முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சொர்க்கத்தோட்டத்தில் வெட்டுண்ட ஆப்பிள் மரங்கள்

உலகத்தை படைத்தது இறை என்று ஒரு பக்கம், இயற்கையென்று ஒரு பக்கம் - இன்றுவரை தொடரும் இந்த விவாதத்திற்கு விரைவில் விடை கிடைக்கலாம். அந்த விடை நமக்கு அவசியமற்றுப்போகலாம். கடவுள் படைத்த சொர்க்க தோட்டத்தில் ஒரு ஆப்பிள் மரப்பழத்தை இறை கட்டளையை மீறி உண்ட ஒரு மனிதன் சாபத்தால் / பாபத்தால் மண்ணில் விழுந்தானாம். விழுந்தவன் எழுந்து...  வாழத்தொடங்கினானாம். தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்கும் வல்லமையை அந்த ஆப்பிள் அவனுக்கு தந்திருந்ததாய் அவன் நம்பினானாம். அந்த வல்லமை கொண்டு நதிகளின் போக்கை, காற்றின் போக்கை, கடலின் நீட்சியை, மலையின் மாட்சியை தன் விருப்பம் போல மாற்றி அமைக்கத்தொடங்கினானாம்.  இந்த தியரியை ஒத்துக்கொள்ளாத மனிதன் ஒருவன் 'மாற்றுவதை நிறுத்தி' தன்னை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும் என வாழ்வின் தொடக்கம் பற்றி இயற்கையிடம் பாடம் படித்தானாம். 'எந்த உயிரினம் இயற்கையோடு, இயற்கை மாற்றங்களோடு இயைந்து வாழ்கிறதோ அதற்கு மட்டுமே தொடர்ந்து வாழ, சந்ததி பெருக்க இயற்கை அனுமதி தரும்' என்பதாக அப்பாடம் இருந்ததாம். இவ்வாறாக இருவரும் தம் உலகை

Roots are Us!

"Mom, its getting dark!" 'So?' 'Am VERY afraid!!' 'Don't be!' 'What do I do?' "Hold tight" 'To what?' "Roots" "Whose? There are so many beneath!" 'Doesn't matter'. So goes the (daily) night conversation in the woods :-)

ஒரு கதை சொல்லட்டுமா?!

"I am gonna bury you", said the Tree man. " I am sure you shall resurrect and live on", he went on. 'Yes... I know' gently murmured the Jackfruit Seed. "So long!" 'So long!' Thus begins a new story.

தேன் சிந்துதே!

தேனின் மருத்துவ குணங்களைப்போற்றிப்பாடி அவ்வப்போது சில பல ஸ்பூன் உள்ளே தள்ளும் நமக்கான கேள்வி, இந்தப்பதிவின் முடிவில். மருந்தாய் மட்டுமே பயன்படுத்திய பொழுதெல்லாம் சுத்தமாய் கிடைத்த தேன், இன்று பேராசைப்பெருவணிகத்தில் சிக்கியதேன்? மலைத்தேன், கொம்புத்தேன்... எல்லாம் பூக்கள் மலரும் காலத்தில் (இளவேனில் பருவம், வசந்தகாலம்) மட்டுமே சாத்தியம்.  (பருவம் தப்பிப்பயிர் செய்து அவற்றின் சுத்தத்தை நாம் கெடுத்தது பெருஞ்சோகம்.) இன்று கிடைக்கும் நெல்லித்தேன், நாவல் தேன், முருங்கை தேன், இன்னபிறவெல்லாம் அடிமை வாழ்வு வாழும் தேனீக்களின் உழைப்பு. ஒரு பெரிரிரிய்ய்ய ட்ரக்கில் ஆயிரக்கணக்கான தேன் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பூக்கள் இருக்கும் நிலங்களை (இந்தியா முழுவதும்) தேடி அடைந்து, பெட்டிகளை இறக்கிவிட்டு, குறிப்பிட்ட நாட்கள் கடந்ததும் (தேனடைகள் நிரம்பியதும்) அனைத்துப்பெட்டிகளையும் வண்டியிலேற்றி சென்று, தேனை சக்கையாக பிழிந்துவிட்டு மீண்டும் தேனடை சட்டங்களை பெட்டியில் சொருகி, அடுத்த நிலத்திற்கு பயணம்.  'ஐயோ! நேற்றுவரை நான் சேமித்த உணவு களவாடப்பட்டதே!' என கதறத்தெரியாத அந்த சிற்றுயிர

ஒளிவதற்கு இடமில்லை

ஒளிவதற்கு இடமில்லை. நாஞ்சில் பி.டி. சாமி என்பவர் விகடனில் முன்னொருநாள் எழுதிய நெடுந்தொடர் இது. 'ஒளிவதற்கு இடமில்லை'. இரும்புத்திரை என்ற சமீபத்திய சினிமா சொல்வதும் இதுதான். ஆனால் அது வெளிச்சமிட்டுக்காட்டியது ஆன்லைன் / சைபர் உலகை மட்டுமே. படம் முடிந்ததும் ஒரு 8 வயது சிறுமி தன் அக்காவிடம் பயத்தோடு சொன்னது இது: 'அக்கா, உடனே அம்மா போன்ல இருக்கிற என் கேம்ஸ் எல்லாத்தையும் அன்இன்ஸ்டால் பண்ணிடு. இன்ஸ்டாக்ராம்ல உன் ப்ரொஃபைல் பிக்சரையும் டெலீட் பண்ணிடு. உடனே!' சைபர் உலகில் ஊடாடும் ஒரு எட்டு வயது சிறுமிக்கு புரிந்ததுகூட நிஜ உலகில் வாழும் வயதுக்கு வந்த நமக்கு புரியவில்லையே! எது நமக்கு கிடைத்ததோ இது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதை நாம் விதைக்கிறோமோ அதையே நாம் அறுவடை செய்வோம்.... "இன்னாபா, இன்னா மேட்டர்?" என்கிறீர்களா? இதுதான் மேட்டர்: இயற்கையின் 'நிழல்' கூட நம் மேல் படவிடாமல் ஒளிந்து திரிந்து, நமக்கு வேண்டியதை எடுத்து வேண்டாததை புறம் தள்ளும் நம்மைப்போலவே இயற்கையும் இடையறாது செய்தவண்ணமே இருக்கிறது. ஒரே வித்தியாசம், அதன் செயல் விருப்பு /

ஆசைமுகம் மறந்துபோச்சே!

என் ஆசை முகம் மறந்துபோச்சே... காலேஜில் முதல் நாள் முடிந்து ஹாஸ்டல் வரும் வழியில் சுற்றி வளைக்கப்பட்டோம். சில நிமிடங்களில் சக முதலாண்டு மாணவன் ஒருவன் இமாஜினரி கோழியை, சீனியர் கை காட்டுமிடமெல்லாம் தாவிப்பிடிக்க முயன்றான். இன்னொருவன் ஸ்லோ மோஷனில் கால்பந்தாட்டம்... வயிறு பிசைந்தது. அடுத்து என் முறை. 'வாத்யாரே எந்த ஊரு?' 'பல ஊரில் படிச்சன் சார்' (சார்னு கூப்பிடாமல் அப்பத்தான் ஒருத்தன் அப்பு வாங்கி விம்மிக்கிட்டிருந்தான்!) 'நக்கலா??' 'இல்ல சார். நிஜமா'. 'சரி... புட்ச்ச நடிகை யார்றா? ஒழுங்கா பதில் சொல்லு. அம்பிகாவா, ராதாவா, மாதவியா... ரொமான்சு மோனோ ஆக்டிங்கு உனக்கு'. படபடப்பு கூடியது. 'இல்ல சார்... சா...சா...' 'என்னடா முழுங்குற. முழுசா சொல்லு!' 'சா...சாவித்திரி சார்'. மயான அமைதி. கோழி, கால்பந்து எல்லாம் freeze ஆன அந்த நிமிடம் இன்னும் மனக்கண்ணில். கையறு நிலை... உணர்ந்தவர் உணர்வர்! ('அப்புறம் என்ன ஆச்சு?' என்பவர்கள் பிறிதொரு நாளில் படிப்பீர். இந்தப்பதிவு சாவித்திரிக்க

சிறிய நூல்... பெரிய்ய்ய்ய புரட்சி!

இது கமெண்ட் / லைக்குகளுக்காக பகிர்ந்த பதிவு அல்ல. முழுதாய் படிப்பவருக்கு மட்டுமே சொர்கத்தில் இடம் :-) ஒரு நூல் என்ன செய்யும்? _----+++++-----------+++++++---- அச்சில் மை கோர்த்து எண்ணங்களை நெசவு செய்பவர் எதை வேண்டுமானாலும் நெய்து தரலாம், புத்தகமாய்.  புத்தகங்களும் ஆடைகள் போலவே; அழகாக, எடுப்பாக, வெளுப்பாக, அளவாக, கச்சிதமாக என தேடித்தேடி நாம் வாங்குபவை நம்மோடு ஒட்டி உறவாடி களிப்பில் ஆழ்த்தி, பழையதாகி, சாயம் போய், நைந்துபோய்... இதற்குமேல் பயன்படுத்த முடியாது என நம்மை ஏங்கவைப்பவை நல்ல ஆடைகள். ஒன்று கவனித்தீர்களா, ஆடைகளின் அடிப்படைப்பயனான 'மானம் காத்தல்' என்பதை நானும் குறிப்பிடவில்லை, நீங்களும் கவனிக்கவில்லை! ஏன் தெரியமா? ஆடை என்பது மானம் காப்பது என்ற அடிப்படை உணர்வு, புரிதல், sub conscious thing. இதை நிறைவேற்றாத எந்த ஆடையையும் நாம் விரும்புவதில்லை. புத்தகங்களும் அவ்வாறே! எனக்குப்பிடித்த விற்பன்னர்கள் எழுதிய அனைத்துப்புத்தகங்களையும்விட (பல துறைகளிலும்) என்னை வாசித்த புத்தகங்கள் மிகச்சில. அவற்றுள் தலையாய ஒன்று, வெறும் அச்சிட்ட எண்ணங்களின் கோர்வையல்