புவியின் பேராற்றலும் பெருங்கருணையும் ஒருங்கே வெளிப்படும் தருணம், விதையொன்று தன்முயற்சியில் ஓடுடைத்து புவியோட்டையும் உடைத்து சூரிய தரிசனம் பெறும் அந்த ஒற்றை நொடி.
உயர்ந்தோங்கி தழைத்து செழித்து உயிர்வளர்த்து உயிர்பெருக்கும் வாழ்நாளின் நொடியெலாம் தொப்புள்கொடி உறவு (மண்ணோடு) தொடர்வதால்தான் இது இங்கு இப்படி ஆயிற்று.
மனிதர் நாம் மரங்களிடமிருந்து கற்றுக்கொள்ள, இருக்கிறது ஏராளம்!
தாயின் தொப்புள்கொடி அறுத்த நொடியில், நம் பாதம் புவி பதிந்தால் தப்பிப்போம், விலங்குகள் பறவைகள் மற்றும் ஏனைய உயிரினங்கள் போல (நீரில் பிறக்கும் உயிரினங்கள் கூட பிறந்த நொடியிலிருந்தே நீரோடு உறவாடத்தொடங்கும்!)
பூமி தொடா பிள்ளைப்பாதம், My foot!
கருத்துகள்
கருத்துரையிடுக