முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதான் விவசாயி! Wanna be a Famer?


Bilingual. இருமொழி பதிவு.

கார்பரேட் விவசாயிகளுக்கு ...
For the White Collar jobbers who dream farming all the time...

விவசாயம் செய்ய நிலம் தேவையில்லை. சில மரக்கன்றுகளும், அவற்றை நட்டு வளர்க்கும் உறுதியும் போதும்.
You don't need farm land to do farming. A handful of saplings, the conviction to plant and nurture them will do.

மனம் இருந்தால் மார்க்கம் மட்டுமல்ல, பசுமை வாழ்வியலும் உண்டு.
Where there is a will there there is a way (to green living).

உனது சாலைகள் உனதே. விவசாயத்தை சாலைகளில் தொடங்கு. ஏதாவது நடு.
Our streets are ours! Start farming your streets; plant something that grows!

ஒற்றை மரமாவது நட்டு வளர்த்தலே விவசாயி ஆவதற்கான முதல் கற்றல்.
Planting and nurturing at least one sapling - first step to become a farmer.

மரம் நட வழியில்லையா, பூச்செடிகளாவது நடு். தேனீக்களின் நட்பாவது கிட்டும்.
Plant a flower plant if you can't plant a tree. Bees will become your friends.

மரங்கள் சொல்லித்தரும் விவசாயம்.
Trees teach you farming.

மரங்கள், வாழ்வியலையும் சொல்லித்தரும்.
Trees teach you life.

கடந்துவந்த பாதையை திரும்பி பார்க்கையில், மலர்களும் மரங்களும் பாதையை சூழ்ந்திருந்தால், நீ சொர்க்கத்தை கண்டவர். அது நீ உருவாக்கிய சொர்க்கம்!
When you look back, if you see a riot of flowers and leaves around the path, you see heaven; the heaven you 'created'.

மரங்கள் புலம் பெயரா. ஆழ வேர்கள் இறக்கி தன்னை காத்து, அண்டிய அனைத்தையும் காப்பவை அவை. இதுதானே மண்ணோடு பிணைந்த நம் வாழ்வியல்?
Trees never seek greener pasture. They sink roots, fend themselves and feed all that come under their canopy. Original 'Children of the Soil' they are...

இருப்பிடத்தை பசுமையால் நிறைத்து, பேண். விவசாயம் கைகூடும்.
Fill your living spaces with plants and nurture them. These will nurture your dream of becoming a farmer and make it happen.

புல், பூண்டு அனைத்தையும் நேசி். களை என எதையும் இயற்கை படைப்பதில்லை. களைக்கொல்லி என்பது உயிர்க்கொல்லி.
Love plants; all of them. Nothing is a weed in Nature. Herbicides are actually Biocides. They kill all life, eventually.

கெட்ட பூச்சி என எதுவும் இல்லை. இது கெட்ட சிந்தனை மட்டுமே. பூச்சிக்கொல்லி அடிக்கவேண்டியது இந்த சிந்தனைப்பூச்சி மீது மட்டுமே.
No insect is harmful. Our thought, that they are, is harmful. Insecticides are actually Biocides. They kill all life, eventually. 

புல்லுக்கு ஈயும் மழை கல்லுக்கும் ஈயும். நீரின்றி மண்ணாகாது கற்பாறைகள்.
Rains that gives to the grass gives to the rocks too. Rock to soil conversion - water makes it happen.

விதைப்பதற்கு மண்ணை கிளறாதே. கிளறியது ரணமாகும், மண்ணுயிர் கொல்லும்.
Tilling opens up wounds and kills soil life.

இயற்கை நம் தேவைகளை நிரப்பும். ஆசைகளை அல்ல.
Nature gives. It fills not our greed but only our needs.

'ஒரு பழத்தில் இருக்கும் விதைகளை எண்ணிவிடலாம். ஒரு விதைக்குள் இருக்கும் பழங்களை எண்ணவே முடியாது' என்பதை நினைவிலிருத்து. இயற்கையிடம் நன்றியோடிரு.
Practice Gratitude. You can count the number of seeds in a fruit but never count the number of fruits in a seed.

இடர்கண்டு துவளாமல் இவையனைத்தையும் எதிர்பார்ப்பின்றி செய்தால், நட்பே, நீ விவசாயி!
If you do all these unflinchingly without any expectation on returns, You are a Farmer, my friend! You will be a Famer too :-)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்...