைசில சாமிகிட்ட போய் அவங்கவங்களோட தொலஞ்சிபோனதையெல்லாம் திரும்ப வரவழைக்க வேண்டுறாங்க.
அன்றிரவு தூங்கி எழுந்து பார்த்தால், மரம், செடி, கொடி, பூச்சி, பறவை, விலங்கு, தும்பி, ஊசித்தட்டான் எல்லாம் பறந்துகிட்டிருக்கு. பொடிப்பசங்கள்லாம் குஷியா விளையாட ஓடியாச்சி, பள்ளிக்கூடத்ததான் காணலயே!
பெரியவங்க எல்லாம் கவலையோட, கோவத்தோட சாமிகிட்ட ஓடுறாங்க; 'சாமீ! என்னோட வீடு, வண்டி, வாகனம், பணம், துணிமணி எல்லாம் காணாமப்போனது போனதுதானா? மத்ததெல்லாத்தையும் திரும்ப வரவச்ச நீ எங்களோடத மட்டும் புடிங்கிகிட்டியே!' ன்னு பொலம்பறாங்க.
பொலம்பல் தாங்கமுடியாத சாமிங்க எல்லாம் தரிசனம் தந்து, சொன்னது இதுதானாம் 'நாங்க படச்சத மட்டும்தானப்பு எங்களாக திரும்ப வரவைக்க முடியும். நீங்க படச்சத கொண்டான்னா எங்களால எப்படி முடியும்?'
(அடுத்த வாரம் சில நூறு பள்ளி கற்போருக்கு சொல்வதற்காய் ஆயத்தம் செய்தது)
கருத்துகள்
கருத்துரையிடுக