முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Before Sunset

வியன்னா ரயில் நிலையத்தில் ஜெஸ்ஸியும் செலினும் விடைபெற்று பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது.

2004. ஜெஸ்ஸி இப்போது ஒரு எழுத்தாளன். முப்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறான்.

தான் எழுதிய நாவல் பாப்புலராகி France இல் உள்ள ஒரு நூல் விற்பனையகத்தில் ஒரு வாசகர் கலந்துரையாடலுக்காக அழைப்பின் பெயரில் 'ஒரு நாள் பயணத்தில்' அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். 

வியன்னா ரயில் நிலையத்தில் 'ஆறு மாதங்களில் சந்திப்போம்' என்ற திட்டத்தோடு நாயகன் நாயகி விடைபெறுவதாக அவனது நாவல் முடிகிறது.

கலந்துரையாடல் நீள்கிறது. மூன்று வாசகர்கள். அதில் ஒருவர் 'கண்டிப்பாக ஜெஸ்ஸியும் செலினும் மீண்டும் சந்தித்து இணைந்திருப்பார்கள்' என்கிறார். 

இரண்டாமவர், 'இல்லை, சந்தித்திருக்க மாட்டார்கள்' என காரணங்களை விளக்க, 

மூன்றாமவர் ஜெஸ்ஸியிடமே கேட்கிறார், 'அவர்கள் சந்தித்தார்களா?' என்று.

'தெரியவில்லையே!' என்கிறான் ஜெஸ்ஸி.

கடை உரிமையாளர், அவனுக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டதென்று உணர்த்துகிறார். அவனும் வாசகர்களிடம் விடைபெறும் தருணத்தில் கடையின் கண்ணாடி கதவுக்கு வெளியே செலின்!

செலின்!!!

கடைக்கு வெளியே உள்ள விளம்பரத்தில் ஜெஸ்ஸியின் புகைப்படம் பார்த்து, 
தயக்கத்துடன் செலின் உள்நுழைகிறாள்.

பத்து ஆண்டுகள் முன் வியன்னா இரயில் நிலையத்தில் காதல் தளும்பும் மனதுடன் ஆறு மாதத்தில் சந்திக்க முடிவானபின், இன்றுதான் மறு சந்திப்பு என நாம் அறிகிறோம்.

பத்து ஆண்டுகள்...

செலினை தான் சந்தித்த நாளின் நிகழ்வுகளை புத்தகமாய் எழுதி அதன் வழியே அவளை தேடி (no phone numbers, no emails rule in Before Sunrise...)... இப்போதுதான் சந்திப்பு.

படபடப்போடு தொடங்கும் உரையாடல்... பொதுவானவை பற்றி தொடங்குகிறது. Getting to know each other again போல.

ஜெஸ்ஸிக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான். 

செலின் சில பல relationships க்கு பிறகு தற்பொழுது ஒரு போர்ப்புகைப்படக்கலைஞனது உறவில் இருக்கிறாள்.

விமானம் கிளம்ப மீதமிருக்கும் சில மணி நேரங்களில் பாரீசின் சாலைகளில் நடந்து, காரில் பயணித்து, சைன் நதியின் படகில் பயணித்து என முத்துபோல நிமிடங்களை பாவித்து இவர்களது உரையாடல் தொடர, பத்து வருட வாழ்வின் மகிழ்வுகள், வலிகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் என இருவரும் அந்தரங்க வாழ்வின் உள் முடிச்சுக்களை ஒருவரிடம் ஒருவர் அவிழ்க்க, உணர்வுக்குவியலில் நாம் நனைகிறோம்.

'நீ அமெரிக்காவில், நான் பாரீசில். ஆறு மாதங்களில் சந்திக்கலாம் என பதின்வயது ஆர்வத்தில் திட்டமிட்டோமே. சிறுபிள்ளைத்தனமாய்! வந்திருந்தாயா?' என செலின் வினவ, 'இல்லை' என பொய் சொல்கிறான். அவள் உள்ளுணர்வால் உணர்ந்து மீண்டும் வற்புறுத்தி உண்மை சொல்லச்சொல்ல, வந்திருந்தேன் என்கிறான் ஜெஸ்ஸி. உடைந்துபோன செலின் அன்று அவளது உயிரான பாட்டி இறந்துபோனதால் வரமுடியாததை சொல்லி வருந்திப்புலம்புகிறாள். அவளை ஜெஸ்ஸி தேற்றுகிறான்.

பின் அவன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் செலின் நினைவில் கனா கண்டு நொந்ததையும், கண்ணில் படும் ஐரோப்பிய இளைஞி எல்லாம் செலினோ என பித்துப்பிடித்து தேடியதையும், நியூ யார்க் நகரில் ஒரு கல்லூரி அருகில் உணவகமொன்றில் செலின் போன்ற சாயலில் யாரோ இருப்பதை, உணவகத்தை கடந்து போன பின் உணர்ந்து, விரைந்து திரும்பி அங்குமிங்கும் அலைந்து தேடி அந்தப்பெண்ணை காணாமல் வீடு திரும்பியதையும் பகிர்கிறான் (அன்று அவன் கண்டது அவளைத்தான். அவள் ஒரு கோர்ஸ் செய்ய அங்கு வந்திருக்கிறாள் அப்போது!). 

இழந்த தருணங்களை சோகமாய் அங்கீகரித்து உரையாடல் நீள்கிறது. பின்பு ஜெஸ்ஸியின் இல்வாழ்க்கை பற்றி செலின் வினவ, control freak மனைவியுடன் நரக வேதனையில் வாழ்வதையும் (24*7 plain bad), பலமுறை விட்டுவிடலாம் என்று விரக்தி உந்தினாலும் மகனது வெகுளித்தனமான முகத்துக்காக, உறவுக்காக எதையும் தாங்கும் மனோதிடம் பெற்றதையும் உணர்வுப்பெருக்கில் அவளது கண்களை நோக்காது விவரிக்கையில் அவளையுமறியாமல், அவனுக்கும் தெரியாமல், பேரன்போடு அவனது பிடரியை கோதி வலியைப்போக்க அவள் கரம் நீண்டு...சுதாரித்து அடக்கிக்கொள்கிறாள்.


'ஏனிப்படியாச்சி, அடுத்து என்ன?' என பேசிக்கொண்டே வருகையில் அவளது மகிழ்வற்ற வாழ்வு பற்றி பகிர்ந்து ஏதோ ஒரு நொடியில் உரையாடலின் வேகத்தில் கோபமுற்ற செலின், 'ட்ரைவர், வண்டியை நிறுத்துங்கள்! என் வீடு அருகில்தான், இறங்கிக்கொள்கிறேன், நடந்து போகிறேன். ஜெஸ்ஸி, நலமுடன் ஊர் சேர்' என இறங்க முயல, 
அவளை சமாதானப்படுத்த அவளது வீடு வரை துணையாய் நடந்துவர ஜெஸ்ஸி விழைய, அவளும் சம்மதிக்க (விமானத்துக்கு நேரம் குறைவு, ஆனால் இருக்கிறது) இருவரும் சிறிது தூரம் நடந்து அவளது வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

அவனுக்கு அருந்தக்கொடுத்து, பிண்ணனியில் இசை ஒலிக்க இருவரும் ஹாலில் அமர, அவள் கிதார் கற்றிருப்பதாய் சொல்ல, 'ஹேய் செலின், எனக்காக ஒரு பாடல் பாடேன்' என ஜெஸ்ஸி கேட்க, சிறிது வெட்கத்துடன் செலின் பாடுகிறாள்:

Let me sing you a waltz
Out of nowhere, out of my thoughts
Let me sing you a waltz
About this one night stand
You were for me that night
Everything I always dreamt of in life
But now you're gone
You are far gone
All the way to your island of rain
It was for you just a one night thing
But you were much more to me
Just so you know
I hear rumors about you
About all the bad things you do
But when we were together alone
You didn't seem like a player at all
I don't care what they say
I know what you meant for me that day
I just wanted another try
I just wanted another night
Even if it doesn't seem quite right
You meant for me much more
Than anyone I've met before
One single night with you little Jesse
Is worth a thousand with anybody
I have no bitterness, my sweet
I'll never forget this one night thing
Even tomorrow, in other arms
My heart will stay yours until I die
Let me sing you a waltz
Out of nowhere, out of my blues
Let me sing you a waltz
About this lovely one night stand.

தமிழ்ப்படுத்த தேவையின்றி இதில் வழியும் காதல் நம் உயிர்நனைக்கும்...

ஜெஸ்ஸியும் நனைகிறான்...

பத்து ஆண்டுகளாய் செலினின் ஆன்மாவின் கீதமாய் தான் இருப்பதை உணரும் ஜெஸ்ஸிக்கு செலின் டீ செய்துகொடுத்து இன்னொரு பாடகியை மிமிக்ரி செய்து அவனை சிரிக்கவைத்து, அப்பாடகி பாடுவது போன்ற தொணியில் 'உன் ப்ளைட்டை விட்டுடப்போறே, ஜாக்கிரதை' என கிண்டல் செய்ய, 'I know, I know' என அவஸ்தையாய் ஜெஸ்ஸி தன் விரலில் உள்ள திருமண மோதிரத்தை உருட்டியவண்ணம் சிரிப்பற்ற புன்முறுவல் செய்ய, படம் முடிகிறது!

"என்ன ஆயிற்று அதன்பின்?" என உலகத்தில் காதலித்தோர் அனைவரும் தவிக்க, விடை அறிய இன்னும் பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டியதாயிற்று.

அடுத்த பதிவில் நாமும் அறிவோம் :-)

அவர்களது பதின்வயது வேகங்களை, அபத்தங்களை முப்பதை நெருங்கும் அவர்களே அலசி சிரித்து உரையாடும் அந்நிநோன்யம், விட்ட இடத்திலிருந்து தொடரும் நேர்மையான, பாசாங்கற்ற உணர்வு / எண்ணப்பகிர்தல்கள், இருவருக்கும் இடையே நாம் உணரும் Chemistry... அநியாயமாய் இப்படி வாய்ப்புகள் இருந்தும் மிஸ் பண்ணீட்டீங்களே மக்கா என அவர்கள் இருவரும் நமது ஆருயிர் நட்புகள் போல நம்மை உணரவைத்த உண்மையான உரையாடல்கள், உரையாடல் கருப்பொருட்கள், ப்ராக்டிகல் அணுகுமுறை, மெச்சூரிடி, காதல், அன்பு, பேரன்பு...

இந்தக்கதையை, நாயக நாயகியை, இயக்குநரை, ஆங்கிலப்பட உலகம் இன்றும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது!

நம் வாழ்நாளில் நாம் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய உலகப்படங்களின்
பட்டியல்கள் இந்தப்படங்களை சுட்டாமல் முடிந்ததில்லை!

காதலே காதலே தனிப்பெருந்துணையே
கூட வா
கூட வா
போதும் போதும்

காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீ நீ நீ





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்