குட்மார்னிங் நட்பே பூம்பூம் மாடு புல்லட்டில் போகுது குரங்கு வெளுக்குது நம்ம துணிகள கங்காருவுடன் குத்துச்சண்டை நாயை காப்பாத்த பாம்பு பிடிக்கறாரே தைரியமா பாருங்க ரோட்டில நடந்தது யாருங்க பேயா வானத்தில பாருங்க ஏலியன் விமானம் கோயில் விமானத்தில் ஏலியன் உருவங்கள் கர்டாஷியான் பின்புறம் பெரிதானது எப்படி எல்லையில சீனாகாரன் பண்ணறத பாருங்க ... இதென்ன கொடுமை எல்லாரும் போராடுவோம் என் தப்பை நீ பேசாதே அவன் செய்த தப்பை மாத்து என்னோடு இல்லாதவர் நாட்டு விரோதிகள் ... பூம்பூம் மாடு புல்லட்டில் போகுது குரங்கு வெளுக்குது நம்ம துணிகள கங்காருவுடன் குத்துச்சண்டை நாயை காப்பாத்த பாம்பு பிடிக்கறாரே தைரியமா பாருங்க ... குட்நைட் நட்பே! குட்மார்னிங் நட்பே குட்நைட் நட்பே இடையில ஏதுமில்லே நம்பு நட்பே! நமக்கு வேண்டியதை இணையத்தில் தேடிய காலம் போய் இன்று நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே நாமும், நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே பெரு வணிகமும், "இதுவா?" "இதுவா?" என கண்முன்னே 24*7 கடை விரிக்க, மண்டை குழம்பிப்போய் கோழி கூவும் விடியலில் துயில்பவரே இங்கு இன்று அதிகம். Wall E என்ற அனிமேஷன் திரைப்படத்தில் ஒரு
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!