முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜீனியஸ்ங்க நீங்க!

  ஒரு மன நல மருத்துவரிடம் தம் மீன் குழந்தையை அதன் மீன் பெற்றோர்கள் அழைத்து வந்தனர். 'என்ன சிக்கல்?' என்றார் மருத்துவர். 'நாங்க பட்ட கஷ்டம் எதுவும் இவன் படக்கூடாதுன்னு பாத்து பாத்து வளக்கிறோம். எங்களால முடியாதத இவனாவது பண்ணுவான்னு எதிர்பார்க்கிறோம். ஆனாலும் இவன் மரம் ஏற மறுக்கிறான். கொஞ்சி, கெஞ்சி, மிஞ்சி கூட try பண்ணிட்டோம், யார்கூடவும் பேச மாட்டேங்கிறான், தனியாவே கிடக்கான்!' அவர் அவர்களுக்கு சொன்ன தீர்வே இப்பதிவு. எந்த காகமும் தன் குஞ்சுகள் பொன்னிறத்திலில்லாது கருகருவென இருப்பதை நினைத்து வெம்புவதில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு என கற்பிதம் செய்கிறோம், நம் குழந்தைகளையும் அவ்வாறே நினைத்து வளர்க்க முயல்கிறோம் :-) Special என்கிற உணர்வு, காக்கையானாலும் அதற்கு அதனது குஞ்சு special என்ற உணர்வில் உண்டாக்கப்பட்ட பழஞ்சொல் இன்று நமது எதிர்பார்ப்புகளின், ஏமாற்றங்களின் இடையில் நசுங்கிப்போய் நிற்கிறது, நம் குழந்தைகள் போலவே! இந்தப்பதிவின் drift புரிந்தவர்கள் முதுகில் தட்டிக்கொண்டு உற்சாகமாய் தொடருங்கள். மற்றவர்களும் என்னோடு தொடர்ந்து இப்பதிவில் ப

நிறப்பிரிகை

  Life without a Prism. இயற்கைக்கு நல்லது, கெட்டது, சக உயிருக்கு துன்பமிழைத்தல், துன்பம் கண்டு துடித்தல் போன்ற உணர்வுகள் எதுவும் கிடையாது. சிலது செய்தால் தொடர்கண்ணியாய் சந்ததி நீளும், சிலது செய்தால் நீளாது, அவ்வளவே. ஏதோ ஒரு ஆதார விதியின்படி கோள்களின் இயக்கம், பிரபஞ்சத்தின் இயக்கம் நிகழ்கிறது. இயற்கையின் உள்ளிருந்து ஆராய்ந்து இயற்கையை அறியமுடியாது. வெளியே சென்று ஆராயவும் இயலாது. எனவே இந்த முயற்சியே வீண் என்கிறார் Masanobu Fukuoka. இயற்கையிடம் மனிதன் எதிர்பார்ப்பது, கற்பிதங்கள் செய்து பயப்படுவது அல்லது மகிழ்வது("fixing" causes for each and every result humankind faces, by heuristic logic) இவற்றின் வெளிப்பாடே பல வண்ண கடவுள்களாக இருக்கலாம். கடவுளை தேடும் ஒவ்வொருவரும் கடவுள் துகளே என்கிற அறிவியல் கோட்பாட்டை இந்து மதம் (என்கிற இயற்கையை தொழுத வாழ்வியல்) உள்ளிழுத்து 'அஹம் ப்ரம்மாஸ்மி' என்றது. இதை நாம் அத்வைதமென்கிறோம். இந்த வாழ்வியலால் ஈர்க்கப்பட்ட / இதிலிருந்து பிரிந்து போன மதங்கள் (வாழ்வியல்கள்) இன்றுவரை த்வைத கோட்பாட்டில் இயங்குகின்றன :-) கடவுளே என்கிற நிலைப்பாட்டுக்கும்,

பேயும், இருளும், மழையும்!

சேவோ ஆற்றின் ஆட்கொல்லி சிங்கங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கிய காலகட்டம். ஆப்பிரிக்க கண்டத்தில் உகாண்டா நாட்டின் உள்பகுதிகளை கென்யா நாட்டின் மொம்பாசா பெருநகர் துறைமுகத்துடன் இணைக்கும் 1060 கி.மீ நீளமுள்ள ரயில்பாதை உருப்பெற்ற நேரம். ஏராளமான இந்தியர்கள் பஞ்சாப் மாகாணத்திலிருந்து கூலித்தொழிலாளர்களாக, ஒப்பந்த அடிப்படையில் தொலைதூரம் அழைத்துவரப்பட்டு,  இராப்பகலாக வேலை செய்ய, ரயில்பாதை மளமளவென்று நீண்டது. வந்தாயிற்று, மொம்பாசா துறைமுகம் தொலைவிலில்லை. சேவோ (Tsavo) ஆறைத்தாண்டினால் பணி எளிதாகிவிடும். சேவோ (Tsavo) ஆற்றின் மீது பாலம் கட்ட பொறியியலாளர் துணையுடன் வேலைகளையும் தொடங்கியாயிற்று. ஆனால் வேலை நடக்கவில்லை. தொடங்கிய சில தினங்களிலேயே தொழிலாளர்கள் அங்கங்கே ரத்தவெள்ளத்தில் குதறப்பட்டு கிடப்பது தொடர் நிகழ்வாயிற்று... இருளில் அவர்களை வேட்டையாடி குதறியது ஒரு மிகப்பெரிய சிங்கம் என்று அவர்கள் உணர்வதற்குள் உயிர்ச்சேதங்கள் நிறைய. இந்த ஆட்கொல்லி சிங்கத்தை அழிக்க ஒரு வேட்டக்காரரை  அந்த பொறியியல் வல்லுநர் அழைத்துவருகிறார். வேட்டைக்காரரும் இரவு பகலாய் சிங்கத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க, பேரதிர்ச்சி க

ஐந்தாம் வேதம்!

சிறிய பதிவுகள், குறுகிய பதிவுகள் என நம் சிந்திக்கும் திறனும், கவன ஈர்ப்பு நேரமும் குறைந்து கொண்டே வருகிற காலகட்டத்தில், சில நீநீநீளமான பதிவுகளும் அவசியம்தான். பதிவின் கனமே அதன் நீளத்தை பெரும்பாலும் முடிவு செய்கிறது. ஒரு கப் சூடான பானத்துடன், சற்றே தனிமையில் அமர்ந்து, break எடுக்காமல் படிக்கவேண்டிய, அவசியமான பதிவு இது. இதை செய்யமுடிந்தால், தீர்வின் தொடக்கப்புள்ளி நாமாகவே கூட மாறலாம். நன்றி. பதிவுக்குள் நுழைவோம் வாருங்கள்! --------+--------- 74_ஆம் ஆண்டு சுதந்திர தின நள்ளிரவுப்பதிவு, விடியலை நோக்கி... பாரதி கற்கச்சொன்ன சாத்திரம் ஒன்று, இன்றுவரை தவறான பொருளில் கையாளப்படுகிறதா? சிந்து நதியின்திசை நிலவினிலே என்ற பாடலில், "மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்; வானையளப் போம்கடல் மீனையளப் போம்; சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்; சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்."  என விண்ணில் பாயும் கனவு வரிகளில் தொடங்கித்தொடர்ந்து சரேலென மண்ணில் நம்மை இழுத்து குத்தி வீழ்த்தும் இந்த ஒற்றை வரி பற்றியே இப்பதிவு; "சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்". அநேகமாய் பாரதியின் பாடல்