கனவு காண தைரியம் வேண்டும், தொலைநோக்கு பார்வை வேண்டும். நனவாக்க உறுதியும் உழைப்பும் வேண்டும். இத்தனை இருந்தும் கனவு நனவாக காலம் மனது வைக்க வேண்டும்... காந்திக்கு கனவு காண தைரியமும் தொலை நோக்கு பார்வையும் இருந்தது. அது உலகம் அறிந்த செய்தி. கனவை நனவாக்க உறுதியும் உழைப்பும் கொண்ட மனிதர்கள் அவருடன் இருந்தனர். இதோ இந்த வாரம் செவ்வாய் கிழமைதான் அவர் தனது பத்திரிகையில் 'காங்கிரஸ் என்கிற கட்சி தன் இலக்கை அடைந்துவிட்டது. இனி அதற்கு புதிய இலக்குகள் நிறைய இருக்கின்றன. இந்த இலக்குகளை அடைய அது தன் சுயத்தை கலைந்து உருமாற வேண்டும்' என எழுதினார். அந்த இலக்குகள் எவை என்பதையும் தெளிவாக எழுதியிருந்தார். அந்த இலக்குகள் எல்லாம் இருபத்தைந்து ஆண்டுகள் முன்பே அவர் வகுக்கத்தொடங்கியவை. அதற்கு பத்தாண்டுகள் பின்பு, அடிமைப்பட்டிருந்த இந்தியாவின் சுதந்திர எதிர்காலத்திற்கான அடிப்படை கட்டமைப்புகளை தெளிவாக சிந்தித்து வரையறுத்து, அவற்றிக்கு செயல் வடிவம் தர அதுவரை தான் ஏற்றிருந்த ஒரு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அந்த புதிய இலக்குகளை நோக்கி தன் பயணத்தை தொடங்கியிருந்தார். அந்த இலக்க...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!