புகை கக்கும் க்ரெடிட் கார்டு!
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் கழுத்தைத்திருகி, 'மாசு படுத்தாதே! பூமிக்கு உங்கள் ஆலைகளில் பசியினால், கழிவினால் மூச்சு முட்டுகிறது!' என அன்பாய் வேண்ட, இந்த நாடுகள் ஈனஸ்வரத்தில் 'நீங்க வளர்ந்ததும் இப்படித்தானே' என பயந்து கேட்க, 'போனால் போகிறது; எந்த அளவு மாசு சேர்க்கிறீர்களோ அந்த அளவு காடு வளருங்கள். காடுகள் உங்கள் மாசை (கார்பன்) உண்ணும், புவி மகிழும் என சாசனம் எழுதினர்.
சங்கி மங்கி போல அழுவதற்கு கூட ஆள் வைத்திருக்கும் கூட்டமான நாம் (அதாவது, வளரும் நாடுகள்), 'நான் இங்கன எரிக்கறேன். நீ அங்கன ஏற்கனவே காடு வளத்திருக்க இல்லயா, அது சாப்பிடுற கார்பன நான் வெளியேத்தற கார்பன்லந்து கழிச்சிக்கலாம். அதுக்கு காசு தாறேன்' என அதையும் வணிகமாக்க, பிறந்தது, வளர்ந்தது கார்பன் க்ரெடிட் பெருவணிகம்.
சரி, மேட்டருக்கு வருவோம்.
"கலிபோர்னியாவில் 95 ஆயிரம் எக்டேர் காடுகள் காட்டுத்தீயில் பொசுங்கின'
'டாக்காவில் வெள்ளம், ஏராளமான சேதம்'
'இங்கிலாந்தில் வெள்ளம், ஏராளமான சேதம்'
'கேரளாவில் வெள்ளம், நிலச்சரிவு, ஏராளமான சேதம்'
'பீகாரில் வெள்ளம், கோஷி ஆறு வேறு புதிய பாதையில் ஓடத்தொடங்கியது. ஏராளமான சேதம்'
'போர்ச்சுகலில் நெடுஞ்சாலை ஒன்றின் இருபுறமும் காட்டுத்தீ. சாலை வெந்தது. ஏராளமான சேதம்'
'நியூயார்க் நகரில் வரலாறு காணா பனிப்பொழிவு, கடும் சேதம்'
'கேப் டவுனில் குடிக்க தண்ணியில்லை் டூரிஸ்ட்டுகள் வரவேண்டாம். மீறி வந்தா தண்ணியோட வாங்க!'
'என்ன நடக்குது இங்க? இந்த அநியாயத்த தட்டிக்கேக்க யாருமே இல்லையா?' ன்னு எல்லா நாடும் குமுறி இயற்கைய பன்னாட்டு அமைதி கோர்ட்டுக்கு இழுத்தாங்களா, வாய்தா வாங்காம ஒடனே ஆஜரான இயற்கை சொன்னதாம், 'கூட்டி கழிச்சி பாருங்க மக்களே, கணக்கு சரியா வரும். நீங்க கார்பன் எக்ஸ்சேஞ்ச் நடத்துறீங்கோ. ஒங்களுக்கு இதெல்லாம் சுலபமா புரியுமுன்னு நெனச்சேன். நீங்க எல்லாம் "தொலச்சத தொலச்ச எடத்தில மீட்காம" க்ரெடிட்ல ஓட்றீங்கோ. நான் "பாலன்ஸ் ஷீட்" மெய்ண்ட்டெய்ன் பண்றேனோல்லியோ,ஒங்க பாணில நானும் ஒரு எடத்தில எரிச்சி இன்னொரு எடத்தில பனி பெய்ஞ்சி... இப்படித்தான் இருக்கும், நடக்கும்... கூட்டி கழிச்சி பாருங்க. பாத்துட்டு சட்டுபுட்டுன்னு பஞ்சாயத்த கலச்சிட்டு போய் இந்தோனேசியால பூகம்ப உதவி எதுனாச்சும் பண்ணுங்க' ன்னு சொல்லிட்டு போச்சாம்.
அசருவாங்களா நம்ம ஆளுங்க, 'பூகம்ப நிதிக்கு கார்பன் க்ரெடிட் கார்ட உரசலாமா?' அப்டீங்கற தலைப்புல அடுத்த பஞ்சாயத்த ஆரம்பிச்சிட்டானுவோ!
கருத்துகள்
கருத்துரையிடுக