முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேரி மாதா மேகியிடமும் வருவாரா?



இந்த முறை தஞ்சை பயணத்தில் சரபோஜி கல்லூரி அருகிலுள்ள சுப்பையா மெஸ் க்கு திரும்பும் சாலை முனையில் Magi யை சந்தித்தேன்.


அங்கு சாலை ஓரமாக நிறுத்தியிருந்த ஒரு பழைய அம்பாசடர் காரில் அமர்ந்திருந்தார். ஒல்லியான உருவம், மிக பழுப்பான சுடிதார் அணிந்திருந்தார்.


சில வருடங்களாகவே அந்த கார் அங்கே இருந்திருக்கிறது என்பது இதன் தோற்றமே அறிவித்தது. காரின் உட்புறம் எங்கும் பழைய ஞெகிழி பாட்டில்கள், ஞெகிழி சாக்குகள் என ஒரு பெரிய குப்பைத்தொட்டி போல அந்த கார்.


உணவுப்பொட்டலம் ஒன்றை அவரிடம் தந்தேன்.


Thank you! May I know your Name? என்றார், தெளிவான ஆங்கிலத்தில் கனிந்த குரலில் Magi.


இதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அறிமுகம் செய்துகொண்டு, Who are You? Why do you live in this condition? Aren't there any help available? என்றேன்.


தங்குதடையற்ற ஆங்கிலத்தில் Magi தன் இருப்பை இப்படி சுருக்கமாக சொன்னார்;


'சென்னை கிரிஸ்டியன் கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியை. திருமணம் வேண்டாமென தனித்து வாழ்வு. தஞ்சையில் பழைய பேருந்து நிலைய பகுதியில் சொந்த வீடு என நன்றாகத்தான் வாழ்ந்தேன். ஒரு குடித்தனக்காரர் வீட்டை காலி செய்ய முடியாது என தகராறு செய்து, வாடகையும் தராமல் அங்கேயே தங்கிவிட்டார். பிறகு மெல்ல அந்த வீட்டையே அபகரித்துக்கொண்டார். காவல் நிலையம், நீதி மன்றம், அரசு அதிகாரிகள் எவருமே எனக்கு உதவ முன்வரவில்லை. நான் இன்று வரை சர்ச்சுக்கு தவறாமல் சென்று அன்னை மாதாவிடம் மன்றாடிக்கொண்டிருக்கிறேன். தஞ்சையில் செல்வாக்கு மிக்க சர்ச்சு நிர்வாகமும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. என்னுடைய சகோதரர்கள் எல்லோரும் ஐக்கிய ராச்சியத்தில் வளமாக வாழ்கின்றனர். என்னை அவர்களது உலகத்திலிருந்து அகற்றிவிட்டனர் (என்று சொன்னபோது மட்டும் அவரது கண்களில் இருந்து புறக்கணிப்பின் வலி, அனிச்சையாய் நீராக வழிந்தது). கடந்த மூன்று வருடங்களாக இந்த வண்டியில்தான் வாழ்க்கை.'


'நான் உதவ வேண்டும் என விரும்புகிறேன். எனது பைபேசியில் ஒரு குறும் ஒளிப்பதிவு செய்து அதனை அதிகாரிகளுக்கு மற்றும் தன்னார்வல தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி உதவி கேட்க பயன்படும்' என்றேன்.


'I am already an Instagram Celebrity you know? Lot of youngsters shoot video of me and post it there' என்றார் Magi.


இல்லம்மா, நான் சமூக ஊடகங்களில்  பகிரப்போவதில்லை. உதவி செய்யக்கூடியவர்களிடம் மட்டுமே நேரடியாக அனுப்புவதற்காக என்றேன்.


You know? I am about to take a bath and then go to Church to offer my prayers, this being a Sunday. I will be more camera ready later என்றார்.


பிறகு வருகிறேன் என சொல்லிச்சென்றேன். அவர் ஒரு ஞெகிழி பாட்டிலை எடுத்து (discarded half used water bottle) அதில் இருந்த நீரை கொண்டு முகம் கை கால்களை கழுவத்தொடங்கினார்.


நான் எனது நட்புகள் சிலரிடம் இவர் பற்றிய தகவல்களை பகிர்ந்து, அவர்களது ஆலோசனை வழியே தஞ்சையில் ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லங்கள் பற்றிய தகவல்கள் பெற ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் என பல எண்களை தொடர்புகொண்டும் பலனில்லை (nobody picked up because it was a Sunday).


மறுநாள் காலை சிற்றுண்டியும் சுப்பையாவில்தான். அன்றும் Magi க்காக ஒரு உணவுப்பொட்டலம் வாங்கி அவரிடம் தந்தேன். மிக நெகிழ்வாக பெற்றுக்கொண்டு, 'இன்று விடியோ எடுத்து அனுப்புங்கள் என விடியோவில் பேச ஆயத்தமானார். அதற்கு முன் அவரிடம் கேட்க எனக்கு ஒரு வினா இருந்தது; 'Are you willing to move to a Shelter Home if I could find one?'.


வேண்டாமென் மறுத்து நிதானமான குரலில், எனக்கு சொந்தமான வீடு இன்னும் தஞ்சையில் இருக்கிறது. நான் தங்க அதன் மாடியில் ஒரு தனியறையும் உண்டு. வாடகைக்கு யாராவது இருந்த வரையில் நானும் அங்கு தங்கியிருந்தேன். ஆனால் கடந்த சில வருடங்களாக யாரும் குடி வரவில்லை. எனக்கு அங்கே தனியாக  தங்க மிகவும் பயமாக இருக்கிறது' என தெளிந்த நீரோட ஆங்கிலத்தில் சொல்லி, முத்தாய்ப்பாக அவர் சொன்னது, வாழ்வு பற்றிய எனது புரிதலையும், குழு வாழ்வு, பாதுகாப்பு, உடைமை, சமூக கட்டமைப்பு பற்றிய எனது எண்ணங்களையும் முற்றிலுமாக கலைத்துப்போட்டது; 


"You know? I feel safer in the Street"


அடுத்த தஞ்சை பயணத்தில் அவசியம் சந்திக்கிறேன் என விடைபெற்றேன். நான் அவரது பார்வையிலிருந்து மறையும் வரை நன்றி பெருகும் கண்களுடன் கையசைத்தவண்ணம் நின்றிருந்தார் Magi.


எனக்கு ஏனோ அருந்ததி ராய் நினைவில் வந்தார். அவர் சென்ற வாரம் வெளியிட்ட அவரது வாழ்க்கை சரிதத்தின் கதையும் தலைப்பும் குறிப்பாக நினைவில் சுழன்றது. Mother Mary comes to me என்கிற அந்த நூலில் அவர் தன் அம்மாவிடம் பட்ட கஷ்டங்கள், கொடுமைகள் அனைத்தையும் அலசியிருக்கிறார்.  The title actually means guidance, solace, and introspection, reflecting the theme of a mother figure appearing in times of trouble, although in this case, it specifically refers to Roy's horrific relationship with her own formidable mother.  


In Magi's case, I took the literal meaning but with a negative twist. Mother Mary has not come to rescue Magi yet though she devoutly prays every day and every Sunday... மதங்கள் எதுவானாலும் நம்பிக்கை பொய்த்துப்போவதும், பிரார்த்தனை மட்டுமே செய்ய இயலும் மனிதர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதும் இங்கு நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.


பேரன்புடன்,

பாபுஜி


பின் குறிப்பு: எனக்கு ஆலோசனை வழங்கிய நண்பரிடம் இந்த கூடுதல் தகவலையும் பகிர்ந்தேன். 'நல்லது, மறு முறை சந்தித்தால் மேலும் கூடுதல் விவரங்களை சேகரி. சட்ட ஆலோசனை பெற உதவும்' என்றார். I am going to do just that in my next trip.

கருத்துகள்

  1. மிகவும் நெருடல் நிறைந்த பதிவு. சொந்த வீட்டில் தங்க பயமாகவும் தெரு சந்து பாதுகாப்பு எனவும் தனியே வாழும் முதியோர் வாழ்வது நமது சமூக கட்டமைப்பு எவ்வளவு மாறி வருகிறது என்று பிரதிபலிக்கிறது. இரக்கம் மனித இயல்பாய் இன்னும் இருக்கிறதா??

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...