முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செய்க தவம்

வாழ்வே தவம்.  அதுவே வேதம்.  தவமாவது அன்பு. (பனி) உருகி (பாறையில்) புரண்டு (தவழ்ந்து) இறங்கி (சரிவில்) விழுந்து (வளைந்து) சுழித்து (தரை) தொட்டு (கடல்) சேர்ந்து (ஆவி) உயர்ந்து (மேகமாய்) குளிர்ந்து (மழையாய்) இறங்கி (பனியாய்) உறைந்து இன்னொரு மலை இன்னொரு கூதிர்காலம்... எங்கு தொடங்கி எங்கு சென்றிடினும் தொட்டது துலங்கும், பட்டது பூக்கும். வாழ்வும் அவ்விதமே!

நழுவும் மொழி! - குற்றப்பரம்பரை

களவையே தொழிலாய், அதிலும் நேர்மையாய் (களவாண்ட பொருள் கோடி பெருமானமென்றாலும் இவர்கள் கள்ளப்பொருள் வாங்குபவனிடம் கொடுத்து கேட்டு வாங்கிக்கொள்வது உணவு தானியங்கள் மட்டுமே, வயிறு வளர்க்க மட்டுமே). மூன்று கிராமங்கள், கொம்பூதி - களவுக்கூட்டம், பெரும்பச்சேரி - உழவுக்கூட்டம், பெருநாழி - மேட்டுக்குடி கூட்டம்.  களவாணிகள் அருகில் உள்ள கிராமங்களில் களவு செய்து (செய்வது யாரென களவு கொடுத்தவருக்குத்தெரிந்தாலும் எதற்கு இந்தக்கூட்டத்திடம் வம்பு என சகஜமாய் பழகும் அளவு களவிலும் ஒழுக்கம், எவர்க்கும் அஞ்சாத வீரம்) மேட்டுக்குடி வணிகரிடம் பண்டமாற்றாய் தானியங்கள் பெற்று, தம் போலவே ஒடுக்கப்பட்ட உழவுக்கூட்டத்துடன் இணக்கமாய், வாழ்வு இரவொரு களவும் நாளொரு பொழுதுமாய் செவ்வனே நகர்கிறது. தண்ணீர் பஞ்சத்தில் (உழவுக்கூட்டம் குடியமர்த்தப்பட்ட ஊரில் எங்கு தோண்டினாலும் உப்பு நீர்), பச்சைப்பிள்ளைக்காரி ஒருத்தி கட்டுப்பாடுகள் நிறைந்த மேட்டுக்குடி எஸ்டேட் கிணற்றில் (ஒவ்வொரு மேட்டிமை பெண்ணின் குடம் நிரம்புகையிலும் ஒரே ஒரு வாளி தண்ணீர் மட்டும் காத்திருக்கும் உழவுப்பானையில் விழும். பத்து வாளி கொள்ளும் பானை நிறைய அ

ஜென்சி பிசாசுன்னா பேய் யாரு?!

அது பிசாசுன்னா இது பேய்! சிங்கார வேலனே தேவா - யம்மா! எந்த சின்ன வயது பெண்ணாலும் அவர்மாதிரி இன்று பாட முடியுமா? காருகுறிச்சி அருணாசலம், நாதஸ்வர மேதை. இந்தப்பெண் அவரது நாதஸ்வரத்தோடு போட்டி போட்டு பாடிய பாடல், இவரது திரை அடையாளம், புகழ்வெளிச்சம். சின்ன வயதில் இந்தப்பாடல் ரேடியோவில் முதல் முறை கேட்டபோது அவர் ஆலாபனைகளை, கமகங்களை தாளிக்கையில் உள்ளுக்குள் என்னென்னமோ செய்தது. நீண்ட நெடிய இசைப்பயணத்தில் தமிழ் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த பெண் வசியக்காரி இவர். இன்றளவும்! செந்தூரப்பூவை செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே என்று காற்றே எந்தன் கீதம் காணாத ஒன்றை என்று,  நாதம் என் ஜீவனே என்று (விழியாகி விடவா!!!! அடடா!!!) சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்று கண்மணி அன்போட காதலன் என்று இஞ்சி இடுப்பழகா என்று மாருகோ மாருகோ மாருகயி என்று... நான் வெவ்வேறு பருவங்களுள் நுழையும்போதெல்லாம் இவரும் புதிது புதிதாய்! யாழ்முறிப்பாடல்கள் எனும் முக்கல் முணகல் பாடல்களையும் இவர் விட்டுவைக்கவில்லை! எத்தனை நூறு பாடல்கள் பாடியிருந்தாலும் என் பர்சனல் favourite, பொன்வானம்

வக்கீலு!

ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன். கால்ல குத்துன முள்ளக்கூட பிடுங்கத்தெரியாதவன். குரு அதுக்கு மேல. தரைல தேச்சிட்டு போவியா ன்னு சொல்லாம அவரோட பாண்டித்யத்தை காமிக்கிறாராம். ஹலோ, அந்த வீணாப்போன சீடனும் நாமதான், அந்த பாண்டித்ய குருவும் நாமதான்! முள்ளுத்தடத்தில செருப்பு போட்டிருந்தா முள்ளே குத்திருக்காது. சரி, செருப்பு இல்ல, குத்திருச்சி ன்னா, முள்ளப்புடுங்க முயற்சிக்காம ஆலோசனை கேட்டு திரிஞ்சா? நம்ம வீட்டுலேந்து ரோடு வரைக்கும் (அதைத்தாண்டி ஒரு அடி கூட வேணாம்!) எடுத்துக்குவம். எந்த ஒரு சிக்கல் வந்தாலும் 'யார' திட்டலாம்னுதான் திரியிறமே தவிர நாம என்ன பண்ணலாம்னு... ஊஹூம், யோசிக்கவே மாட்டமுல்ல! ரோடு போடுறது, பைப் போடுறது நம்ம வேலை இல்லை.  போட வைக்கிறது? கோடை வெயில் - நம்ம வேலை இல்லை.  மரம் வக்கிறது? போர் போடுறது, நம்ம வேலை. மட்டம் எறங்கிகிட்டே போச்சின்னா... வாட்டர் டாங்க்கர வரவப்போம், ஆனா மரம் நட மாட்டம்! யோகாசனம், வாய்ப்பாட்டு, வெஸ்டர்ன் டான்ஸ், ஸ்போர்ட்ஸ் னு பசங்கள மூச்சு வுட முடியாத பெடலெடுப்போம்; இயற்கை வளங்கள, அதாங்க, தண்ண

தாரா!

ஒரு சாமியாருக்கு ஒரு வீணாப்போன சீடன். அவனோட அலும்பு தாங்கமுடியாத மத்த நல்ல சீடருங்கள்லாம் ப்ளான் பண்ணி ஒரு நாளு அந்த சீடன ஒரு இத்துப்போன காட்டுல ஒரு நெருஞ்சி முள் தடத்த காட்டி, 'அங்கே போய் குதிரைப்படுக்கை மர இலை சில கொத்து ஒடிச்சிட்டு வா' ன்னு அனுப்புனாங்க. அந்த சீடனும் ஓட்ட ஓட்டமா ஓட, பாதத்துல நெருஞ்சியெல்லாம் பாசத்தோட 'ஏறி'கிடுச்சி'. பறிச்ச எலைய குடுத்துட்டு கடுமையான வலியோட குருகிட்ட ஓடி தொபுகடீர்னு கால்ல விழுந்து அழுகிறான். அழுக சத்தத்தில தவம் கலஞ்ச குரு 'என்ன?'ங்கவும், "முள்ளுங்க குருவே முள்ளுங்க! என்ன செஞ்சா இதுங்க எறங்கும்' னானா, குரு கண்ண மூடி ஆழமா யோசிச்சிட்டு ' பத்துரதன் புத்திரனின் மித்திரனின் பத்தினியின் கால் வாங்கித்தேய்' னு  சொல்லிட்டு தீர்த்த யாத்திர கிளம்பிட்டாராம். முள்ளு சீடனுக்கு இந்த மந்திர வார்த்தைகள என்ன பண்றதுன்னு தெரியலயாம். அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற தீர்வ எப்படியாவது கண்டுபிடிக்கனும்னு சக சீடர்கிட்ட எல்லாம் கேக்கவும், எவனுக்குமே தெர்லயாம். சீழ்வச்ச காலோட இன்னைக்கும் சுத்திகி

ஜென்சி பிசாசு!!!!

நான் பாட்டுக்கு பள்ளிக்கூடம் போனமா, விளையாண்டமா, வீட்டுக்கு வந்தமா, படிச்சமான்னு (மெய்யாலுமே அப்டிதான்!) சிவனேன்னு சுத்திகிட்டிருந்தேன். ரேடியோ கூட கிரிக்கெட் கமென்ட்டரிக்கு மட்டும்தான். திடீர்னு ஒரு நாள், சேனல் கரகரன்னு மொணகவும் வேற ஸ்டேஷன் ட்யூன் பண்ணலாம்னு திருப்புனா, அன்னைக்கு புடிச்சது இந்தப்பிசாசு. தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்னு ஒரு குரல்.  எப்படி உள்ளே எறங்கிச்சின்னே தெரில இன்னைய வரைக்கும் உச்சிய புடிச்சி உலுப்புது! அப்படி ஒன்னும் perfect ஆன குரலும் கிடையாது, வல்லின மெல்லின உச்சரிப்பு சிக்கலும் கூட (இவரோட 'ர', பெரிய 'ர' ஆனா 'ற' இல்ல!, உடுங்க பாசு, இதெல்லாம் ஆராய்ச்சி பண்ணா புரியாது, அனுபவிச்சி கேக்கணும்!) டேப் ரெகார்டரெல்லாம் அப்ப wish list ல கூட இல்லைங்க... உங்களுக்கு நம்புறதுக்கு கூட கஷ்டமா இருக்கலாம்... அப்பல்லாம் wish list ஏ இல்லைங்க!!!! அந்த மாதிரியான ஒரு இளவட்ட கூட்டம் வாழ்ந்த காலம்! அப்பலேந்து மார்க்கோனி கணக்கா ரேடியோவ திருகி திருகி, பிசாச தேடி, ரேடியோ knob கழண்டாலும் விடுறதில்ல! யாருன்னு தெரியாது, ஊரேது தெரியாது

கண்ணம்மா கேன்டீன்

நண்பர் ஒருவர் நகரிலுள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பேராசிரியை. மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்காக என்னை அழைத்திருந்தார். என்னை கல்லூரிக்குள் வரவேற்று பிரின்சிபாலிடம் அறிமுகம் செய்து விட்டு, 'உரையாடல் ஆரம்பிக்கிறதுக்குள்ள ஒரு சுக்கு காபி சாப்டலாம் வாங்க. கண்ணம்மா கேன்டீனுக்கு போலாம்' என்றார். பெயர் ஈர்க்கவே, சென்றேன். சிறு தானிய முறுக்கு, லட்டு, மர விளையாட்டு பொம்மைகள், 'Never eat anything that your Grandma wouldn't have approved!' என்ற banner... இது அத்தனையும் ஒரு பெரிய பொறியியல் கல்லூரி நிறுவன வளாகத்துள்! கடை நடத்தும் இளைஞரோடு அறிமுகம் ஆயிற்று.  சந்துரு. 'ஏன் கண்ணம்மா?' என்றேன். "பாரதியார் பிடிக்கும். படிச்சதில இது நெஞ்சில பதிஞ்சிடுச்சி" தாராபுரம் அருகில் உள்ள ஒரு ஊரிலிருந்து இதே பொறியியல் கல்லூரியில் மெக்கானிகல் என்ஜினியர் ஆன பின்னர், ஆன பின்னர், இந்த உணவகத்தை இங்கேயே நடத்துகிறார்!!!! கல்லூரி அருகிலேயே தங்கியிருக்கிறார். 'பத்துக்கு பத்து இடத்த தாண்டி என்ன வேண்டியிருக்கு?" என்கிறார