முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சம்பவ விவரணம் நாலர சங்கம்!

 


இந்த நாலரை கேங் தொட்டதெல்லாம் ஏழரை!


ஆறு எபிசோட். மொத்தமாய் 3.5 மணி நேரம். திருவனந்தபுரத்தில் ஐந்து விடலைப்பசங்கள் மெல்ல மெல்ல குற்ற உலகத்தில் நுழைவதையும் அவர்களது வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் இவ்வளவு சிரிக்க சிரிக்க காண்பிக்க முடியுமா?!!!


முடியும் என காண்பித்திருக்கிறார் க்ரிஷாந் R. K!


சேரிவாழ் இளைஞர்கள் ஐந்துபேர் (well, actually, 4 1/2 பேர்!) தங்கள் காலனி ஹீரோ ப்ரிட்டோ போல தங்களுக்கும் மக்கள் சிலை வைக்கவேண்டும். அதற்கு அவர்களது கோவில் திருவிழாவை ஜாம் ஜாமென நடத்தி பிள்ளையார் சுழி இடவேண்டும் என தொடங்க, இவர்கள் தொட்டதெல்லாம் ஏழரை சனி போல தொந்தரவு செய்ய, இவர்களது லட்சியம் என்ன ஆகிறது என்பதை ஏராளமான எதிர்பாரா நிகழ்வுகளுடன், ஒரு அட்டகாசமான நகைச்சுவை உணர்வுடன் எடுத்திருக்கிறார்.


ரவுடிகள், நேர்மையற்ற காவல்காரர், சந்தர்ப்பங்கள், சந்தர்ப்பவாதிகள் என அடிப்பொலி சம்பவம் இந்த சீரீஸ்.


Visual humour ஐ அக்கடபூமி சேட்டன்கள் போல இந்தியாவில் வேறு எவரும் கையாளவில்லை இன்றுவரை! Their humour is of the type that has to be seen to be enjoyed but cannot be explained to anybody...


சேட்டன்ஸ், சேச்சிஸ்! திரைப்படங்களில்தான் மற்ற மொழிப்படங்கள் எட்ட முடியாத உயரம் தொட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால் OTT சீரீசீலும் இப்படி செய்வது நியாயமா?! பொறாமையாக இல்லை, மகிழ்வாக இருக்கிறது :-) 



கேரளாவைச்சேர்ந்த இந்த கேங்கின் மையப்பையன் (அதாங்க, central figure), மகாராஷ்டிராவின் பூனாவில் வாழும் ஒரு புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரை சந்தித்து பணம் கொடுத்து தனது கேங்கின் வரலாறை கதையாக எழுதித்தர சொல்கிறான். கதையை ஒரு எகிடுதகிடு ஹிட் திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு செம்மைப்படுத்துகிறேன் பேர்வழி என அந்த ஆசிரியர் தனது கற்பனை வளத்தால் இந்த ஏழரை சனி பிடித்த கேங்கை சாதனையாளர்களாக சித்தரிக்கத்தொடங்குகிறார். முதலில் கதை நிகழும் இடங்களில் பார்வையாளர் போல பாவித்து தொடங்கி, பின் கதை மாந்தரோடு சம்பவங்களின் இடையிடையில் கற்பனையில் உரையாடத்தொடங்கி பின் ஒரு புள்ளியில் இவர்களது கதையை இவரே முன்னகர்த்துகிறார்!


இந்த கேங்கின் கதை என்ன ஆனது? திரைப்படமானதா? 


பார்த்து மகிழுங்கள்!


பின்குறிப்பு: இந்த சீரீசின் உச்சப்புள்ளி, செந்தில் என்னும் தமிழர் இவர்களது வழியில் குறுக்கிடும் தருணத்தில் தொடங்குகிறது. Incredible story arc and my God, what humour his arc brings in!!

இந்த ஆண்டு பல விருதுகளுக்கு போட்டியிட்ட நடிகர்கள் இருவர் இந்த சீரீசில் சிறிய, ஆனால் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்! (விஜயராகவனும் தர்ஷணா ராஜேந்திரனும். தமிழில் இவர்கள் போன்ற நடிகர்கள் சீரீஸ்களில் சிறிய ரோல்கள் செய்வது கனவிலும் நடக்காது!)


நாலரை கேங் மெம்பர்ஸ் நாலரை பேரும் அதிகமாக அறிமுகமில்லா நடிகர்கள் but எந்து ஒரு நாச்சுரல் பெர்ஃபார்மென்சானு!!


Don't miss this! (1)

Don't miss this! (2)

Don't miss this! (3)

Don't miss this! (4)

Don't m (.5) 


4.5 😅


Chronicles of 4.5 Gang - சம்பவ விவரணம் நாலர சங்கம்!


Catch it in Sony Liv, OTT, India.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...