முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் விழித்திரையில் : விஸ்வரூபம் III



என் விழித்திரையில் : விஸ்வரூபம் பாகம் 3.

இறந்துபோன ஓமரோட ரெண்டாவது பையன் ஜமால் படிச்சி டாக்டராகி பாகிஸ்தானுக்கே சேவை செய்ய வருகிறான்.

மூத்தவன் என்ஜினியராகி அமெரிக்க விமானப்படைக்கு அதி நவீன தொழில்நுட்பங்கள் செய்து தரும் பணியில் இருக்கிறான்.

இவங்க ரெண்டு பேரையும் யாருக்கும் தெரியாம இயக்குகிற Handler, நம்ம கஷ்மீரி (கமல்). அவரு இப்ப RAW (Research Analysis Wing) ல எல்லாரும் மரியாதையோடும் வியப்போடும் பார்க்கிற செயல் தலைவர்.

இவர்களது இலக்கு பாகிஸ்தான் அபோட்டாபாத்தில் தங்கியிருக்கும் ஷேக்கு (ஒசாமா பின் லாடன்).

டாக்டர் ஓமரின் மகன் என்ற அடையாளத்தால் அல் கொய்தாவில் சுலபமாக முன்னேறி ஷேக்கின் தனி மருத்துவராகிறார்.

இவர் மூலம் கஷ்மீரி காய் நகர்த்தி ஒசாமாவை 'தீர்க்க' நாள் குறிக்கிறார். 

இன்ஜினியர் அண்ணன், பாகிஸ்தான் ரேடாரில் சிக்காத தொழில்நுட்பம் கண்டுபிடித்து அதை பயன்படுத்தி அமெரிக்க விமானப்படை கமாண்டோக்கள் பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் ரகசியமாய் நுழைய, ஷேக்கு சிக்கினாரா இல்லையா? கஷ்மீரியின் எதிர்காலம் என்ன ஆனது?

(கிளைக்கதை:

கஷ்மீரியின் புகழ் ஏற்கனவே ஆசியா முழுதும், ஐரோப்பா முழுதும், உலகம் முழுதும், பரவி, தமிழகத்தில் மட்டும் வேறெந்த நிலப்பரப்பிலும் இல்லாத அளவுக்கு ரசிகர் அமைப்புகள் முளைத்து, நற்பணி மன்றங்களாய் மாறி. அரசியல் அமைப்பாக உருவேறி, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் டாக்டர் காஷ்மீரி' என ஜீர வேகத்தில் இயக்கத்தினர் இருக்கையிலேதான் 'ஆபரேசன் அபோட்டாபாத்'! தமிழகத்தின் தலையெழுத்தையே தீர்மானிக்கப்போகும் ஆபரேசன் இது என்பது ஒசாமாவுக்கு கூட தெரியாத டாப் சீக்ரெட்!!)

ஒசாமாவின் இறுதி நிமிடங்களை கஷ்மீரியின் நண்பரொருவரின் ஐடியாலஜிபடி 'எதிரியின் மரணத்தை நேருக்கு நேர் பார்க்க' கஷ்மீரியும் கமாண்டோக்களுள் ஒருவராய். 

வழக்கம்போல அவரது தலையில் கமாண்டோ வடிவில் ஊடுருவிய தமிழக ஆளுங்கட்சி தலைவர் உருட்டுக்கட்டையால் தாக்க, கஷ்மீரி மயங்கி சாயும் அந்த நொடிகளில் ஃப்ளாஷ்பேக் 'விஸ்வரூபம் 2' ஆக விரிகிறது!

அதில் கஷ்மீரி எப்படி இங்கிலாந்தை தீவிரவாதிகள் உண்டுபண்ண முயலும் சுனாமியிலிருந்து காத்து பின் இந்தியாவை ஓமரின் 64 குண்டுகளில் இருந்தும் காத்து, மனைவியைக்காத்து, ஓமரையும் அவனது அடியாட்களையும் வகை வகையான சண்டை முறைகளை கையாண்டு கொன்று, இறந்து போன தோழிக்காக வருந்தி, ஒமரின் மரண வாக்குமூலம் மூலம் விஸ்வரூபம் 2 ஐ எப்படி Justify செய்கிறார் என அழகான பெண்களுடன்,  இந்திய அளவில் புதிதான (இந்திய திரையுலகை டெக்னிகல் சமாசாரங்களில் அடுத்த தலைமுறைக்கு நகர்த்தும்) மிரட்டும் தொழில்நுட்பத்துடன், பேசிப்பேசியே சாதித்திருக்கிறார்.

காட்சிகளில் புரியவைக்கவேண்டிய கதை முடிச்சுக்களை, ஒரு கதை சொல்லியாக 'தொடர் வர்ணனை' போல சொல்லிக்கொண்டே பணியாற்றும் ஒரு தீவிர பயங்கரவாத ராணுவ உளவாளியை உலகம் இதுவரை கண்டதில்லை!


படம் பார்த்து இருக்கையை விட்டு எழும்போது நான் கவனித்த உரையாடல், பதின்பருவ பையனுக்கும் அவனது தகப்பனுக்குமிடையில்:

'படம் புடிச்சிதாடா?'

"அப்பா, சுத்தமா புரியலப்பா. ஆனா பயமா இருந்ததுப்பா"

'எனக்குந்தான் புரியலடா. ஆனா பழகிட்டதால பயம் போய்டுச்சி!'


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்