குரல்வளை - என்ன ஒரு அருமையான, செழுமையான சொல்!
குரல்வளைக்கு தமிழ் விக்கிபீடியா என்ன சொல்கிறதென்றால்...
"
குரல்வளை (larynx) என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது.
"
என் தமிழ் என்ன சொல்கிறதென்றால்...
பேச்சு - குரல், அது பதுங்குமிடம், வளை (எலி வளை) போல, அதனாலேயே குரல்வளைக்கு குரல்வளை என பெயர் வந்தது :-)
வளை என்பது பாதுகாப்பான இடம். எலிக்கு மட்டுமல்ல, குரலுக்கும்!
ஏராளமாய் தேவையற்ற சொற்களுக்கு உயிரூட்டும் குரல் அதன் எதிர்வினைகளுக்கு தப்பித்து பதுங்கும் வளையாக குரல்வளை ஆகிப்போனால் அது இதயத்தையும் உடலையும் நோகச்செய்யும் அழி கருவியாகிப்போகும்.
இதை அறவே தவிர்த்து, நல் நம்பிக்கைகளை பரப்ப, உயிரூட்ட குரலை பயன்படுத்தினால் குரல் பதுங்கும் எண்சாண் உடலுக்கும் அதனுள்ளே ஊடாடி நமை இயக்கும் ஏதோ ஒன்றுக்கும் அதுவே மருந்தாகும். அது இருக்கும் இடம் அப்படி (மூளைக்கும் இதயத்துக்கும் மையத்தில் :-)
இந்த புத்தாண்டில் தமிழை புதிதாய் கற்போம். வாழ்வில் நம்பிக்கை பெருக்குவோம். வாருங்கள் :-)
கருத்துகள்
கருத்துரையிடுக