ப்ராமின்.
குடித்திருந்தார்.
என்னெதிரில் தள்ளாடி நிமிர்ந்து, என் நண்பரிடம் 'எஸ்க்யூஸ் மி, ஒரு மூனு ரூபா சேஞ்ச் இருக்குமா, பஸ்சுக்கு அஞ்சு வேணும்', விரிந்த அவரது உள்ளங்கையில் 2 ரூபாய் காசு.
என் நண்பர் சுவாரஸ்யமாகி பர்சை எடுத்து கிடைத்த சில்லறையை (7 ரூபாய்) அவர் கையில் தர,
'டோன்ட் மிஸ்டேக் மி. எனக்கு மூனு ரூபாதான் வேணும். உங்க பேரென்ன?'
'முருகன்' என்றார் நண்பர்.
அவரது கரத்தை கெட்டியாய் பற்றி 'முருகன்! சாட்சாத் பழனி முருகனேதான் உங்களை அனுப்பியிருக்கார். மூவேழு இருபத்தொரு ரூபா கொடுங்கோ' என்றார்.
திகைத்த முருகன் சுதாரித்துக்கொண்டு 'எதுக்காக ஸ்பெசிபிக்கா 21 ரூபான்னு தெரிஞ்சிக்க விரும்பறேன்' என்றார் தன் கையை மெல்ல விடுவித்து.
'ஐ கான்ட் ரிவீல் தேட். ஓகே, பை' என அந்த நபர் நகர்ந்து சென்றார்.
'பிராமின்ஸ் எல்லாம்கூட இப்படி...' என்றார் முருகன்.
'பாவம்' என்றார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்.
'இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எதுக்கு பாவம்ங்கிறீங்க?' என்றார் இன்னொரு பெண்.
'அவருக்கு என்ன கஷ்டமோ...' என்றார் மூன்றாவது பெண்.
'பொண்டாட்டி தொல்லை தாங்காமயோ என்னமோ' என ஹாஸ்யத்தை முருகன் முயற்சிக்க, யாரும் ரசிக்காமலே கலைந்து சென்றனர்.
எனக்கு ஆர்வம் குறையவில்லை, 'அது என்ன 21 ரூபாய் கணக்கு?'
அந்த நபர் என் பார்வை தொடும் தூரத்திலேயே நெடுஞ்சாலை ஓரம் நின்றிருப்பது கண்ணில் பட, கவனிக்க ஆரம்பித்தேன்.
'எஸ்க்யூஸ் மி' பஸ்சுக்கு மூனு ரூபாய் இருக்குமா' என யாரிடமோ கேட்டுக்கொண்டிருந்தார்!
ஒரு க்வாட்டர் என்ன விலைங்க? தெரிஞ்சவங்க யாராவது தீத்து வைங்களேன்!
(இன்று இரவோ நாளை காலையோ மதுவில் விலாசம் கரைத்து 'சார், எல்ப் மி. வீட்டுல உடமுடியுமா? வீடு... எங்கன்னு தெரியலங்க' என இவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம்!).
பின் குறிப்பு:
அந்தணர் அநேகர் இருக்கும் ஒரு முகநூல் குழுவில் இதை பதிவேற்றியதிலிருந்து பின்னூட்டங்கள் வெகு சூடாக; வேற வர்ணத்து ஆளு குடிச்சா அவன் ஜாதிய எளுத தகிரியம் இருக்கா? நாங்க என்ன கிள்ளுக்கீரையா? என வெளுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மேட்டுக்குடி என்றால் மனதில் மரியதை வருவது போல் அந்தணர் வர்ணாசமரத்தில் உயர்நிலையில் இருப்பவர், மதுவினால் இப்படி என ஆதங்கத்தில் குறிப்பிட்டேனென பதிந்தும் பலனில்லை. இந்த அடிப்படை சினம் வர்ணத்தால் மாறாது போல...
கருத்துகள்
கருத்துரையிடுக