முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இடையினம்

எழுத்துக்களில் கூட இடையினத்திற்கு இடம் தந்த ஒரு செழுமையான வாழ்வியல் முறை நம்முடையது. அது இப்போது இடையினத்தை நடத்தும் விதம்... பெரும்பாலான வீடுகளில் பதின்பருவ ஆண்குழந்தைகள் தங்களுக்கு மீசை அரும்பவில்லை என்னும் கவலை முதல் பாலியல் பற்றிய அரைகுறை புரிதலுடனும் ஏராளமான கற்பனைகளுடனும் சில அச்சங்களுடனும் தடுமாறுவது இயல்பு. அப்போது சுற்றமும் உற்றாரும் அவர்களை நடத்தும் விதம் வாழ்நாளையே புரட்டிப்போடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 'மீசையே மொளைக்கலை, பொம்பள முகம் மாதிரி இருக்கு' என்பதில் தொடங்கி, '9, ஓசை...' என பல்கிப்பெருகும்போது அவர்களை அரவணைத்து நடத்திச்செல்லவேண்டிய பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கோ, உடல் வளர்ச்சி போதவில்லையே, முகம் அழகாயில்லையே, உயரமாயில்லையே, தலைமுடி சிக்கல் என பலப்பல சிக்கல்கள். தங்களைப்பார்த்து வழியும் விடலைகளும் இந்த சிக்கலுக்குள் அடக்கம். சக வயது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றால் அவர்களே அதிக குழப்பங்களை விதைப்பதுதான் நடக்கும். இவர்களது குழப்பங்களே இவர்களை பாலியல் சீண்டல்களிலும் சிக்கவைக்கிறது. சமுதாயத்த

காற்றின் கதை

கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா? காற்றின் கதை ########### காற்றின் கரங்கள் வருடிச்சென்றாலும் சாய்த்துச்சென்றாலும் மரங்கள் கோபம் கொள்வதில்லை. எங்கோ தொடங்கிய காற்றின் பொறியை  ஊதி அணைப்பதும் மரங்கள்தானே? ! 'இது என்ன புதுக்கதை?!' என்கிறீர்களா? இது மிக மிக பழைய கதை. அதிகம் சொல்லப்படாத கதை. காற்று, வீசுவதில்லை. சூரிய வெப்ப மாறுபாடுகளால் ஈர்க்கப்படுகிறது :-) சூரியனின் சூடுபட்டு தரை சூடாகி, அந்த சூடு தரைமேலுள்ள ஈரக்காற்றில்* ஏற, சூடாகிப்போன காற்று எடை குறைந்து மேலெழும்ப, அங்கு உண்டாகும் வெற்றிடத்தை அருகிலுள்ள ஈரக்காற்று நிரப்ப, இப்படித்தான் காற்று நகர்கிறது, வடக்கு தெற்காய் (நிலநடுக்கோட்டுப்பகுதிதான் அதிகமான சூடு படும் பகுதி. வட துருவமும் தென் துருவமும் பனிசூழ்ந்து குளிர் குளிர் குளிர் பகுதிகள்). இதனோடு பூமியின் சுழற்சியும் சேர்ந்துகொள்ள (வடமேற்கு திசையில் சாய்ந்த அச்சில் சுத்துதே சுத்துதே பூமி) நமக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு காற்று கிடைக்கிறது! (* கடல் நீர் சூரிய அடுப்பில் சூடாகி மேலெழும்பி நிலத்தில் நுழைந்

மண்ணீர் தண்ணீர் கண்ணீர்

இந்தியாவின் இன்றைய தேசிய கீதம், "கோடை எனை வாட்டுதே...". ஒவ்வொரு அரிசியிலும் உண்பவர் பெயர் எழுதியிருக்கிறது இறை. அதாவது, முகவரி கொடுத்தவர்கள் பெயர் மட்டுமே! இறைக்கு முகவரி தருவதா? ஆம். எப்படி? இறை தூதர்கள் வழியே? கிருத்துவமா? இல்லை, மரத்துவம். மரங்கள் இறை தூதர்கள். நாம் நடும் ஒவ்வொரு மரமும் நம் முகவரியை இறை சேர்க்கும். வேர் வழியே மண்ணில் இறங்கும் மழைத்துளிகள் நமக்கான அரிசிக்கு உயிர்தரும், வளர்த்தெடுக்கும், நமது பெயரை அந்த அரிசியில் பதியவைக்கும். இறை செய்வதோ அஞ்சல் சேவை மட்டுமே. மரங்கள் இன்றி இறைக்கும் உணவில்லை தெரியுமா?! தண்ணீர் வேண்டுவோர் மண்ணீர் சேர்ப்போம். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்? நீரானாலும் சோறானாலும்!

ஏகாந்தம்

மலை முகடு தாண்டி தீற்றலாய் வானம். நீலம். காலடி நடந்த தடமெங்கும் சூழும் மரங்களின் பச்சை. தொடுவானில் தொலையப்போகும் சூரியப்பந்தின் அந்தி வெளிச்சம் சிவப்பு. செங்குழம்பு தீயாகி  சுற்றியுள்ள பச்சையெல்லாம்  நீலமெல்லாம்  சிவப்பின் சாயல். சிவப்பை மெள்ள விழுங்கும் நீலம். நீலத்தை கவ்வும் இருள். இருளில் ஒளி உமிழும் ஆயிரமாயிரம் கண்கள், சுடராடும் கண்கள். குளிர் காற்று போர்வையாய் தழுவ, தாலாட்டும் சில்வண்டின் ஓங்காரம். ஏகாந்தம். ஏகத்தின் அந்தம். நாளை மற்றொரு நாளே, இன்றைய இரவு அப்படியல்ல!

2018ன் மிகச்சிறந்த Mainstream கவிதை!

இவரை ரசிக்கப்போனேன்... பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன் தீரா உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் ஹே.. யாரோபோல் நான் என்னைப் பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா.. நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ…காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேறி காளை மேல்

கோடை ஷ்பெசல் : பாம்பு டான்சு!

வெயிலோடு_உறவாடி ராமநாதபுரம் - தண்ணியில்லாக்காடு. அரை டவுசர் டீம் சேர்த்து நெசமான கிரிக்கெட் பேட்டு, நெசமான பால் தேத்திட்டு காலைல ஒம்போது மணிக்கு வீடு வீடா ப்ளேயர் புடிச்சி, டீம் செட் பண்ணி, அப்பால கண்ணுல படுற மொத எதிரி டீம (ப்ளேயர) உசுப்பேத்தி, 'பத்து மணிக்கு அந்த ஊருணில மேட்ச், மோதிப்பாக்கலாமா?'. அந்த ப்ளேயர் ஒடனே ரோசம் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில டீம் தேத்தி, அம்ப்பயர், ஸ்கோரர் எல்லாம் ரெடி பண்ணி... அதென்ன மாயமோ தெரில அந்த கத்திரி வெயிலோட பாச்சா எல்லாம் வெளையாடி முடிக்கிற வரைக்கும் நம்மகிட்ட பலிக்காது. பல முறை ஸ்கோரர் கைங்கரியத்தில எதிர் டீம் கெலிக்கிறதெல்லாம் சகஜம். இது மேட்டரே இல்லை. மேட்டரு மாட்ச் முடிஞ்சபின்னதான் தொடங்கும்.  அதுவரை நேர நடந்துகிட்டு இருந்த பசங்களெல்லாம் பாம்பு டான்சு ஆடுற மாதிரி நெளிய ஆரம்பிப்போம். 'டேய், ஒனக்குமாடா?' என நலம் விசாரித்துக்கொண்டே வீடு நோக்கி ஓடுவோம். போகும் வழியில் தெரு கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் எங்களை கண்டதும் குஷியாகி விடுவார், 'இன்னைக்கு வியாபாரம் ஜோரு' என. தலைக்கு இரண்டு எலுமிச

குப்பையிலே ஒரு விதை

They add beauty to even a waste bin! குப்பைக்கூடைக்கும் அழகு சேர்ப்பவை இயற்கையில் விளைந்தவை. What about us who are rapidly coverting Giving Earth into a Giant Waste Bin?! இந்த உலகை பெரிய குப்பைத்தொட்டியாக்கிக்கொண்டிருக்கும் நாமும் இயற்கையில் விளைந்ததுதானே. நாம் மட்டும் ஏன் இப்படி? Planting is the only way Up, from the pile of trash we heap on ourselves, to our salvation... விதையொன்று ஊன்றி, அது செடியாய், கொடியாய், மரமாய் வளர வளர அதை இறுகப்பற்றிக்கொண்டால் மட்டுமே தப்பிக்க இயலும்... அவை நாம் சொர்க்கம் செல்லும் பாலமாகவும் அமையும்!