மகாபாரதம் தொட்டே ஒன்றின் விளைவாய் இன்னொன்று அதன் விளைவாய் இன்னொன்று என்றே வாழ்வின் சிக்கல்கள்...
Plebiscite எனப்படுகிற, காஷ்மீர் மக்களின் விருப்பம் கேட்டு இந்தியாவுடனா? பாகிஸ்தானுடனா? தனியாகவா? என்ற முடிவை அடைய ஒரு வாய்ப்பு இருந்தது. இப்போது இல்லை... மண்ணின் மக்களான காஷ்மீரி பண்டிட்டுகள் வன்முறைக்கு பயந்து புலம் பெயர்ந்து வெகு காலம் ஆச்சு. இப்போது உள்ளவர்கள் true representatives எனகொள்ள இலாது.
அங்கு வாழ்வாதாரம் பெருக்கி, அமைதியை உறுதி செய்தால் மட்டுமே சூழல் மாறும்.
செவ்வாய் / சந்திரனுக்கு நம் அரசுகள் செய்யும் செலவில் ஒரு பங்கிலேயே தொழில் நுட்ப உதவி கொண்டு நம் எல்லையை காக்கும் அரண் அமைக்க முடியும்...உறுதியாய் முயன்றால்.
காஷ்மீர் என்ற ஒற்றைப்புள்ளியில் பிளவுபட்ட பாகிஸ்தான் இணைவதும், அரசியல் பகடை காஷ்மீர் மீது உருட்டப்படுவதும், ஆதாயம் தேடும் சைனாவின் கரங்கள் பகடைகளை உருட்டுவதும், அப்பாவி இந்தியர்கள் அறியாது பழிக்குப்பழி என குரலெழுப்புகிறார்கள்.
மிக விரைவில், அரசியல் பொருளாதார ரீதியில் பிளவுபட்ட இந்தியாவை இணைக்கும் புள்ளியாகவும் காஷ்மீர் மாறக்கூடிய அபாயம் உள்ளது. சிக்கலின் நுனி காண யுத்தம் உதவாது...
இறை நம்பிக்கையும் வேண்டும். ஒரே ஒரு நில நடுக்கத்தில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த terrorists training camps அழிந்த செய்தி நம்மில் அநேகருக்கு நினைவிருக்காது..
கருத்துகள்
கருத்துரையிடுக