முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீர்ப்பு மணியை காணவில்லை!


"ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் தரும் வேலை கிடைக்கல, தொழில் செய்ய முதலீடு கிடைக்கல. கூட்டுற, கழுவுற, அள்ளுற வேலைக்குதான் நாங்க லாயக்குன்னு இந்த சமூகம் எங்கள எட்ட நிறுத்தி வேடிக்க பாக்குது.

நாங்களும் உங்க மதந்தான், உம்பட சாமிதான் எம்பட சாமியும் என்று இறைஞ்சி ஓய்ந்துவிட்டோம்" என சென்னை புறநகர் பகுதி குரல்.

"ஏகப்பட்ட கடன், நிரந்தர வருவாய் இல்ல, தொழில் முதலீடு சொந்தக்காரனே தரமாட்டேன்றான், நெசவு தொழில விடவேண்டியதாய்டுச்சு அம்பா" என்று மதுரை சௌராஷ்ட்ர குரல்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, குத்தாலம், கும்மோணம், பாண்டி, மேட்டுப்பாளையம், குன்னூர், தோவாளா, விழுப்புரம், கிணத்துக்கடவு...

தமிழகம் தாண்டி எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் இந்தக்குரல், ஒரு உடல் தன் சில உறுப்புகளை ஒதுக்க முயல்வதால் எழும் அவலக்குரல்.



'சில லட்சம் தரோம், பழைய கடன அடைங்க. புதுசா தொழில் செய்யவும் பணம் தாரோம். வேற்றுமைப்படுத்த மாட்டவே மாட்டோம்' என யாரேனும் சொன்னால் இவர்கள் என்ன செய்வார்கள்?

நாம் இவர்களது சூழலில் இருந்தால் என்ன செய்வோம்?

பிதா சுதன் பரிசுத்த ஆவியின் தூதுவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு புது வாழ்வு பெற்றவர்களாய் சர்ச்சுகள் எழுப்பி மரியன்னை நாமம் ஜபித்து, இயேசு அழைக்கிறார் என பொது இடங்களில் நாம் சந்திக்கும் அநேகர் இவ்வாறுதான்.


தலையில் குல்லாய் அணிந்து, மசூதிகளுக்கு சென்று ஐந்து வேளை தொழுது பொது இடங்களில் நம்மை சந்திக்கும்போது 'சலாமலைகும் பாய்' என முகமண் கூறுபவர்களும் இவர்களேதான்.
 

(இவர்கள் நாளை இன்னும் நொடித்துப்போய்... வேறொரு இறையின் தூதுவர்கள் உதவினால் மீண்டும் மீண்டும் மதம் மாறுவார்கள், உறுதியாய்!)

'வேத்து மதத்துக்காரனுங்க, ஆச காட்டி மாத்துறானுவ' என கொதிப்பதில் பயனில்லை. அவர்கள் ரம்பை / மேனகையையோ / ஹீடோனிஸ் எனப்படும் ஆணழகுக்கடவுளையோ காட்டி மயக்கவில்லை... மூன்று வேலை சோறு, ஆறுதலாய் அணைத்துக்கொள்ளும் இரு கரங்கள் காட்டி அழைக்கிறார்கள்.

நம் சக மனிதர்க்கு இந்த அடிப்படைத்தேவைகளை நாம் மறுத்ததால் உண்டான சிக்கல் இது. சிக்கல் வளர்ந்து இன்று மயானத்திற்கு பொதுப்பாதை கிடையாது, குடியிருப்புக்கு தனி 'சுவர்' எல்லை என அடிமைத்தனத்தின் எச்சங்களாய் எங்கெங்கும் சிதறி நாற்றமடித்துக்கொண்டிருக்கிறது.


சரி, வேற்று மதத்துக்காரர்களை சற்றே ஒதுக்கிவிட்டு நம் இந்து மதம் பற்றி பார்ப்போமா?

பரந்த நம் நிலப்பரப்பில் தொல்குடிகள் என நாம் அழைக்கும் காடுகளின் காவலர்கள் எண்ணிக்கை நம் மக்கள் தொகையில் 8.2 விழுக்காடு. அதாவது 11.50 கோடி மனிதர்கள். இவர்களது வாழ்வியல் முறை இயற்கை சார்ந்தது,  நம் இந்து மதம் தோன்றுவதற்கு பன்னெடுங்காலம் முன்னதாகவே வழக்கில் இருந்தது, இன்று வரை வழக்கத்திலும் உள்ளது. இவர்களை இந்து மதத்திற்கு மாற்ற நம் அரசுகள் செய்துவரும் முயற்சிகளை நீங்கள் அறிவீர்களா?

அதற்கு இரு சோறு பதம்:

சோறு ஒன்று:

கேரள தமிழக மாநில எல்லையில் பரந்து விரிந்திருக்கும் அட்டப்பாடி வனப்பகுதியில் இருளர்கள் வசிக்கும் குடியிருப்புகள் பல உள்ளன. கடந்த இருபத்தைந்தாண்டுகளில்  இவர்களது வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், பெருவாரி மக்களது வாழ்வியலில் இவர்களை இணைத்துக்கொள்ளவும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் ஒரு நிறுவனத்தில் பணி செய்த ஒருவர் என்னிடம் பகிர்ந்தது: ' ரோடு வசதி கூட இல்லாத மலைப்பகுதியில் எல்லாம் பயணம் செய்து அவர்களை சந்தித்து அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துச்சொல்லி பலரை படிக்க வைத்து அவர்களது வாழ்வாதரத்தை வெகுவாக முன்னேற்றியிருக்கிறோம். ஒவ்வொரு குடியிருப்புக்கு செல்லும்போதும் தவறாமல் விநாயகர் சிலை ஒன்றை எடுத்துச்சென்று பரிசளிப்போம்...'

செய்தி பகிர்ந்த நண்பர் மத மாற்றங்கள் செய்பவரல்ல என்றாலும் வேற்று வழிபாட்டு மக்களிடம் விநாயகரை கொண்டு சேர்ப்பதை கடமையாக கருதி செய்திருக்கிறார் ('அவர்கள் குடியிருப்புகளில் கோவில் கூட இல்ல சார். அதனால் கொண்டுபோய் கொடுத்தோம்'). பழங்குடியினரின் வழிபாட்டு முறை பற்றிய அவரது அறியாமையே காரணம்.

சோறு இரண்டு: 

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் முதல் சட்டீஷ்கர் மாநிலங்கள் வரை பரவியிருக்கும் பழங்குடியினரின் வழிபாட்டு தலங்களின் அருகில் திடீரென ஒரு அனுமன் கோவில் முளைக்கும். சில காலம் கழிந்து பழங்குடியினரிம் நம் மக்கள் சிலர் 'உங்கள் வழிபாட்டு முறையும் எங்கள் முறையும் ஒன்றுதான். எனவே நீங்களும் இந்துக்கள்தான்' என உரையாடி அவர்களை 'இன்று முதல் நீங்கள் இந்துக்கள்' என அறிவிப்பார்கள். 2024 ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் நம் பழங்குடியினர் இன்று எதிர்கொள்ளும் 'அடையாள இழப்பு தாக்குதல்கள்' பற்றிய ஒரு முழு பக்க செய்தியின் ஒரு பகுதியாக இந்த மத மாற்றம் செய்யும் செய்தி வெளியாகி இருந்தது.


'நாங்கள்லாம் அப்டி இல்ல, எக்ஸ்ப்ளாய்ட்டேஷன்லாம் பண்றதில்ல' என்று உணவகத்தில் / காஃபி பாரில் அமர்ந்து தலையாட்டி மறுக்கிறீர்களா? சற்று தலை நிமிர்ந்து காப்பி கோப்பைகளை எடுப்பவரை, டேபிள் துடைப்பவரை பாருங்கள், அவர் ஒரிசா/பிகார்/அசாமில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்து நம்மிடம் மாட்டிக்கொண்ட அடிமை என்று உணர்ந்தால் மௌனமாவீர்கள். மதத்தின் பெயரால் யார் யாரோ செய்வது தவறு என்று நரம்பு புடைக்க கூவி, பணத்தின் பெயரால் நாம் செய்வதும் தவறுதானே!

நமக்கு தேவை சக மனிதரை வர்ணாசிரம கண்ணாடி வழியே நோக்காமல் சக மனிதராய் மட்டுமே அணுகும் பக்குவம் மற்றும் அவர்களது ஏழ்மையை நம் வருவாயாக கருதாத உயர் எண்ணம்.  

எது நம்மை தடுக்கிறது?

மனுநீதிச்சோழன் ஆண்ட நாட்டில் எந்தப்பசு வந்து தீர்ப்பு மணி அடித்தால் இந்தக்குறை தீரும்?

இன்றையவரையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தவிர ஏனையோர் ஒருவராவது துப்புரவுத்தொழிலில் இருக்கிறார்களா என தெரியவில்லை; அவ்வாறு இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகக்குறைவே.

பேரன்புடன்,
பாபுஜி




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்