முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீலகண்டனுக்காவது கழுத்திலதான் கண்டம்...

நமக்கு விதையில கண்டம்! ஆண்மை தவறேல்! பெண்மையும் தவறேல்!! We are what we eat. ஆண்மை எனப்படுவது யாதெனின் மலட்டு விதைகளை (hybrid, Bt) உண்ணாமை. பெண்மை எனப்படுவதும் அதுவே! கேக்காதவர் தலைமுறை... பெருக வாய்ப்பில்லை; fertility clinics அதிகமானாலும் உணவு முறையை மாற்றாமல் இனம் பெருக்குவது கடினம். Hybrid விதைகள் மூலம் வளரும் பயிர்களிலிருந்து சேமிக்கும் விதைகள் முளைப்பதில்லை. முளைத்தாலும் குணம் எப்படி இருக்கும் என யாருக்கும் தெரியாது. Bt விதைகள் - உண்டபின் விளைவுகள் என்ன என மெய்யாலுமே யாருக்கும் தெரியாது. "விதையப்பத்திதான பதிவு, நாமதான் விதைகள சாப்பிடறதில்லையே, நமக்கு சிக்கலில்லை" என எண்ணவேண்டாம். நாம் உண்ணும் அனைத்தும் விதைகளே, மதிப்புக்கூட்டப்பட்டோ (அரிசி), அப்படியேவாகவோ (கடுகு, சோம்பு, சீரகம்...). மதிப்புக்கூட்டுதல் - ஆக்சுவலா விதையோட மதிப்ப ஒரேயடியா காயடிச்சி கொறைச்சிட்டு, அத என்னதான் மதிப்பு கூட்டினாலும், போன (விதையின்) ஆண்மை போனதுதான்... பின் குறிப்பு: இயற்கையின் (விதை) தேர்வு வாழ்வு வளர்க்கும். ஆய்வுக்கூடத்தில் தேர்வு செய்யப்பட்...

அம்மா என்றால்...

அம்மா என்றால் ஈர மனது, ஈர விழிகள். மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், கவலை, கோபம்...உணர்வுகள் எதுவானாலும் விழி தளும்பும், கண் சுரப்பிகள் செயல் இழந்த பின்னும். இவரது ஈர விரல்கள் பட்ட... பட்ட மரமும் துளிர்க்கும். மனிதர்கள் மட்டும் ஏனோ இதை உணர்வதில்லை என்ற வேதனை, தளும்பும் மனதில் கூழாங்கற்களாய் மூழ்கிக்கிடக்கும்... எண்ணிக்கையில் பெரிய குடும்பத்தின் குலக்கொடி, அநேக உடன்பிறப்புகளுக்கு மறு தாய், மருந்தாய்... வாழ்வின் முதிர் தினங்களிலும் இன்று வரையிலும் இந்த மருந்து நிற்காது பெருக, மகிழ்வாய் சில, கசப்பாய் பல என உறவுகள்.. கால வெள்ளத்தின் இழுப்புக்கெல்லாம் அசைந்துகொடுக்காத இவரது வாழ்க்கைத்துணை (அம்மாவை விட பெரிய 'மருத்துவர்') பெரிய வரமாய், சாபமாயும் கூட... நெடிய வாழ்வில் காலம் தந்த வேடங்களை, சுமைகளை, பூங்கொத்துக்களை, விருப்பு வெறுப்பின்றி சுமந்துகொண்டு இன்றும் உரையாடிக்கொண்டிருக்கிறார் தன் 'வளர்ப்புகளுடன்'... இவரைப்பற்றி முழுமையாக அறிய இவரது கரங்கள் பட்ட தாவரங்களை மட்டுமே கேட்கவேண்டும், (எனக்குக்கூட முழுதாய் தெரியாது). அவரது வாழ்வின் கதை கேட்டு இவை ம...

பொடியனின் இரட்டை கோபுர கனவு

ஆயிரத்து முன்னூறு அடி உயரத்தில், அந்தரத்தில் காற்றில் ஆடும் கயிற்றில், இரு முனைகளிலும் கைது செய்ய காவலர்கள் காத்திருக்கும் சூழலில், பனிப்புகைமூட்டம் பார்வையை மறைக்க... ஒற்றைக்கம்போடு கயிற்றின் மீது ஒற்றைக்காலில் balance செய்து நிற்க, கயிற்றில் அமர்ந்து ஒய்வெடுக்க...நம்மால் முடியுமா? முடியும் என்கிறார் லெ பெடிட். Audacity of Act, this is! செயல் தைரியத்தின் உச்சம்! அமெரிக்க இரட்டை கோபுரம் இன்று இல்லை. லெ பெடிட் இன்றும் இருக்கிறார். Audacity of Hope, நம்பிக்கை தரும் தைரியம் என்ற புத்தகம் எழுதி ஒபாமா அதிபரானார். Audacity என்ற சொல்லுக்கு தைரியம் என்ற பொருளை நாம் எப்படி வேண்டுமானால் உணரலாம், லெ பெடிட் உணர்ந்த, வெளிப்படுத்திய விதம், அதன் உச்சம்! Flashback: 1960களில் லெ பெடிட் தன் பதின் வயதில், அந்தரத்தில் கயிறு கட்டி நடக்கும் வித்தை பழகும் சிறுவன். France இல் வசிப்பவர். Philippe Petit என்பது முழுப்பெயர். பொடியன் போல சிறிய தேக அமைப்பு அவரது காரணப்பெயராயிற்று. லெ பெடிட் என்றால் பொடியன் என்று பொருள். ஒரு நாள் முடி வெட்டிக்கொள்ள ஒரு சலூனில் காத்திருக்கையில்...

இது வேத சத்தியம்!

காகத்துக்கு தாகம். கண் சாய்த்து பார்த்தது. சிறு மட்கலம், உடையாத அடியில் ஒரு மிடறு  மட்டுமே நீர். காகத்துக்கு தெரியும் தாகம் தீர்க்கும் கதையின் வழி. வெயில் காய சூடேறிய கூழாங்கல் காத்திருக்குது குளிக்க. காகம் பொறுக்கி நீரில் விட மூழ்கி குளித்தது மகிழ்வாய் கூழாங்கல். தன் விசையில் நகர இயலா  கூழான அக்கல், தன் விசையில் நீருறிஞ்ச இயலாது தவித்த காகத்தின் நீர் தூக்கியாய் நீர் தூக்க குடித்து குளிர்ந்தது களைத்த காகம். உதவி, உதவும். என்றும், எப்போதும். யாரும் சொல்லாமலே...

நழுவும் தமிழ் - குரல்வளை!

குரல்வளை - என்ன ஒரு அருமையான, செழுமையான சொல்! குரல்வளைக்கு தமிழ் விக்கிபீடியா என்ன சொல்கிறதென்றால்... " குரல்வளை (larynx) என்பது, பாலூட்டிகளின் கழுத்துப் பகுதியில் காணப்படுகின்ற ஓர் உறுப்பாகும். இது, மூச்சுக் குழலுக்குப் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒலி உருவாக்கத்துக்கும் உதவுகிறது. குரல்வளை குரல் மடிப்புக்களைத் தன்னுள் அடக்கியிருப்பதுடன், தொண்டைக் குழாய், உணவுக் குழாயாகவும் மூச்சுக் குழாயாகவும் பிரியும் இடத்துக்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது. " என் தமிழ் என்ன சொல்கிறதென்றால்... பேச்சு - குரல், அது பதுங்குமிடம், வளை (எலி வளை) போல, அதனாலேயே குரல்வளைக்கு குரல்வளை என பெயர் வந்தது :-) வளை என்பது பாதுகாப்பான இடம். எலிக்கு மட்டுமல்ல, குரலுக்கும்! ஏராளமாய் தேவையற்ற சொற்களுக்கு உயிரூட்டும் குரல் அதன் எதிர்வினைகளுக்கு தப்பித்து பதுங்கும் வளையாக குரல்வளை ஆகிப்போனால் அது இதயத்தையும் உடலையும் நோகச்செய்யும் அழி கருவியாகிப்போகும். இதை அறவே தவிர்த்து, நல் நம்பிக்கைகளை பரப்ப, உயிரூட்ட குரலை பயன்படுத்தினால் குரல் பதுங்கும் எண்சாண் உடலுக்கும் அதனுள்ளே ஊடாடி நமை இய...