முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பூமி வண்ணம் பெற்ற கதை

வண்ணத்தியின் இறகுகளிலிருந்து உதிர்ந்த வண்ணங்களால் உருமாறிப்போச்சு நம் கருப்பு வெளுப்பு உலகம்.

தொட்டால் உதிரும் வண்ணங்களோடு ஒரு இறை தத்தித்தாவி அமர்ந்து பறந்து காற்றேறி நம் பார்வையிலிருந்து கரைந்தபின்னும் அந்த வண்ணங்கள் மிதக்கும் கண்களோடு வேறு இறை தேடும் வாழ்வு கிட்டிய குழந்தைகளும் இறையே!

ஒரு வயல்.

ஒரு சிறு பிள்ளை.

பல பச்சை இலைகள்.

ஊசித்தும்பி, தட்டான், வண்ணத்தி என சில நட்புகள்.

கண்மூடி கற்பனை செய்துபாருங்கள் இந்த 'வெளியில் என்னென்ன அற்புதங்கள் நிகழலாம் என.
பதுங்கிப்பதுங்கி ஊசித்தட்டான் கொண்டைக்கண்களில் சிக்காமல் அதன் பின்தொடர்ந்து வால் பிடிக்க முயலும் சிறுமி, அவளிடம் சிக்காமல் போக்கு காட்டும் தட்டான், அவள் கவனம் கலைக்கும் வண்ணத்தியின் பூ நடனம், பொன்குவியல் ஒளிக்கீற்று முகம் வருட, காலடித்தோலை மெத்தென வருடும் பனி ஈரப்புல்வெளி...

இறை சூழ இறை ஒன்று நடனம் ஆடும் வெளியாக அது ஒரு நொடியில் மாறிப்போகும் விந்தையை நேரில் உணர்ந்த ஒரு சிறுவன் இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறான். அங்கு வணிகமில்லை, பெருவிருப்பமில்லை, பெருங்கோபமில்லை,  போட்டியில்லை, பொறாமையில்லை, எதுவுமேயில்லை...

ஊசித்தட்டானின் ஆயிரம் கூட்டுக்கண்களை அருகிலிருந்து முதல் முதலாய் தரிசித்த அந்த நொடி தந்த பெருவியப்பு இன்றும் இயக்கிக்கொண்டிருக்கிறது எனது வாழ்வை.

பகிர்தலின் இனிமை, பகிர்தலின் மகிழ்வு...

பகிர்ந்தாலும் 'சுயம் குறையாது' பெருகுவது நெருப்பு மட்டுமா என்ன? 

Our life is Not a Zero Sum Game; whatever we were taught by the modern world from the moment we started experiencing life through our senses were wrong.

The ancient world, the real world, the eternal world, is still out there, in the colour dusts of our butterflies, in the rustle of the leaves that litter our path, in the silhouette of the nameless birds that light up our skies then and there, in the pollen of the air we breathe... 

Open your eyes and senses. We too have a thousand eyes like the oosi thattan. I wish you the strength to open them and immerse into 'life'.

Welcome to the Real World, Neo!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்