முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வழிப்பறி கொள்ளையர், உஷார்! Beware, Highway robbers on the prowl!

நெடுஞ்சாலையில் வழிப்பறி கொள்ளை. கொள்ளையனை கைது செய்ய முடியுமா என அரசு திகைப்பு! Highway Robbery; Govt is stunned by the enormity of the task at hand! Such a developed tribe we are, even the most brilliant mind out there in the wild has learned a few tricks from us :-( பேராற்றலும் பேரறிவும் இருந்தும் அமைதி விரும்பும் இவர்களையும் வழிப்பறி கொள்ளையராக்கியதுதான் நமது இன வளர்ச்சி :-(

நானும் மழையானேன்...

இரு ஜோடி காக்கைக்கண்கள். ஒயிலாய் நடைபோடும் தோகைநீண்ட மயில். டொட்டொட்டொட்டொட்டொட்டென சிவப்புக்கொண்டையை ஆட்டியபடி மரம்கொத்தும் குருவி. 'அப்ப்பா! என்ன ஒரு சத்தம்!!' என உடல்  குளுக்கி செய்தி பறிமாறும் சாம்பல் குருவிகள். மலரிலிருந்து வண்ணம் பிரிந்தது போல் அகலும் வண்ணப்பூச்சி, இன்னொரு மலரில் தம் வண்ணம் சேர்க்கும், மீண்டும் மீண்டும். நூறு கால் கொண்டு சிற்றிடம் தாண்டும் சிவப்பு இரயில் மரவட்டை. சிறு குளத்தில் வாலாட்டும் வண்ண மீன்கள். பஞ்சுப்பொதியும் முதுகுக்கூடுமாய் அருகில் மிதக்கும் நத்தைகள். இது இரவா பகலா என கிளையிலமர்ந்து விழிக்கும் ஆந்தைகள். குளிருக்கு இதமாய் கம்பளி போர்த்தி இலை மேயும் பூச்சிகள். புல்லின் நுனி தீண்டும் ஆவலில் விரைந்தேறும் கருப்பு சிவப்பு வண்டுகள். மெலிதான காற்றில் ஆடி மெல்லத்தரையிறங்கும் விடுபட்ட கொடிமலர். இத்தனையும் என் மனதில் எழுப்பிய வண்ணங்கள் போதாதென மென்மேலும் வண்ணங்கள் சேர்த்து கழுவிச்செல்லும் மழைச்சாரல்... சாரலால் காதலால் தளும்பும் மனதின் அடியூற்றிலிருந்து உற்சாகக் கூவல், "நான் நேசிக்கிறேன்! ஐ லவ் நேச்சர்!' பழகிப்போன ...

ஜோடி வாங்க வாரீகளா?!

ஜோடி வாங்கப்போறோம்! 250 கோடி சொத்து உள்ள குடும்பம். பையன் டாக்டர் / வணிக காந்தம்.. இதே அலைவரிசையிலுள்ள குடும்பத்தில் பெண் இருந்தால் விண்ணப்பிக்கவும். பணக்கார குடும்பத்து பொண்ணு. விஐபி குடும்ப பையன் வேணும். வயசெல்லாம் பெரிசில்லை. டைவர்சான வசதியான வேலையிலுள்ள பொண்ணு. கல்யாணமாகாத / நன்கு செட்டிலான 45-48 வயது மணமகன் தேவை. டைவர்சான பையன். பெங்களூரில் வேலை. பெங்களூரில் வேலை செய்யும் பெண் தேவை. ஜாதி பார்ப்பதில்லை. எம்மொழியும் சம்மதம் (!). ஆயிரங்காலத்து பயிர், பைவ் ஸ்டார் ஓட்டலின் இன்ஸ்டான்ட் நூடுல்சான கதை இது! யாயும் ஞாயும் யாராகியரோ  எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்  யானும் நீயும் எவ்வழி அறிதும்  செம்புலப் பெயல்நீர் போல  அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே! "சாத்தானே! அப்பாலே போ" என்கிறீர்களா! சரிதான், Matrimoney பெருந்தொகை சந்தையில் 'குறுந்தொகை' செல்லாது! வாரண மாயிரம் சூழவ லம்செய்து நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ!நான். நாளை வதுவை மணமென்று...

ஒளியிலே தெரிவது! / Magica!

ஒரு நொடி வெளிச்சம். சிறிதே வண்ணம். இது போன்ற தேவ தருணங்களால்  நிறைந்தது வாழ்வு! A ray of sunlight. A dash of color. Life is full of Magical moments like this!

தாழ்திறந்தது பூங்கதவு!

#onemoresong ஜிமி ஹெண்ட்ரிக்ஸ். கிதார் இசைஞன். உலக கிதார் இசையில் எரிக் கிளாப்டன் போன்ற ஆளுமைகள் உச்சம் தொட்டபின் அடைவதற்கொன்றுமில்லை என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில் (பின் 60 களில், முன் எழுபதுகளில்) 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்' என ஒற்றைக்கிதாருடன் உலகை வெல்லக்கிளம்பியவன், வென்றவன், கருப்பினத்திலிருந்து. இந்தப்பதிவு அவனைப்பற்றியல்ல. பின் எழுபதுகளில் 'நம் தமிழ் (திரை) இசை உச்சம் தொட்டாச்சி, இதற்கும் மேல் ஒன்றுமில்லை, என மக்கள் மயங்கியிருந்த தருணத்தில் ஒற்றை கிதாருடன் இங்கும் ஒருவன் முளைத்தான், 'தீர்ப்ப மாத்தி எழுதுங்க பாஸ்!' என்று, ஒரு சிற்றூரிலிருந்து. நுழைந்த இரண்டாண்டுகளுக்குள் அவன் தொட்ட உச்சம்... வேற லெவல்! முகவரியற்றவரைக்கூட மந்திரக்கம்பளத்தில்  ஏற்றி பறக்கவைக்கும் வித்தையில் அவனை வெல்ல யாருமில்லை. பாரதிராஜா அவனுடன் இணைகிறார். மூன்று புது நடிகர்கள் நாயகர்களாக, ஒரு புது நடிகை நாயகியாக, ஒரு புது கவிஞர் பாட்டெழுத என இந்த மந்திர வித்தைக்காரனை மட்டுமே நம்பி களம் இறங்குகிறார். கவிஞருக்கு இவனைப்பற்றிய பெருவிய...

மயிரு

மரங்கள் இலையுதிர்க்கும் பூவுதிர்க்கும் கனியுதிர்க்கும் கனி விதையாகும்  விதை துளிராகும் துளிர் மரமாகும் பல்லுயிர் வளர்க்கும். பறவைகள் இறகு(உ)திர்க்கும்  மீண்டும் வளரும் வலிவுகூட்டி பறக்கும் பழம்தேடி உண்ணும் எச்சமிட்டு வாழ்த்தும் காடு வளர்க்கும். விலங்குகள் மயிருதிர்க்கும் மீண்டும் வளரும் பருவத்தோடு ஒத்தோடி, ஓடுமிடமெல்லாம் வயிற்றில் காடுசுமந்து கழித்து கழித்தது முளைக்கும். மனிதர்கள் மயிருதிர்ப்பர் மயிர்போல் பண்பு(உ)திர்ப்பர் அன்புதிர்ப்பர் ஏனைய அனைத்தும் உதிர்ப்பர் பேராசை பெருநுகர்வு கடவுளரின் காலடியில். பூமியின் ஓட்டில் அனைத்தையும் உதிர்த்ததும் கடவுளர் குளிர்ந்து உதிர்த்தது ஒன்றேனும் திரும்பப்பெற வரம் தரலாமென இறைவிரும்பி மகிழ்ந்து வினவ ... மயிர் கேட்பர் ... மயிர்மட்டுமே கேட்பர்! (உணவுப்பயிர் காக்க நஞ்சு கலந்து, உணவையே நோயூக்கியாக மாற்றி விளைச்சல் அபாரம் அற்புதம் என மார்தட்டி ஏறு நடை போடும் நம் பேராசையில் நசுங்கும் இந்தக்குழந்தைகள், நம் நிலங்களில் 'நம் உணவு நமக்கு மட்டுமே' என பிறவுயிர் அழிக்க...

தேவ சிறகும் சாத்தான் கொம்பும்!

மனிதர்க்கு மட்டுமல்லவே பூமி! Earth is not for humans alone! 'நமக்கு இல்லேன்னா பின்ன யாருக்கு?' என கோபமாய் மடக்கிய முஷ்டியை சற்றே தளர்த்தி மேற்கொண்டு வாசிப்போம் வாருங்கள்! "மனிதர்க்கே அல்ல பூமி!" என்பது கோண்ட்வானா என்ற அழிந்த நம் பூர்வ கண்டத்தின் (இன்றைய தென்பாதி பூமியில் உள்ள நாடுகள் அனைத்தையும் தன்னுள் கொண்ட பெருங்கண்டம்!) மரபுத்தொடர்ச்சியாக இன்றும் நம் நாட்டின் மத்திய பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பூர்வ குடியினரான, நம் மூத்த குடியினரான "கோண்டு" இன மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை! பழங்குடியினர் சித்திரங்கள் மூலம் தகவல் பரப்புபவர்கள், பெரும்பாலும் அவர்களை வியப்பில் ஆழ்த்திய அல்லது திகைப்பில் ஆழ்த்தியவற்றை பாறைச்சுவர்களில் வண்ணச்சாந்து கொண்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் காலத்தோடு கரையாது இன்றும் கதை சொல்கின்றன. அவர்கள் வழி வந்தவர்கள் நவீன வண்ணங்களை பயன்படுத்தி தம் கலையை சுமார் இருபது வருடங்களுக்கு முன் காகித்தில் கசியவிட, உலகமே வியந்து கவனிக்கத்தொடங்கியது. இன்று இந்தக்கலை உலகெங்கும் பரவியாச்சு; உன்னதமான கட்டிடங்களின் உட்சுவர்களில் இவர்...