காகத்துக்கு தாகம்.
கண் சாய்த்து பார்த்தது.
சிறு மட்கலம்,
உடையாத அடியில்
ஒரு மிடறு
மட்டுமே நீர்.
காகத்துக்கு தெரியும்
தாகம் தீர்க்கும்
கதையின் வழி.
வெயில் காய
சூடேறிய கூழாங்கல்
காத்திருக்குது குளிக்க.
காகம் பொறுக்கி
நீரில் விட
மூழ்கி குளித்தது
மகிழ்வாய் கூழாங்கல்.
தன் விசையில்
நகர இயலா
கூழான அக்கல்,
தன் விசையில்
நீருறிஞ்ச இயலாது
தவித்த காகத்தின்
நீர் தூக்கியாய்
நீர் தூக்க
குடித்து குளிர்ந்தது
களைத்த காகம்.
உதவி, உதவும்.
என்றும், எப்போதும்.
யாரும் சொல்லாமலே...
Super imagination . .er. . interpretation!
பதிலளிநீக்குThank You!
பதிலளிநீக்குவிதை எவ்விதமோ சுரை அவ்விதமே :-)