முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இழைக்குள் சிக்கிய சிலந்தி!

இழைக்குள் சிக்கிய சிலந்தி             --------------------- தட்டான் என் எள்ளுத்தாத்தன். மரவட்டை என் எள்ளுப்பாட்டி. கும்பிடு பூச்சி என் பாட்டி. கருங்குளவி என் தாத்தன். ஒசிந்தாடும் சரக்கொன்னை என் தாத்தனின் அனுக்கி... என் எள்ளுத்தாத்தனின் கொள்ளுத்தாத்தனும் அவனது உற்றார் உறவினரும் வண்டுகளாய், பறவைகளாய், மண்புழுவாய், விலங்குகளாய், நீருயிரிகளாய், நுண்ணுயிரிகளாய்... காற்றாய், மழையாய், மரமாய், கிளையாய், பூவாய், காயாய், கனியாய், வேராய்... ஏதாவதொன்றாக எப்போதும் எனைச்சுற்றி... என் மனதிற்கினிய மின்மினிப்பூச்சிகள், தும்பிகள், வண்ணப்பூச்சிகள் மற்றும் இன்னும் பலர் நானாகவோ, என் காதலிகளாகவோ, அனுக்கிகளாகவோ... இன்று காலை தாழ்மரக்கிளையிலிருந்து என் தலையில் உதிர்ந்த பூ... அது நீ என்பதாகவே நினைப்பு... இவையனைத்தையும் நினைவு இழைப்பின்னலில் சிக்கவைத்து வாழ்வு சுவைக்கும் பேராவலில் சிக்கிக்கொண்ட சிலந்தியும் நானே! இணைந்த வாழ்வில் பிரிவு இல்லை, தனிமையும் இல்லை!

மனிதனுக்கு மதம் பிடித்த கதை!

மனிதனுக்கு மதம் பிடித்த கதை! மதங்களின் அடிப்படை என்ன? தேவை என்ன? என்பவை பற்றிய பதிவு.  முழுதாய் படிக்கவும் :-) உணர்வதே அறிவு! உணர்வின் குவியல் உடல். உயிர் காக்க, நீட்டிக்க உள்ளே பொதிந்திருக்கும் பொறிகள் ஏராளம். பொதித்தது யார்? தெரியாது! பசியென்று ஒரு பொறி. துயில் என்று ஒரு பொறி. துயின்றது (தூங்கியது) போதும் என்று ஒரு பொறி. தாகமென்று ஒரு பொறி. காமமென்று, கோபமென்று, பயமென்று, பாவமென்று... ஒவ்வொரு பொறியும் நம் உயிர் காக்கும் / நீட்டிக்கும் பொறிகள்... இப்பொறிகளின் கருவிகளாய் ஐம்புலன்கள். புலன்களின் வழி இயங்கும் இவற்றிற்கு அறிவு தேவையில்லை. சொல்லப்போனால் அறிவே இவற்றின் முதல் எதிரி, பெரும் எதிரி! உணர்வின் வழியே பயணம் செய்யும் உயிர்கள் ஒரு பெருங்கானகமளவு என்று கொண்டால், அறிவென்பது ஒரு சிறு பொறி,  அக்கினிக்குஞ்சு... உணர்வினால் கட்டி எழுப்பப்பட்ட பெருங்காடுகளும் வெந்து தணிய, நமக்கு நாமே பொந்திடை வைத்துக்கொண்ட அக்கினிக்குஞ்சு நம் அறிவு. பசித்தால் உண்பது உணர்வு, நேரத்துக்கு உண்பது அறிவு.  தாகத்திற்கு நீர் அருந்துதல் உணர்வு. நல்லிரவில்

போதி மரம்

பேபி கிளாஸ்ல டீச்சர் மேல மையலாச்சு. முதலாங்கிளாஸ் டீச்சர் சிலுவையிட, பிரார்த்திக்க, கற்றுத்தந்து, ஏசு அறிமுகமாச்சி. ரெண்டாங்கிளாஸ் டீச்சர் 'கண்ணாலம் கட்டிக்கலாமா' ன்னதால மெர்சலாச்சு. மூணாங்கிளாஸ் டீச்சர் கத்துக்குடுத்த பேப்பர் க்ராஃப்ட் (Origami) இன்னும் ஈர்க்குது. நாலாங்கிளாஸ் கணக்கு டீச்சர் காட்டன் புடவைப்புன்னகை இன்னும் கண்ணுக்குள்ள நிக்கிது. அஞ்சாங்கிளாஸ்ல 'பதில தைரியமா (confidence) சொல்லணும். நெசமாவான்னு நான் கேட்டாலும்' என்ற ஆசிரியை கீதாசாரியாக இன்றும் மனதில். ஆறாங்கிளாஸ் நினைவில்லை. ஏழாங்கிளாசில் தறி நெசவு சொல்லிக்கொடுத்த ஆசிரியன் எனது வாழ்வில் சேர்த்த சொற்கள் "ஊடு", " பாவு". எட்டாங்கிளாஸ்ல வரலாற்று மீசை, பாடமெடுக்காமல் கதையளக்க, முதல் பெஞ்ச்சில் இருந்து 'பாடத்த எப்பத்தான் ஆரம்பிப்பாரோ' ன்னு மைன்ட் வாய்ஸ்ல சொல்ல நினைச்சி, வாய்ஸாவே சொல்ட்டியான்னு நெத்திக்கண் திறந்தவர் பின்னாடி நான் ஏற்பாடு செய்த பெரும்பாண்டி டூருல பசங்களோட சேந்து பேர் பதிஞ்சது நினைச்சி சிரிப்பாச்சி. ஒன்பதாங்கிளாஸ்ல அறிவியல் டீச்

வேற்றுலக வாசிகள், உஷார்!!!!

வந்தாச்சு! பெரு வெடிப்பின் முதல் துளிர்! எங்கள் உலகின் தொடர்பு ஆண்ட்டெனா! பதிவிறக்கம்! டேட்டா 'பேஸ்'! வந்தாச்சு - LANDED பெரு வெடிப்பு - BIG BANG பதிவிறக்கம் - DOWNLOAD டேட்டா'பேஸ்' - DATA 'BASE'... Go figure! :-)

பிறந்த நாள் வாழ்த்து / Happy Birthday!

தாத்தா, நலமா? "சுதந்திர அடிமை" வாழ்வுக்கு பழகிப்போன எங்களின் நடுவே இன்று கொண்டாட்ட விடுமுறை. உனக்கு 150ஆவது பிறந்த நாளாம்! வாழ்த்துக்கள்!! சில நூறு வருடம் மொகலாய அடிமைகளாக, பின் மீண்டும் சில நூறு ஆண்டுகள் ஆங்கிலேய அடிமைகளாக வாழ்வு பழகிய எங்களை விடுவித்து நல்வழிக்கு இட்டுச்செல்வாய் என்று உனது தோழன், எனது தாத்தன், அவரது மகன், எனது தகப்பன், நம்பினர். நீயும் கத்தியின்றி ரத்தமின்றி அதை நிறைவேற்றினாய். நமது வாழ்வின் அடுத்த நிலைக்கு, நீ கனவு கண்ட கிராம ஸ்வராஜ்ய தேசத்திற்கு உன் கரம் பற்றி அடியொற்றி நடக்க மகிழ்வாய் ஒரு பெருங்கூட்டம் திரண்டபோது உன்னை குண்டுகள் தின்றன... அவ்வாறு உன்னை தொலைதேசம் அனுப்பி 70 ஆண்டு கடந்தும், உன் செயல்கள் மற்றும் எழுத்தின் மூலம் உன்னை அறிந்த ஒரு தலைமுறை, இன்று உனது ஆன்ம ஒளியை விளக்காக்கி, அதன் ஒளியில் புதிய பாதைக்கு தானும் தன்னைச்சேர்ந்த கூட்டமும், அதாவது மானுடமும், நடைபோட பெருமுயற்சி செய்கிறது.  உன் விரல் பிடித்து நடந்த என் தேசம் இன்று சுதந்திர அடிமையாய், யாருக்கு அடிமையாக இருப்பது என முடிவெடுக்கும் சுதந்திரம் மட்டும் போதும் என

திக்குமா திக்காதா?

சின்ன வயதில் திக்குவாய். இடதுகைப்பழக்கத்தை வலதாக மாற்ற சமூகம் முயன்றதன் விளைவு என்பதாக புரிதல். பள்ளி வகுப்பில் ஆசிரியர் பெயரேட்டை புரட்ட ஆரம்பித்ததுமே வயிற்றில் பட்டாம்பூச்சிக்கூட்டம் கிளம்பிவிடும், 'திக்காம சொல்லணுமே...'. பெயரும் தொடக்கத்திலேயே வந்து விடுவதால் சுதாரிக்கவும் நேரம் கிடையாது. இதயம் துடிக்க என் முறை வந்தவுடன் எழுந்து நின்று 'உ...உள்ளேன் ஐயா' என்று சொல்லிமுடிக்கும்வரை... அவ்வளவு பதற்றம். கூழாங்கல்லை வாயில் அடக்கி, எச்சில் விழுங்கி, 1/2/3/4/5 எண்ணி என ஏதேதோ முயன்றாலும், கல்லூரிப்பருவம் வரை தொடர்ந்தது இது. முதலாண்டு, கல்லூரி அருகில் பேருந்து சந்திப்பில் என் வகுப்பு பெண் 'இந்த பஸ்சு காந்திபுரம் போகுமா?' என கேட்டதும் காது நுனி சிவந்து இதயம் தாறுமாறாகி (காதல்ல இல்ல, திக்குவமோன்னு பயத்தில!) நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொள்ள... பஸ்சு போயே போச்சி! அவமானமாய் உணர்ந்து திரும்பி ஓடினேன் விடுதிக்கு. தீர்வு வெளியில் இல்லை. என்னுள்ளேதான் என்று அன்று தோன்றியது.  வாசிப்பு, மொழி அறிவு, கல கல பேச்சு என்று மாறினாலும் திக்கல் பயம் விக்கல் போல

தோத்தாங்குளி தோல் புடுங்கி!

சின்ன வயதில் கில்லி, பம்பரம் ஆடுகையில் தோற்றுப்போனால் உலகிலேயே அதுதான் பெரிய அவமானம் என்று தோற்றவனை நினைக்கவைக்கும் அளவுக்கு மற்ற சிறுவர்களெல்லாம் சுற்றிச்சுற்றி ஆடிப்பாடி "தோத்தாங்குலி தோல் புடுங்கி! மாட்டுக்கு மசிர் புடுங்கி" என கெக்களிக்கும்போது... அழுக அழுகயா வரும், ஆனா அடுத்த ஆட்டத்தில 'மவன, ஒனக்கு இருக்குடா!'ன்னு சமாதானமாயிரும். இதுக்கெல்லாம் அசராததாலதான் முந்தைய தலைமுறைக்கு தோல்வி ஒரு சப்ப மேட்டரானது :-) 'இப்போ இன்னா அதுக்கு?' என்கிறீர்களா?! தமிழ் மொழியில் வட்டார வழக்கில் பழமொழிகள், சொலவடைகள் போல, பழகுதமிழ் பாடல் என்ற ஒன்றும் இருந்தது.  நேரத்தை வெட்டியாய், விளையாட்டாய் கடத்தினாலும் பலனளிக்கும் தமிழ் விளையாட்டுக்கள். இலக்கண கட்டமைப்போ தாளகதியோ தேவையில்லை இவற்றுக்கு. உதாரணம்: மதுரை சிவகாசி வட்டார வழக்கில் பொழுது போகாத சிறார்கள் கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் எனப்படும் உரையாடலை துவக்க கண்டுபிடித்த பாடல் ஒன்று இதோ: சிறுமி 1: ஏதாவது சொல்லு புள்ள! சிறுமி 2: சொல்லு சொல்லுன்னா என்னா சொல்றது?! சி1: ஏதாவது சொல்லு! சி2: (சின்ன சிரிப